கூடுவாஞ்சேரி, ஏப். 3- கூடுவாஞ்சேரியில், பரிகாரத்திற்கு வந்த பெண்ணிடம், தவறாக நடக்க முயன்று, கொலை முயற்சியில் ஈடுபட்ட சாமியார், கைது செய்யப்பட்டான்.
கூடுவாஞ்சேரி, வள்ளி நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (34). பல்லாவரத்தில், தையலராக பணியாற்றுகிறார். இவர் மனைவி துர்கா தேவி (24). இவர்களுக்கு, 2 வயதில், மகன் உள்ளான். துர்கா தேவிக்கு, அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்பட்டுஉள்ளது. பலவித மருந் துகள் எடுத்தும், பிரச்சினை தீரவில்லை. நந்திவரம், ராணி அண்ணாநகரில் உள்ள அண் ணாமலை (48) என்ற சாமியா ரிடம், அருள்வாக்கு பெற்றால் குணமாகும் என, சிலர் கூறி யுள்ளனர்.
அதன்படி, ஜனவரியில், துர்கா தேவி, அவர் பாட்டியு டன் அண்ணாமலை சாமியாரு டன் சென்றுள்ளார். அப்போது, அண்ணாமலை, துர்கா தேவி யிடம், அத்துமீறியபாலியல் செயல்களில் ஈடுபட்டுள்ளான். அதைத் தடுக்க முயன்ற துர்கா தேவியின் கழுத்தையும் நெரிக்க முயன்று உள்ளான்.
இதை யாரிடமும் கூறி னால், குழந்தையை முடமாக்கி விடுவேன் என, மிரட்டியுள் ளான். இதனால், பயந்த துர்கா தேவி, அங்கிருந்து தப்பி, பாட்டியுடன் வீடு திரும்பினார். இதுகுறித்து, அவர் யாரிடமும் கூறவில்லை. ஆனால், கடந்த சிலநாட்களாக, உடல் மற்றும் மனதளவில், துர்காதேவி அதி கமாக சோர்வுற்றுள்ளார். இரண்டு முறை தற்கொலை முயற்சியி லும் ஈடுபட்டுள்ளார்.
இதையறிந்த அவரது கண வர் சந்தோஷ் குமார், நேற்று முன்தினம், துர்காதேவியிடம் விசாரிக்கையில், சாமியார் அண்ணாமலையின் அட்டூழி யங்களை கூறியுள்ளார். இத னால் ஆத்திரமடைந்த சந்தோஷ் குமார் மற்றும் அப்பகுதிவாசி கள், சாமியாரைப் பிடித்து, கூடு வாஞ்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சந்தோஷ் குமார் புகாரின் அடிப்படை யில், அண்ணாமலையிடம், கூடுவாஞ்சேரி காவல்துறை ஆய்வாளர் ரவிக்குமார் விசா ரணை மேற்கொண்டார்.
விசாரணையில் தெரியவந்த தாவது: சாமியார் அண்ணா மலை, சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்தவன். சில ஆண்டுகளுக்கு முன், நந்திவரம் அரசுப் பள்ளி அருகே,டூவீலர் மெக்கானிக்காக பணி செய்து உள்ளான்.அதிக முடி வளர்த்து, கொண்டை போட்டு வலம் வந்த இவன், பார்ப்பதற்கு சாமியார் போல் தோற்றமளித்துள்ளான்.
இதையே சாதகமாக்கி, தொழிலாகவும் தொடங்கியுள் ளான்.நந்திவரம், ராணி அண் ணாநகரில், ஆசிரமம் போன்ற அமைப்பை உருவாக்கி, அங்கு, அருள்வாக்கு கூறி, பணம் சம் பாதித்துவந்துள்ளான். இந் நிலையில், துர்கா தேவியிடம் அத்துமீறியதால், சிக்கியுள் ளான். இது போல பலரிடம் அவன், தவறாக நடக்க முயன் றதாக காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்டுள்ளான்.
இவ்வாறு காவல்துறையினர் கூறினர். சாமியார் அண் ணாமலை மீது, கொலை முயற்சி மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பிரிவு களின் கீழ், வழக்குப்பதிவு செய்து, அவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்த னர்.
-விடுதலை,3.4.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக