வியாழன், 29 நவம்பர், 2018

பாலியல் வழக்கு: தென்கொரியாவில் பாதிரியாருக்கு 15 ஆண்டு சிறைசியோல், நவ. 26- தென் கொரி யாவின் தலைநகர் சியோலில், மேமின் மத்திய தேவாலயம் என்ற பெயரில் மிகப்பெரிய கிறித்தவ ஆலயத்தை நடத்தி வந்தவர் பாதிரியார் லீ ஜே ராக் (வயது 75).

1982-ஆம் ஆண்டு வெறும் 12 பேருடன் ஆரம்பித்த இந்த தேவாலயத்தில் இப்போது 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் உறுப் பினர்களாக இருக்கிறார்கள்.

அந்த ஆலயத்தின் உறுப்பி னர்களாக உள்ள 3 பெண்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்களை பாதிரியார் லீ, தனது அடுக்கு மாடி குடியிருப்பு வீட் டுக்கு அழைத்து, வலுக்கட்டா யமாக பாலியல் வன்முறை செய்து விட்டார் என புகார் செய்தனர்.

அவர்களில் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அவர் அரசரை விட மேலா னவர். அதனால்தான் அவர் கேட்டதை என்னால் மறுக்க முடியவில்லை என்று கூறினார்.

இந்த 3 பெண்களைப் போன்று மேலும் 5 பெண்கள், பாதிரியார் லீ மீது காவல்துறை யில் பாலியல் புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து அவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட் டார். அவர் தன் மீதான பாலியல் புகார்களை மறுத்தார்.

இருப்பினும் அவர் மீது சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்படி வழக்கு விசாரணை நடைபெற் றது. விசாரணையில், அவர் தனது ஆலயத்தில் உறுப்பினர் களாக உள்ள பெண்களை நீண்ட காலமாக பாலியல் வன் முறை செய்து வந்திருப்பது அம்பலமானது. இதையடுத்து அவர் குற்றவாளி என கருதி 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சுங் மூன் சங் தீர்ப்பு அளித்தார்.

-  விடுதலை நாளேடு, 26.11.18

திங்கள், 12 நவம்பர், 2018

சிறைக்குப் படை எடுக்கும் சாமியார்கள்பாலியல் வன்முறை மற்றும் இயற்கைக்கு மாறாக உறவுகொண்டது உள்ளிட்ட குற்றங்களின்கீழ் சாமியார் தாதி என்பவர்மீது மத்திய புலனாய்வு விசாரணைக் குழு விசாரணை செய்ய டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாமியார் தாதியின் பாலியல் வன்முறை யால் பாதிக்கப்பட்ட 25 வயது பெண் ஒருவர் தெற்கு டில்லி ஃபதேபுர்பேரி காவல்நிலை யத்தில் 7.6.2018 அன்று புகார் கொடுத்தார். சாமியாருடன் உள்ள பெண் ஒருவர் தம்மை கட்டாயப்படுத்தி சாமியாரின் அறைக்குள் தள்ளிவிட்டதாகவும், சாமியார் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகவும் காவல்நிலையத்தில் அப்பெண் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார். சாமியாரின் சீடராக பத்து ஆண்டு களுக்கும் மேலாக இருந்த அப்பெண்ணுடன் மற்ற இருவரையும் சேர்த்து அவர்களின் சொந்த மாநிலமாகிய ராஜஸ்தானுக்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.

சாமியாரின் கட்டாயத்தின்பேரில் அவ ரது இச்சைக்கு உடன்படாத பெண்ணிடம், இங்குள்ள அனைத்து பெண்களுமே என்னுடன் படுத்தவர்கள்தான் என்று ஆணவத்துடன் கூறினாராம்.

சாமியார்மீது அப்பெண் அளித்த புகாரின்பேரில் 22.6.2018 அன்று தாதி மண்டல் எனப்படும் ஆசிரமத்தில் சாமி யார் தாதியிடம் டில்லி காவல்துறையினர் விசாரணை செய்தார்கள். அதன்பின்னர் வழக்குப் பதிவு செய்தார்கள்.

அதன்பின்னர், விசாரண செய்த பெண் அலுவலர் உள்ளிட்ட காவல்துறை அலு வலர்களைக் கொண்ட விசாரணைக் குழுவினர் ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியிலுள்ள இதே சாமியாரின் ஆசிர மத்துக்கும் சென்று விசாரணை நடத்தினர். சாமியாருக்கு எதிரான ஆதாரங்களைக் கைப்பற்ற சென்றார்கள். ஆனால், சாமி யார் அங்கிருந்தும் தலைமறைவாகி விட்டார். அதனால், தேடப்படும் குற்றவாளி கள் பட்டியலில் சாமியாரின் பெயரை காவல்துறையினர் வெளியிட்டனர். சாமியார் தாதி மண்டலை விட்டு வெளி யேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டில்லி காவல்துறையினரின் விசாரணை தீவிரமாக இல்லை என்று குறிப்பிட்டு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவில் மனுதாரர் கூறுகையில், ஏராளமான அரசி யல்வாதிகள், மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் சானிதம் ஆசிரமத்துக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்கள். ஆகவே, முறையான விசாரணை நடைபெறுவதை காவல்துறையின் குற்றப்பிரிவால் உறுதிப் படுத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் டில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு சாமியார்மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு (11.6.2018) மூன்று மாதங்களுக்குப் பின்னர் காவல்துறையினர் சாமியார் மீதான பாலியல் வன்முறை வழக்கின் குற்றப்பத்திரி கையை அளித்தனர்.

டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோரைக்கொண்ட அமர்வில் நடை பெற்ற வழக்கு விசாரணையில், இவ்வழக் கின் புலனாய்வு விசாரணையை மனுதார ரின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய புலனாய்வுக்குழுவின் (சிபிஅய்) விசார ணைக்கு உத்தரவிடப்பட்டது.

-  விடுதலை நாளேடு, 5.11.18

பெண்களை பாலியல் வன்முறை செய்த சாமியார் சதுர்வேதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

சென்னை நவ.11 பெண்களை பாலியல் வன்முறை செய்த வழக்கில் சிக்கிய சாமியாரை, தேடப்படும் குற்றவாளியாக, தமிழக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

சென்னை, தியாகராயர் நகர் பசுல்லா சாலையை சேர்ந்தவன், பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதி (வயது 46) சாமியார் என, அறிவித்து கொண்ட இவன், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துவது மற்றும்  அதே பகுதியில், ஆசிரமும் நடத்தி வந்தான். அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்களையும் நடத்தினான். தன் வசீகர பேச்சால், பெண்களை மயக்குவதிலும் கில்லாடி.சதுர்வேதியின் சொற்பொழிவை கேட்க, 2002 அக்டோபரில், சென்னை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே.சாலையைச் சேர்ந்த, தொழிலதிபர் ஒருவரின் மனைவியும், அவரது, 16 வயது மகளும், அடிக்கடி சென்றனர்.

அதை பயன்படுத்தி, இருவரையும், சதுர்வேதி, தன் பிடியில் கொண்டு வந்தான். இதனால், அவன் ஆட்டி வைக்கும் கைப் பாவையாக மாறினர். இருவரும், அவ்வப்போது, சதுர்வேதியின் ஆசிரமத்திலேயே தங்கினர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சாமியார் சதுர்வேதி, தாய் மற்றும் மகளை, பல முறை பாலியல் வன்முறை செய்துள்ளான்.அவர்களை பகடை காயாக பயன்படுத்தி, பல கோடி ரூபாய் மதிப்பு உள்ள, தொழிலதிபர் வீட்டின் கீழ் தளத்தை, அறக்கட்டளைக்கு என, எழுதி வாங்கி உள்ளான். அந்த வீட்டில், தன் ஆசிரம உதவியாளர்களை குடியமர்த்தி, தொல்லை கொடுத்து உள்ளான்.

அவனது உண்மை முகம் தெரிய வந்ததும், தாயும், மகளும் விலகினர். அதனால், ஆத்திரம் அடைந்த சதுர்வேதி, தன் ஆசிரம உதவியாளர்கள் உதவியுடன், 2004 செப்., 17இல், ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்த, தொழிலதிபர் மனைவி மற்றும் மகளை, ஆந்திராவுக்கு கடத்திச் சென்று, பாலியல் சித்ரவதை செய்துள்ளான்.இதுகுறித்து, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், தொழிலதிபர் புகார் அளித்தார்.

மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரித்து, 2004 நவ., 6இல், சதுர்வேதியை கைது செய்தனர். அவனது பிடியில் இருந்த, இருவரையும் மீட்டனர்.

இந்த வழக்கு, சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் ஆஜராகாமல், 2016 நவ., 3இல் இருந்து, சதுர்வேதி தலைமறைவாகி உள்ளான். அவனை, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து உள்ளனர்.

அவன், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கும், லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இருப்பினும், காவல்துறையை ஏமாற்றி விட்டு, அவன், நேபாளம் பறந்து விட்டதாக தெரிகிறது.

- விடுதலை நாளேடு, 11.11.18

ஞாயிறு, 4 நவம்பர், 2018

ஆயுள் தண்டனை பெற்ற இந்த சாமியார் யார்?‘சாமியார் ராம்பால்’ பல பெண்களை பாலியல்வன் கொடுமை செய்ததாகவும், அதில் சில பெண்களை கொலை செய்ததா கவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த அரியானா, பஞ்சாப் உயர்நீதிமன்றம் சாமியாருக்கும் அவரது கூட்டாளிகள் 14 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

அரியானா மாநிலம் இசார் மாவட் டத்தின் தலைநகரில் 300 ஏக்கர் நிலப் பரப்பில் பிரமாண்டமான கோட்டைகளைக் கட்டி ஆசிரமம் ஒன்றை நிர்மானித்து நடத்திவந்தவர் சாமியார் ராம்பால். இவரது ஆசிரமத்தின் பெயர் ‘சாத்லோக்’ அதாவது ஏழு உலகமும் அங்கு உள்ளதாக கூறி வந்தார். இந்த ஆசிரமத்திற்குள் ஒரு நாட் டையே உருவாக்கி அதற்கு ராணுவத்தை யும் உருவாக்கி இருந்தார். அங்கு செல்ப வர்கள் பொருட்கள் வாங்க சாமியார் உருவம் பொறித்த வில்லைகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும். இவருக்கு அரி யானா மற்றும் டில்லியில் உள்ள ஆட்சி யாளர்களில் முக்கியமானவர்கள் பக்தர் களாக இருந்தனர். இவருக்கும் அரியானா, சென்னை, டில்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் நாடு முழுவதும் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது.

2006-ஆம் ஆண்டு இவர் தங்களது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக இரண்டு பேர் புகார் அளித்தனர். முதலில் டில்லி மித்தாபூரைச் சேர்ந்த ஷிவ்பால் என்பவர் தனது மனைவியை ராம்பால் கொன்றதாக புகார் அளித்தார். இரண்டாவது உ.பி.யில் உள்ள லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜாக்ஹோரா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் குற்றம்சாட்டினார். ஆனால் இந்தக் புகாரின் மீது அரியானா காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் அரியானாவில் உள்ள ஜிந்த் என்ற இடத்தில் உள்ள விவசாய நிலத்தை இவர் அபகரித்துகொண்டதாக மக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப்போராட்டத்தை ஒடுக்க தனது அடியாட்களை ஏவிவிட்டார். அந்த அடியாட்களில் தாக்குதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த விவகாரம் பெரிதான பிறகு 2014-ஆம் ஆண்டு நீதிமன்ற வற்புறுத்தலின் பேரில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து இவரைக் கைதுசெய்ய காவல்துறையினர் இவரது ஆசிரமத்திற் குள் நுழைய முற்பட்டனர். அப்போது ஆசிரமத்திற்கு உள்ளே இருந்து தாக்கு தல்கள் தொடர்ந்தது, இதனை அடுத்து துறை ராணுவம் வரவழைக்கப்பட்டது, 700-வீரர்களைக் கொண்டு துணை ராணு வம் ஆசிரமத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போது, அங்கு துப்பாக்கிகளும் மற்றும் எரிவாயு சிலிண் டரை வெடிகுண்டுகளாக பயன்படுத்த தயார் நிலையில் இருந்த 100க்கும் மேற்பட்டோரை அதிரடியாக கைது செய்தனர்.  சாமியாரின் ஆதரவாளர்கள் நடத்திய ஆயுதத்தாக்குதலில் ஒரு உதவி காவல் ஆய்வாளர்கள் 7 காவல்துறை யினர் மரணமடைந்தனர். அதன் பிறகு ஆசிரமத்தின் அனைத்து பகுதிகளும் சோதனையிடப்பட்டது, சாமியார் ராம்பா லின் இருப்பிடத்தில் பல ரகசிய அறைகள் மற்றும் ஆணுறைகள், கருத்தடை மாத்தி ரைகள் கைப்பற்றப்பட்டன. கூட்டத்தோடு கூட்டமாக வெளியேற முயன்ற சாமியார் ராம்பாலும் கைதுசெய்யப்பட்டார்.

இவர் மீது ஊர்மக்களை கொலை செய்தவழக்குடன் சேர்ந்து ஏற்கெனவே இரண்டு பெண்களைக் கொலைசெய்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப் பட்டது.

இதில் பெண்களைக் கொலைசெய்தது தொடர்பாக நடந்த வழக்கின் விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த 2 வழக்குகளில் சாமியார் ராம்பால் மற்றும் அவரது சீடர்களும்  குற்றவாளி என நீதி மன்றம் தீர்ப்பு கூறிய நிலையில், தற்போது ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில் சாமியார் ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 14 பேருக்கு பிரிவு 302, 343 மற்றும் 120பி கீழ் தண்டிக்கப்படு வதாக கூறி ஆயுள் தண்டனையுடன் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தர விட்டது.

சாதாரண விவசாயக்கூலியாக இருந்த சாமியார் ராம்பால் பிறகு வருமானவரித் துறை அலுவலத்தில் பணிபுரிந்து பிறகு தனது கனவில் கிருஷ்ணன் வந்து இனி உன்னுள் நான் இருக்கிறேன் என்று கூறிய தால் இவர் தன்னை கடவுளாக அறிவித்துக் கொண்டாராம்.

- விடுதலை ஞாயிறு மலர், 20.10.18

சனி, 3 நவம்பர், 2018

செய்யூர்:  பேய் விரட்டுவதாகக் கூறி பெண்ணுக்கு  சாமியார் பாலியல் தொல்லை

சென்னை, நவ.2 பேய் பிடித்திருப்பதாகக் கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த  சாமியார் தப்பியோடி விட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அடுத்த ஓதியூர் கிராமத்தைச் சேரந்தவர் ஜெயசீலன். இவரது மகன் சிறீதர் (40). இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தான் சாமியாராக மாறிவிட்டதாகச் சொல்லி  சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குறி சொல்லி  ஏமாற்றி வந்துள்ளார். இதனால் அவரிடம் குறி கேட்க தினமும் செய்யூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் வந்து சென்றனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு  மேகநாதனின் மனைவி கற்பக வள்ளி (34) என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சாமியார்  தங்கள் வீட்டுக்கு அழைத்துச் வந்துள்ளனர். கற்பகவள்ளியை தனியறைக்கு சாமியார் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இவருக்கு வேப்பிலை அடித்தால் போதாது. இவர்மீது பேய் பிடித்திருக்கிறது. அதற்கு சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என  கதவை பூட்டியதாக தெரிகிறது. பின்னர் கற்பகவள்ளிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

திடீரென அறையில் இருந்து கற்பகவள்ளி சத்தம் போட்டுக் கொண்டே கதவை திறந்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார். இதனால் பயந்துபோன சாமியார் சிறீதர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.  இது குறித்து கற்பகவள்ளி சொல்லி அழுதுள்ளார்.

தலைமறைவாக உள்ள சாமியார் தரப்பிலிருந்து இப்பிரச்சி னையைப் பெரிதாக்க வேண்டாம் என மிரட்டியதாகக் கூறப்படு கிறது. இதுகுறித்து செய்யூர் காவல் நிலையத்தில் கற்பகவள்ளி அளித்த  புகாரின்படி காவல்துறையினர் 244 ஆவது பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சாமியாரை  தேடி வருகின்றனர்.

- விடுதலை நாளேடு, 2.11.18