புதன், 28 மார்ச், 2018

கோவில் கருவறையில் அர்ச்சகர் காமக்களியாட்டம்!



பக்தர்கள் தாயாக மதிக்கும் ஆண்டாள் குடி கொண்டுள்ள சிறீவில்லிபுத்தூர் கோவில் கருவறையில் நடந்த காமலீலைதான் சமீபத்தில் ரகசியமாக நடந்த கூட்டத்தின் சப்ஜெக்ட்.

பூணூல் போட்டுக்கிட்டு என்ன வேலை பண்ணிருக்கான்? அவனை சும்மா விடக்கூடாது. ஒரு கையையாச்சும் வெட்டினால்தான் அடுத்து எந்த பொம்பள மேலயும் கைவைக்க மாட்டான் என்று ஆவேசம் காட்டியபோது, சொந்த பந்தங்கள், இவளுக்கு புருஷன், புள்ளகுட்டின்னு ஒரு குடும்பம் இருக்கு. அவனை ஏதாச்சும் பண்ணிட்டா, இவ அசிங்கப்பட்டு தெருவுல நிற்கணும். தேவையா இது? பிரச்சனைய இத்தோடு விட்ருங்க என்று வேகத்தை தணித்துவிட்டனர்.

இந்தக் கசமுசா விவகாரம் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, பல லட்சங்களை இறைத்திருக்கிறார்கள். சிறீவில்லிபுத்தூரில் சமூக ஆர்வலர் ஒருவர் கொதித்துப்போய்ச் சொன்ன இந்த விவகாரத்தை உறுதி செய்த அரசியல் பிரமுகரான தேரடி மாரியப்பன், சாமியை நம்பாதவன்கூட கோவிலை மதிப்பான். வாழ்க்கை , வசதின்னு எல்லாத்தையும் இவங்களுக்கு அள்ளிக் கொடுக்கிற அந்தக் கோவில்லயே தப்பு பண்ணுறத எப்படி பொறுத்துக்க முடியும்? என்றார் குமுறலுடன்.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பெண்கள் சிலரோடு உல்லாசமாக இருந்து, அதை தன் செல்போனில் ரகசியமாகப் படம் பிடித்து ரசித்து வந்த அர்ச்சகர் தேவநாதன், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே வழக்கில் சிக்கினார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், சிறீவில்லிபுத்தூரிலும் கோவில் கருவறையில், தேவநாதன் பாணியிலேயே லீலைகள் புரிந்திருக்கிறார் பத்ரி நாராயணன் என்ற பட்டாச்சாரியார். பக்தியை முன்னிறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய ராமராஜ்ஜிய ரத யாத்திரை, தமிழகத்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்த வேளையில், இந்த விவகாரம் அம்பலமாகிவிடக் கூடாது என்று ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார்கள். அனைத் தையும் மீறி, கோவில் கருவறை ரகசியங்களுக்குள் நாம் ஊடுருவினோம்.

பலான வீடியோவில் பத்ரி

சிறீவில்லிபுத்தூரில் சிறீ ஆண்டாள் கோவில், வடபத்ரசாயி கோவில், தென் திருப்பதி என்றழைக்கப் படும் திருவண்ணாமலை - சிறீநிவாச பெருமாள் கோவில் ஆகிய மூன்று வைணவ கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்களில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பண்ணையார் பட்டர் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பரம்பரை பரம்பரையாக, முறைமை வைத்து, மூலவர் இருக்கும் கருவறையில் தீபாராதனை காட்டி, பூஜைகள் செய்து, பக்தர்களிடம் தட்டுக் காணிக்கை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவர்தான் பட்டாச்சாரியர் பத்ரி நாராயணன்.

சிறீவில்லிபுத்தூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில், திருவண்ணாமலையில் உள்ள மலைக்கோவிலான சிறீநிவாச பெருமாள் கோவிலில், பிரகாரம், உண்டியல் காணிக்கை செலுத்துமிடம், நகை அறை மற்றும் கருவறை ஆகிய 4 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறீஆண்டாள் கோவில் உட்பட சிறீநிவாச பெருமாள் கோவிலிலும் பட்டாச் சாரியராக இருந்து வருகிறார் பத்ரி. இவர் தான், சிறீநிவாச பெருமாள் கோவில் கருவறைக்குள் பெண் பக்தைகளை அழைத்துச் சென்று, பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்.



ஆண்டாள் கோவில் அருகிலுள்ள பத்ரியின் வீட்டுக்குச் சென்றோம். பத்ரி ஊரிலேயே இல்லை என்றார்கள் எரிச்சலுடன். அவரது கைபேசி எண்ணுக்கு டயல் செய்தோம்; குறுந்தகவல் அனுப் பினோம். ரெஸ் பான்ஸ் இல்லை. பத்ரிக்கு எதிரான வீடியோ ஆதாரங் களைக் கையில் வைத்துக்கொண்டு, பணம் பறிக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டதால், பத்ரி தலைமறைவாகி விட்டார் என்று தகவல் சொன் னார்கள் ஆண்டாள் கோவில் வட்டாரத்தில்.

சிறீஆண்டாள் கோவில் அலுவலகத்தில் செயல் அலுவலர் நாகராஜனை சந்தித்தோம். இது அஃபிசியல் மேட்டர். வெளியில் சொல்ல முடியாது என்று முதலில் தயங்கியவர், பிறகு இது வெளியில் தெரிந்தால் கோவிலுக்குத்தான் கெட்டபெயர். யார், யாரோ அவனை மிரட்டி பணம் வாங்கியிருக்கிறார்கள். அதனால்தான், மூன்று நாட்கள் வரை அவன் செய்த குற்றம் வெளியில் தெரியவில்லை. தக்கார் ரவிச் சந்திரன் வரைக்கும் தகவல் போனது. தக்கார் சொன் னதன் பேரில், சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தோம். பத்ரியைக் கூப்பிட்டு சத்தம் போட்டோம். அவனிடம் கருவறையில் ஒரு பெண்ணிடம்? என்று விசாரித்த போது பிரசாதம் கொடுத்தேன்... என்று மழுப்பினான். அவனை அடிக்காத குறைதான். மற்றபடி, உடனடியாக நடவடிக்கை எடுத்து வெளியேற்றிவிட்டோம். பத்ரி கோவில் ஊழியரும் கிடையாது: அரசு ஊழியரும் கிடையாது. பூர்வீகமாக முறை வைத்து பூஜை பண்ணுபவர். ஆனாலும், கோவில் கருவறையில் இழிவான செயலில் ஈடுபட்டவரை கோவிலில் வைத்திருக்க முடியாது அல்லவா? அதனால்தான், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அவனும் ஊரைவிட்டே ஓடிட்டான், என்றார்.

மிரட்டிய பின்னணி சி.சி.டி.வி. கேமரா இருந்தும், சிறீநிவாச பெருமாள் கோவிலுக்கு தனியாக வரும் பெண் பக்தைகளை நிதானமாக நோட்டம் விட்டு, கருவறைக்குள் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான் பத்ரி. கோவிலுக்கு வரும் மூன்று பெண் பக்தைகளிடம் பத்ரி தொடர்பு வைத்திருந்தது , நட்பு வட்டத்தில் உள்ள ஒரு வனுக்குத் தெரிந்து விட, நீ மட்டுமே அனுபவித்தால் எப்படி? கருவறைக்குள் நானும் வருவேன்; உன் வலையில் சிக்கிய பெண்களை எனக்கும் கொடு. இல்லையென்றால், உன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டியிருக் கிறான். பரிகாரம் பண்ணுவதாகச் சொல்லி 5 பக்தர்களிடம் கல்லா கட்டி, செல்வச் செழிப்போடு வாழ்ந்து வருபவன் என்பதால், கை நிறைய பணத்தைக் கொடுத்து நண்பனைச் சரிக்கட்ட முயற்சித்திருக்கிறான் பத்ரி. அவனோ பத்ரியிடம் முரண்டு பிடித்திருக்கிறான். தனது ஆசையை நிறைவேற்றி வைக்கவில்லை என்ற கோபத்தில் ஒருகட்டத்தில் கருவறையில் பத்ரி ஒரு பெண்ணுடன் இருந்த இரண்டரை மணி நேர சி.சி.டி.வி. ஃபுட்டேஜை கைப்பற்றி, பிளாக்மெயில் செய்திருக் கிறான். இதே ரீதியிலான பிளாக் மெயிலில் வேறு சிலரும் ஈடுபட, விவகாரம் கோவில் நிர்வாகம் வரை போய், விசாரணை நடந்து, பத்ரியை வெளியேற்றிவிட்டனர்.

சிறீ ஆண்டாள் கோவில் நிர்வாகமே அந்த சிசிடிவி பதிவை முற்றிலுமாக அழித்து, பத்ரியின் குற்றச் செயலை மறைத்து விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து புகார் எதுவும் வராததால், சட்ட நடவடிக்கை குறித்த அச்சமின்றி, ஜாலியாக எங்கெங்கோ சுற்றித் திரிகிறானாம் பத்ரி.

தனியாக கோவிலுக்குச் செல்லும் பெண்கள் ஜாக்கிரதை! என, தமிழ்நாட்டில் போர்டு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்று, நம்மிடம் சீரியஸாகப் பேசினார், பத்ரி விவகாரத்தை நன்கறிந்த உள்ளூர் வழக்கறிஞர் ஒருவர்!

- சி. என். இராமகிருஷ்ணன்

நன்றி:  நக்கீரன் -மார்ச் 27-29

- விடுதலை நாளேடு, 28.3.18

வெள்ளி, 23 மார்ச், 2018

தோஷம் நீக்குவதாகக் கூறி பணம் மோசடி செய்த சாமியார் கைது



விருகம்பாக்கம்,மார்ச்23தோஷம் நீக்குவதாகக் கூறி, பொதுமக்களி டம் பணம் மோசடி செய்த  சாமியாரை, காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை, விருகம்பாக்கம் சாய் நகரைச் சேர்ந்தவர், ரகுராஜ், 76. இவரது மனைவி மங்களம், 70.

இவர்களது வீட்டிற்கு, 15 ஆம் தேதி வந்த, நான்கு பேர், தங்களை பிரபல சாமியார் மற் றும் சீடர்கள் என, அறிமுகம் செய்து கொண்டனர். பின், 'இந்த வீட்டில் வசிப் போருக்கு தோஷம் உள்ளது. அதற்கான நிவர்த்தி பூஜை செய்தால், தோஷம் நீங்கி, நீண்ட ஆயுள் கிடைக்கும்' என, கூறியுள்ளனர்.

'தோஷம் நீக்கும் பரிகார பூஜைக்கு, 95 ஆயிரம் ரூபாய் செலவாகும். பூஜை பொருட்கள் வாங்க, 5,000 ரூபாய் முன் பணம் தர வேண்டும்' என்றும், அவர்கள்தெரிவித்தனர்.இதை நம்பிய ரகுராஜ், அந்த கும்பலிடம், 5,000 ரூபாய் கொடுத்தார். அவர்களும், பூஜை பொருட்கள் வாங்கி வருவதாகக் கூறிச் சென்றனர். ஆனால், வெகு நேரமாகியும் அவர்கள் திரும்பவில்லை. இதையடுத்து, வந்தவர்களால் ஏமாற்றப்பட்டதை ரகுராஜ் உணர்ந்துள்ளார்.

கேமரா பதிவு ஆய்வு

இது குறித்த புகாரின்படி, வழக்கு பதிந்த விருகம்பாக்கம் காவல்துறையினர், அப்பகுதி யில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய் தனர். இதில்,சாமியார் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. அவர்கள் பயன்படுத் திய காரின் பதிவு எண் மூலம் விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, விருகம் பாக்கம்நடேசன்நகரில்,காவல் துறையினர் வாகன சோதனை யில் ஈடுபட்டபோது, அவ் வழியே வந்த காரை மடக்கி விசாரித்தனர். அதில், அந்த கார், சாமி யார் கும்பல் பயன்படுத்திய கார் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர், காரில்வந்தஇருவரையும், காவல் நிலையத்திற்கு அழைத்துசென்றனர்.அவர் களிடம் விசாரித்ததில், திருவண் ணாமலை மாவட்டம், போளூ ரைச் சேர்ந்த பிரகாஷ், 52, மற்றும் கார் ஓட்டுனர், ராஜேந்திரன், 36, என்பது தெரியவந்தது. மேலும், சாமியார் போல் தாடி வளர்த்துள்ள பிரகாஷ், ருத்திராட்சை மாலை மற்றும் காவி உடை அணிந்து, தனியாக வசிக்கும் முதியோரிடம், தோஷ பரிகாரம் செய்வதாக பண மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர், காரை பறிமுதல் செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள  சாமியாரின் கூட்டாளி களான, திருக்கோவிலூரைச் சேர்ந்த கருணாநிதி மற்றும் முருகன் ஆகியோரை, தேடி வருகின்றனர்.
- விடுதலை நாளேடு, 23.3.18