ஞாயிறு, 4 நவம்பர், 2018

ஆயுள் தண்டனை பெற்ற இந்த சாமியார் யார்?



‘சாமியார் ராம்பால்’ பல பெண்களை பாலியல்வன் கொடுமை செய்ததாகவும், அதில் சில பெண்களை கொலை செய்ததா கவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த அரியானா, பஞ்சாப் உயர்நீதிமன்றம் சாமியாருக்கும் அவரது கூட்டாளிகள் 14 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

அரியானா மாநிலம் இசார் மாவட் டத்தின் தலைநகரில் 300 ஏக்கர் நிலப் பரப்பில் பிரமாண்டமான கோட்டைகளைக் கட்டி ஆசிரமம் ஒன்றை நிர்மானித்து நடத்திவந்தவர் சாமியார் ராம்பால். இவரது ஆசிரமத்தின் பெயர் ‘சாத்லோக்’ அதாவது ஏழு உலகமும் அங்கு உள்ளதாக கூறி வந்தார். இந்த ஆசிரமத்திற்குள் ஒரு நாட் டையே உருவாக்கி அதற்கு ராணுவத்தை யும் உருவாக்கி இருந்தார். அங்கு செல்ப வர்கள் பொருட்கள் வாங்க சாமியார் உருவம் பொறித்த வில்லைகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும். இவருக்கு அரி யானா மற்றும் டில்லியில் உள்ள ஆட்சி யாளர்களில் முக்கியமானவர்கள் பக்தர் களாக இருந்தனர். இவருக்கும் அரியானா, சென்னை, டில்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் நாடு முழுவதும் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது.

2006-ஆம் ஆண்டு இவர் தங்களது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக இரண்டு பேர் புகார் அளித்தனர். முதலில் டில்லி மித்தாபூரைச் சேர்ந்த ஷிவ்பால் என்பவர் தனது மனைவியை ராம்பால் கொன்றதாக புகார் அளித்தார். இரண்டாவது உ.பி.யில் உள்ள லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜாக்ஹோரா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் குற்றம்சாட்டினார். ஆனால் இந்தக் புகாரின் மீது அரியானா காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் அரியானாவில் உள்ள ஜிந்த் என்ற இடத்தில் உள்ள விவசாய நிலத்தை இவர் அபகரித்துகொண்டதாக மக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப்போராட்டத்தை ஒடுக்க தனது அடியாட்களை ஏவிவிட்டார். அந்த அடியாட்களில் தாக்குதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த விவகாரம் பெரிதான பிறகு 2014-ஆம் ஆண்டு நீதிமன்ற வற்புறுத்தலின் பேரில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து இவரைக் கைதுசெய்ய காவல்துறையினர் இவரது ஆசிரமத்திற் குள் நுழைய முற்பட்டனர். அப்போது ஆசிரமத்திற்கு உள்ளே இருந்து தாக்கு தல்கள் தொடர்ந்தது, இதனை அடுத்து துறை ராணுவம் வரவழைக்கப்பட்டது, 700-வீரர்களைக் கொண்டு துணை ராணு வம் ஆசிரமத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போது, அங்கு துப்பாக்கிகளும் மற்றும் எரிவாயு சிலிண் டரை வெடிகுண்டுகளாக பயன்படுத்த தயார் நிலையில் இருந்த 100க்கும் மேற்பட்டோரை அதிரடியாக கைது செய்தனர்.  சாமியாரின் ஆதரவாளர்கள் நடத்திய ஆயுதத்தாக்குதலில் ஒரு உதவி காவல் ஆய்வாளர்கள் 7 காவல்துறை யினர் மரணமடைந்தனர். அதன் பிறகு ஆசிரமத்தின் அனைத்து பகுதிகளும் சோதனையிடப்பட்டது, சாமியார் ராம்பா லின் இருப்பிடத்தில் பல ரகசிய அறைகள் மற்றும் ஆணுறைகள், கருத்தடை மாத்தி ரைகள் கைப்பற்றப்பட்டன. கூட்டத்தோடு கூட்டமாக வெளியேற முயன்ற சாமியார் ராம்பாலும் கைதுசெய்யப்பட்டார்.

இவர் மீது ஊர்மக்களை கொலை செய்தவழக்குடன் சேர்ந்து ஏற்கெனவே இரண்டு பெண்களைக் கொலைசெய்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப் பட்டது.

இதில் பெண்களைக் கொலைசெய்தது தொடர்பாக நடந்த வழக்கின் விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த 2 வழக்குகளில் சாமியார் ராம்பால் மற்றும் அவரது சீடர்களும்  குற்றவாளி என நீதி மன்றம் தீர்ப்பு கூறிய நிலையில், தற்போது ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில் சாமியார் ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 14 பேருக்கு பிரிவு 302, 343 மற்றும் 120பி கீழ் தண்டிக்கப்படு வதாக கூறி ஆயுள் தண்டனையுடன் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தர விட்டது.

சாதாரண விவசாயக்கூலியாக இருந்த சாமியார் ராம்பால் பிறகு வருமானவரித் துறை அலுவலத்தில் பணிபுரிந்து பிறகு தனது கனவில் கிருஷ்ணன் வந்து இனி உன்னுள் நான் இருக்கிறேன் என்று கூறிய தால் இவர் தன்னை கடவுளாக அறிவித்துக் கொண்டாராம்.

- விடுதலை ஞாயிறு மலர், 20.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக