ஆஸ்திரேலியாவில் ஆசாமி கைது!
பாலியல் தொடர்பான குற்றத்திற்காக கைதாகி சிட்னி சிறையில் உள்ள சாமியார்
ஆனந்த் கிரியுடன் உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத்.
சிட்னி,மே10இந்தியாவைச்சேர்ந்த சாமி யார் ஆனந்த் கிரி என்பவர் பாலியல் தொடர்பான குற்றத்திற்காக ஆஸ்தி ரேலியா நாட்டில் கைது செய்யப்பட் டுள்ளார். இவரது பிணை மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் அல காபாத் நகரத்திலுள்ள அனுமான் கோயிலில் சாமியாராக இருப்பவர் ஆனந்த் கிரி. இவர் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றிருந்தபோது பெண் ணிடம் தவறான செய்கையில் ஈடுபட்டு ஆஸ்திரேலியாவில் கம்பி எண்ணுகிறார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூட்டி ஹில் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் யாகம் செய்ய சென்றுள்ளார். அப்போது 34 வயதுள்ள ஒரு பெண் ணிடம் தவறான நோக்கத்தோடு உடல் பாகத்தில் கை வைத்துள்ளார். இதை அந்தப் பெண் தட்டிக்கேட்டார். உடனே அவரும், அவருடன் சென்றவர்களும் அந்தப்பெண்ணை தாக்கினார்கள். இதே போல் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி 29 வயதுடைய ஒரு பெண்ணிடம் தனது குறும்புத்தனத்தைக் காட்டினார். இந்த இரண்டு பேரும் சிட்னி காவல்துறையிடம் புகார் அளித்தி ருந்தனர். இந்த நிலையில் இவர் மீண்டும் சிட்னி சென்றார்.
அங்குள்ள ஒரு பொது இடத்தில் மதம் தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது அவரை சிட்னி காவ லர்கள் கைது செய்தனர். பின்னர் பிணையில் விடுவிக்குமாறு சிட்னி நீதிமன்றத்தில் இவர் சார்பாக வழக் குரைஞர்கள் மனுதாக்கல் செய்தனர். ஆனால், நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவிட்டது. மீண்டும் சிறை வைக் கப்பட்டுள்ள இவர் மீதான வழக்கை ஜூன் 23 ஆம் தேதி விசாரிக்க உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்திய தூதரகமே வழக்கிற்கு உதவியது.
சாமியார் மீதான பாலியல் குற்றச் சாட்டு மற்றும் பெண்ணைத் தாக்கியது தொடர்பான வழக்கில் இந்திய தூத ரகமே சாமியார் ஆனந்த கிரிக்கு ஆதர வாக வழக்குரைஞர்களை அமர்த்தி வாதாடியது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் விசா குளறுபடி களால் மாணவர்கள் பலர் கல்வியை பாதியிலேயே விட்டு விட்டு நாடு திரும்பிய நிலையில் இதற்கு உதவாத இந்திய தூதரகம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட சாமியாருக்குத் தொடர்ந்து விசா வழங்கியதுமல்லாமல் அவருக்கு ஆதரவாக நீதிமன்றத்திற்கும் சென்று வாதாடியது குறிப்பிடத்தக்கது ஆகும்.
- விடுதலை நாளேடு, 10.5.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக