சென்னை, நவ.2 பேய் பிடித்திருப்பதாகக் கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் தப்பியோடி விட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அடுத்த ஓதியூர் கிராமத்தைச் சேரந்தவர் ஜெயசீலன். இவரது மகன் சிறீதர் (40). இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தான் சாமியாராக மாறிவிட்டதாகச் சொல்லி சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குறி சொல்லி ஏமாற்றி வந்துள்ளார். இதனால் அவரிடம் குறி கேட்க தினமும் செய்யூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் வந்து சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேகநாதனின் மனைவி கற்பக வள்ளி (34) என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சாமியார் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் வந்துள்ளனர். கற்பகவள்ளியை தனியறைக்கு சாமியார் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இவருக்கு வேப்பிலை அடித்தால் போதாது. இவர்மீது பேய் பிடித்திருக்கிறது. அதற்கு சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என கதவை பூட்டியதாக தெரிகிறது. பின்னர் கற்பகவள்ளிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
திடீரென அறையில் இருந்து கற்பகவள்ளி சத்தம் போட்டுக் கொண்டே கதவை திறந்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார். இதனால் பயந்துபோன சாமியார் சிறீதர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இது குறித்து கற்பகவள்ளி சொல்லி அழுதுள்ளார்.
தலைமறைவாக உள்ள சாமியார் தரப்பிலிருந்து இப்பிரச்சி னையைப் பெரிதாக்க வேண்டாம் என மிரட்டியதாகக் கூறப்படு கிறது. இதுகுறித்து செய்யூர் காவல் நிலையத்தில் கற்பகவள்ளி அளித்த புகாரின்படி காவல்துறையினர் 244 ஆவது பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சாமியாரை தேடி வருகின்றனர்.
- விடுதலை நாளேடு, 2.11.18
nano titanium - Titanium Art - www.titanium-arts.com
பதிலளிநீக்குThe titanium dioxide formula nano titanium titanium post earrings project focuses on building a multi-dimensional multi-dimensional babyliss pro nano titanium straightener The nano titanium man titanium bracelet project chi titanium flat irons consists of a design for the "Sega Genesis Mini",