வியாழன், 3 செப்டம்பர், 2015

பாலியல் புகாரில் மதபோதகர் கைது


கோத்தகிரி, செப்.1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மத போதகர், கைது செய்யப்பட்டார்.
திருச்சி, லால்குடி பகுதியைச் சேர்ந்த அருள்தாஸ், 40, சில ஆண்டு களுக்கு முன், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் தங்கி, மதபோதனை செய்து வந்தார்.இரு ஆண்டுகளுக்கு முன், கோத்தகிரி வெஸ்ட்புரூக் குண்டாடா பிரிவு பகுதியில் வசிப்பவரின், 15 வயது மகளை தத்தெடுத்து, மேட்டுப்பாளை யம் அழைத்து சென்று, அரசு மேல் நிலைப் பள்ளியில் படிக்க வைத் துள்ளார்.
மாணவியின் தந்தை, மகளை பார்க்க சென்ற போது, 'இரு ஆண்டு களில், பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்ததும்; விஷயம் வெளியில் தெரிந்தால், கொன்று விடுவதாக மிரட்டியதும்' தெரியவந்தது. மாண வியின் தந்தை, கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலை யில், காவல் துறையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஊட்டி அரசு மருத்துவமனையில், மாணவிக்கு நடத்திய பரிசோதனையில், மத போத கர், பாலியல் தொந்தரவு கொடுத் தது உறுதியானது. இதையடுத்து, காவல் துறையினர் அருள்தாசை கைது செய்தனர்.
-விடுதலை,1.9.15