திங்கள், 12 நவம்பர், 2018

சிறைக்குப் படை எடுக்கும் சாமியார்கள்



பாலியல் வன்முறை மற்றும் இயற்கைக்கு மாறாக உறவுகொண்டது உள்ளிட்ட குற்றங்களின்கீழ் சாமியார் தாதி என்பவர்மீது மத்திய புலனாய்வு விசாரணைக் குழு விசாரணை செய்ய டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாமியார் தாதியின் பாலியல் வன்முறை யால் பாதிக்கப்பட்ட 25 வயது பெண் ஒருவர் தெற்கு டில்லி ஃபதேபுர்பேரி காவல்நிலை யத்தில் 7.6.2018 அன்று புகார் கொடுத்தார். சாமியாருடன் உள்ள பெண் ஒருவர் தம்மை கட்டாயப்படுத்தி சாமியாரின் அறைக்குள் தள்ளிவிட்டதாகவும், சாமியார் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகவும் காவல்நிலையத்தில் அப்பெண் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார். சாமியாரின் சீடராக பத்து ஆண்டு களுக்கும் மேலாக இருந்த அப்பெண்ணுடன் மற்ற இருவரையும் சேர்த்து அவர்களின் சொந்த மாநிலமாகிய ராஜஸ்தானுக்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.

சாமியாரின் கட்டாயத்தின்பேரில் அவ ரது இச்சைக்கு உடன்படாத பெண்ணிடம், இங்குள்ள அனைத்து பெண்களுமே என்னுடன் படுத்தவர்கள்தான் என்று ஆணவத்துடன் கூறினாராம்.

சாமியார்மீது அப்பெண் அளித்த புகாரின்பேரில் 22.6.2018 அன்று தாதி மண்டல் எனப்படும் ஆசிரமத்தில் சாமி யார் தாதியிடம் டில்லி காவல்துறையினர் விசாரணை செய்தார்கள். அதன்பின்னர் வழக்குப் பதிவு செய்தார்கள்.

அதன்பின்னர், விசாரண செய்த பெண் அலுவலர் உள்ளிட்ட காவல்துறை அலு வலர்களைக் கொண்ட விசாரணைக் குழுவினர் ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியிலுள்ள இதே சாமியாரின் ஆசிர மத்துக்கும் சென்று விசாரணை நடத்தினர். சாமியாருக்கு எதிரான ஆதாரங்களைக் கைப்பற்ற சென்றார்கள். ஆனால், சாமி யார் அங்கிருந்தும் தலைமறைவாகி விட்டார். அதனால், தேடப்படும் குற்றவாளி கள் பட்டியலில் சாமியாரின் பெயரை காவல்துறையினர் வெளியிட்டனர். சாமியார் தாதி மண்டலை விட்டு வெளி யேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டில்லி காவல்துறையினரின் விசாரணை தீவிரமாக இல்லை என்று குறிப்பிட்டு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவில் மனுதாரர் கூறுகையில், ஏராளமான அரசி யல்வாதிகள், மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் சானிதம் ஆசிரமத்துக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்கள். ஆகவே, முறையான விசாரணை நடைபெறுவதை காவல்துறையின் குற்றப்பிரிவால் உறுதிப் படுத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் டில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு சாமியார்மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு (11.6.2018) மூன்று மாதங்களுக்குப் பின்னர் காவல்துறையினர் சாமியார் மீதான பாலியல் வன்முறை வழக்கின் குற்றப்பத்திரி கையை அளித்தனர்.

டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோரைக்கொண்ட அமர்வில் நடை பெற்ற வழக்கு விசாரணையில், இவ்வழக் கின் புலனாய்வு விசாரணையை மனுதார ரின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய புலனாய்வுக்குழுவின் (சிபிஅய்) விசார ணைக்கு உத்தரவிடப்பட்டது.

-  விடுதலை நாளேடு, 5.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக