ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

3 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்

அர்ச்சகரின் உதவியாளர் போக்சோ சட்டத்தில் கைது

சென்னை, ஏப்.23 சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் அப்பகுதியில் உள்ள கோவில் அர்ச்சகரின் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர், கோவிலுக்கு வந்த 3 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

குறிப்பிட்ட சிறுமி தினமும் கோவிலுக்கு செல்வார். திடீரென்று கோவிலுக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார். ஏன் கோவிலுக்குப் போக மறுக்கிறாய்? என்று அவரது பெற்றோர் கேட்டபோது, பூசாரி மாமா உதயகுமார் என்னிடம் தவறாக நடக்கிறார். அதனால் நான் கோவிலுக்குப் போக மாட்டேன் என்று சிறுமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் தந்தை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல்துறையினர் போக்சோ (சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்) சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து உதயகுமாரை விசாரித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மத்திய அரசு போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்முறை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை என்றும், அதனால் இப்போதைக்கு அந்த சட்டத்தின் கீழ் உதயகுமார்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் காவல்துறையினர்  தெரிவித்தனர். மேலும் உதயகுமார் மீது பாலியல் வன்முறை குற்றம் சாட்டப்படவில்லை என்றும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்

- விடுதலை நாளேடு, 23.4.18

வியாழன், 26 ஏப்ரல், 2018

சாமியார் ஆசாராம் பாபுவிற்கு சாகும்வரை சிறைத் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு


சாமியார் ஆசாராம் பாபுவிற்கு சாகும்வரை சிறைத் தண்டனை விதிப்பு


ஜோத்பூர், ஏப்.26 2013- ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக் கில் சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம்பாபுகைதுசெய்யப் பட்டார். ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர் பான வழக்கை எஸ்சி, எஸ்டி வழக்குகளுக்கானசிறப்புநீதி மன்றம் விசாரித்தது. விசா ரணை ஏப்ரல் 7- ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் நேற்று (25.4.2018) தீர்ப்பளித்த ஜோத்பூர்நீதிமன்றம்,சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என்றுதீர்ப்பளித்து.இந்த வழக்கில் துணை குற்றவாளிக ளாகஅறியப்பட்டசரத்,ஷில்பி ஆகியோரையும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள் ளது. சாமியார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் வட மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இப்போதுதண்டனைவிவ ரமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக் கில் சாமியார், ஆசாராம் பாபு விற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில்தொடர்புடையபிற குற்றவாளிகளானசரத்மற்றும் ஷில்பிக்கு20ஆண்டுகள்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சாமியாருக்கு சாகும்வரை தண் டனைவிதிக்கப்பட்டுள்ளநிலை யில் வட மாநிலங்களில் பாது காப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 26.4.18

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

அட ஆரியப் பதர்களே!

- மின்சாரம்
தேவநாதன் நினைவில் இருக் கிறதா? அந்தத் தேவநாதனாகிய இந் திரன் என்ன செய்தான்? கவுதம முனி வரின் மனைவி அகல்கையைக் கவுமத முனிவர் போல் உருவெடுத்து திருட் டுத்தனமாக உடலுறவு கொண்டான் என்பது புராணம். தன் மனைவியைக் கெடுத்த அந்தத் தேவநாதனுக்கு சாபமிட்டார் கவுதம முனிவர்.

என்ன சாபம் தெரியுமா? எதற்காக ஆசைப்பட்டு இப்படி ஒரு கயவாளித் தனத்தில் ஈடுபட்டாயோ - அடே இந்திரா! உன் உடல் முழுவதும் பெண் குறியாகக் கடவது என்று சாபமிட்டான். வெட்கங்கெட்ட பார்ப்பனர்கள் அதனை ஆயிரம் கண்ணுடையவன் இந்திரன் என்று கண்ணாடி போட்டு மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார்கள்.

இப்பொழுது இன்னொரு தேவ நாதன் - அவன்தான் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள சீவரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் - காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயில் அர்ச்சகன் - 35 வயதுள்ள காளை.

என்ன செய்தது இந்தக் காளை? கோயிலுக்கு வரும் குமரிப் பெண்கள் மீது காமக் கணை வீசி மன்மதத் தாகத் தைத் தீர்த்துக் கொண்டான்.

ஆம்! கோயில் கர்ப்பக் கிரகத்துக் குள் கர்ப்பத்தை உண்டாக்கக்கூடிய காரியத்தில் ஈடுபட்டான்.

எத்தகைய வீணன் இவன்? அந்த ஆபாசத்தை யெல்லாம் கைப்பேசி யில் படம் எடுத்து இரசித்து, இரசித்து, மீண்டும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் அதனைக் காட்டிக் காட்டி மிரட்டி மிரட்டி மீண்டும் மீண்டும் தன் சல்லா பத்தை நடத்தினான் என்றால் இந்த வெட்கக்கேட்டை என்ன சொல்வது!

அங்கே ஒரு கடவுள் இருப்பதாகச் சொல்லுகிறார்களே அது குத்துக் கல்லாக அங்கே அடித்து வைக்கப் பட்டுள்ளதே - அதற்குத்தான் சர்வ சக்தியும் வாய்ந்ததாக வாய் நீளம் காட்டுகிறார்களே - அந்தக் கடவுள் ஏன் அந்தக் கேவலத்தைத் தடுத்து நிறுத்தவில்லை?

துக்ளக் கண்டித்ததா - தினமணி திட்டி எழுதியதா - தினமலர் பதுங் கியது ஏன்? வாரந்தோறும் ஆன்மிக இதழ்களை வெளியிடுவோர் அடங் கிக் கிடந்தது ஏன்? ஏன்?

ஆனால் ஒன்று அந்த தேவநாதன் நீதிமன்றம் வந்தபோது பெண்கள் நன்றாக மொத்தினார்கள். இதில் இன் னொரு கொடுமை என்ன தெரியுமா? இந்த வழக்கில் பிணை பெற்ற அவன் கருநாடகம் சென்று அங்கு சில கோயில்களில் அர்ச்சனை பண்ணிக் கொண்டிருந்தான் என்பது - எவ்வளவுக் கேவலம்! மனுநீதி, ஒரு குலத்துக்கொரு நீதி என்பதும் இது தானே! 9 ஆண்டுகளாக இவன் மீதான வழக்கு நடந்துக் கொண்டிருக்கிறது என்பதையும் இதில் சேர்த்துக் கொள் ளலாம்.

பக்திக்கும் ஒழுக்கத்துக்கும் சம் பந்தமில்லை என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சொன் னது மெய்யா? இல்லையா?

அது நடந்தது 2009ஆம் ஆண்டில் என்றால் - இப்பொழுது ஒரு காமக் கழிசடைக் கூத்து திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் நடந்திருக் கிறதே!

அதுவும் ஆண்டாளைப் பற்றிக் கவிப்பேரரசு - வைரமுத்து ஏதோ சொல்லி விட்டாராம்.

கவிப்பேரரசு அவர்கள் தனது சொந்தக் கருத்தைக் கூடக் கூற வில்லை. இன்னொரு ஆய்வாளர் எழுதியதை எடுத்துக்காட்டி ஓர் ஆய்வாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதைக்கூடப் புரிந்து கொள்ளா மல்.... அடேயப்பா கவிப்பேரரசை எவ்வளவுக் கேவலமாக இந்தப் பார்ப்பனக் கூட்டம் - ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா சக்திகள் கீழ்த்தரமாகக் குடும்ப பெண்களையெல்லாம் இழுத்து ஏசியது - நிர்வாணக் கூத்தாடியது!

ஜீயராக இருக்கக் கூடியவர் சோடா பாட்டில் வீசுவோம் என்று பேட்டை ரவுடியாகப் பேசினாரே!

இந்தப் பேர்வழிகள் எல்லாம் இப்பொழுது எங்கே போனார்கள்! அந்த ஆண்டாள் கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள் அக்கோயில் அர்ச்சகன் பக்தி நாராயண் என்ற பட்டாச்சாரிப் பார்ப்பான் பெண் பக்தைகளிடம் பாலியல் லீலைகள் ஆடித்தீர்த்திருக் கிறானே!

வெட்கமில்லையா? அந்த ஊரில் இருக்கக்கூடிய சாட்சாத் அந்த ஜீயர் நாக்கைப் பிடுங்கிக் கொண்டாரா? குருமூர்த்திகள் தான் குடுமிகளை அறுத்து கொண்டனரா?

சங்பரிவார்களின் சப்த நாடியும் அடங்கிப் போனது ஏன்? ஆண்டாள் கோயிலில் இந்த ஆரியக் குஞ்சு நடத்திய அந்தப்புற ஆபாசங்கள் அக் கோயிலில் இருந்த சிசிடிவி கேமரா வில் பதிவானவற்றை அவசர அவசர மாக இந்தச் சிண்டுகள் அழித்தது ஏன்?

மூன்றாவதாக தேவநாதன் பாலி யல் வேட்டையாடிய அதே காஞ்சி புரத்தில் இன்னுமொரு விடயம் இப் போது அம்பலத்திற்கு வந்துவிட்டது.

காஞ்சி சுப்ரமணிய சுவாமி கோயி லில் இருந்த கச்சியப்பன் வெண்கலச் சிலை காணவில்லையாம். அதை அபேஸ் செய்தவன் யார் தெரியுமா?

அந்தக் கோயில் அர்ச்சகப் பார்ப் பான் கார்த்திக் என்பவன்தான் அந்தப் பக்காத் திருடன். என்ன செய்தா னாம்? கச்சியப்பன் சிலையை கோயி லின் பக்கத்தில் உள்ள கோயில் திரு குளத்தில் வீசி எறிந்து விட்டானாம். அவனைக் கவனிக்க வேண்டிய முறையில் காவல்துறை விசாரித்த போது, அந்த அர்ச்சகப் பார்ப்பான் குடிபோதையில் அவ்வாறு செய்து விட்டானாம்.

எப்படி இருக்கிறது? எப்படிப்பட்ட வன் எல்லாம் அர்ச்சகனாக இருக் கிறான்? அர்ச்சகர் ஆவதற்கு ஒரே தகுதி. அவன் பார்ப்பானாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தானா?

அர்ச்சகர் ஆவதற்கு முறையாகப் பயிற்சி கொடுத்து தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்கள் - இந்து மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவினராக இருந்தாலும் அர்ச்சகராகலாம் என்று தமிழ்நாடு அரசு சட்டம் செய்தால், அது ஆகமத்துக்கு விரோதம் என்று ஆகாயம் இடிந்து விழுந்தது போல் அவிழ்த்துப் போட்டு ஆடி ஆர்ப் பரிக்கும் பார்ப்பனர்கள் இந்தப் பார்ப் பன அர்ச்சகர்களின் அயோக்கியத் தனமான லீலைகளுக்கும் ஒழுக்கக் கேட்டுக்கும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? ஏன் கப்-சிப்?

சங்கராச்சாரியார் வாய்த் திறக் காதது ஏன்? ஜீயர்கள் சுருண்டு கிடப் பது ஏன்?சங்கராச்சாரியார் எப்படிக் கண்டு பிடிப்பார்கள்! லோகக் குருவே மடத் துக்கு வரும் பெண்களைக் கையைப் பிடித்து இழுத்தவர் தானே! (உபயம்: எழுத்தாளர் அனுராதா ரமணன்).

கேட்டால் அவர்கள் ஒன்று சொல் லலாம், எங்களுடைய படைப்புக் கடவுளான பிர்மாவே தான் பெற்ற மகள் சரஸ்வதியை மனைவியாக்கிக் கொண்டவன். எங்களுடைய முழு முதற் கட வுளாகிய சிவனோ தாருகாவனத்து ரிஷிப்பத்தினிகளின் கற்பைச் சூறை யாடி சிசுனத்தை இழந்தவன்.

காம லீலைகள் செய்வதற்கென்றே ஒரு கடவுள் எங்களிடம் இருக்கிறான் - அவன்தான் கிருஷ்ணபரமாத்மா. அவனும் சாதாரணமானவன் அல்ல. எங்களின் காத்தல் கடவுளான மகா விஷ்ணுவின் அவதாரம். 60 ஆயிரம் கோபியர்களோடு கொஞ்சிக் குலாவி யவன்.

குளிக்கும் பெண்களின் உடை களைத் திருடிச் சென்று, அவர்கள் நிர்வாணமாகக் கரையில் வந்து கைகூப்பிக் கும்பிட்டால்தான் உடை களை கொடுப்பேன் என்று கூறி இர சித்தவன் அல்லவா எங்கள் கிருஷ்ண பரமாத்மா!

எங்கள் கடவுள்கள் எல்லாமே இப் படி இருக்கும்போது - அதே கடவுள் களின் அருகிலேயே இருந்து அர்ச் சனை செய்யும் எங்களையொத்த ஆசாமிகள் இப்படியெல்லாம் நடந்து கொள்வதில் என்ன தவறு என்று சொன்னாலும் சொல்லுவார்கள் - அப்படித்தானே!

- விடுதலை ஞாயிறு மலர், 7.4.18