திங்கள், 29 மே, 2023

குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - காவல் நிலையத்தில் புகார்

  

குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - காவல் நிலையத்தில் புகார்

கோவை, ஏப். 19- கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயது பெண். இவர் கோவை காவல் ஆணையர் அலு வலகத்தில் புகார் ஒன்றை கொடுத் தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திரும ணத்துக்கு பின் நானும், எனது கணவரும் அய்தராபாத்தில் வசித்து வந்தோம். திருமணம் ஆகி 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எங்களுக்கு குழந்தை இல்லை. இதனால் நாங்கள் கோவில், கோவிலாக சென்று வந்தோம். அப்போது மத்தியப் பிரதேசத்தில் ஆசிரமம் நடத்தி வரும் ஒரு சாமியார் பற்றி எனது கணவர் அறிந்தார். அவரை சந்தித்து எங்க ளுக்கு குழந்தை இல்லாத விவ ரத்தை தெரிவித்துள்ளார். அந்த சாமியார் சொன்னபடி எனது கணவர் வீட்டுக்கு வந்து இரவு நேரங்களில் பூஜைகளை நடத் தினார்.

ஆக்ரோஷமாக இருந்த அந்த பூஜைகளை பார்த்து நான் அச்சம் கொண்டேன். சாமியார் இப்படித் தான் பூஜைகளை செய்யச் சொன் னார் என்று கூறி எனது கணவர் தெரிவித்து என்னை சமாளித்தார். இந்தநிலையில் சாமியார் பெங் களூர் வந்திருந்தார்.

அவரை பார்க்க எனது கணவர் என்னை அழைத்துச் சென்றார். அங்கு தனி அறைக்கு வரச்சொன்ன சாமியார், அவருடைய ஆசைக்கு என்னை இணங்குமாறு கூறினார். அப்போது தான் குழந்தை பாக்கி யம் கிடைக்கும் என தெரிவித்தார். நான் மறுப்பு தெரிவித்து வெளியே வந்து விட்டேன்.

இதுபற்றி கணவரிடம் தெரிவித்தேன். அவரோ எந்தவித கோபமும் கொள்ளாமல் சாமியார் சொல்படி நடந்து கொள் என தெரிவித்தார். எனது கணவரின் தோழி ஒருவரும் அலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு சாமியார் சொல்வதை கேட்கும்படி கூறினார். ஆனால் யார் சொல்லை யும் நான் கேட்கவில்லை.

அதன்பிறகு நான் எனது பெற் றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். சில மாதங்கள் கழித்து அய்தரா பாத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்றேன். ஆனால் கணவர் என்னை வீட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்து விட்டார். சாமி யார் உன்னுடன் வாழக் கூடாது என கூறி இருப்பதாக தெரிவித்து என்னுடன் பேச மறுத்தார்.

அந்த சமயம் சாமியார் என்னை தொடர்பு கொண்டு எனது ஆசைக்கு இணங்கினால் தான் உன் கணவருடன் சேர்ந்து வாழ வழி செய்வேன் என்று மிரட் டினார். ஆசைக்கு இணங்காததால் அந்த சாமியார் எனது வாழ்க் கையே அழித்து விட்டார்.

எனவே அந்த சாமியார், எனது கணவர், கணவரின் தோழி ஆகி யோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த பெண் மனுவில் கூறியிருந்தார்.

அந்த மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் கிழக்கு காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள விவரம் தெரியவந்தது.

மேலும் புகார் மனுவில் அந்த பெண் கூறியுள்ள விவரங்கள் உண்மை தானா என்பது பற்றி விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.

புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை யினர் தெரிவித்தனர்.

சாமியார்கள் ஜாக்கிரதை! பூஜை பெயரால் பெண்ணை நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை : சாமியார் கைது

 

 திருமலை,மே 19- உடல் நலன் பாதிப்பை சரி செய்ய சிறப்பு பூஜை செய்வதாக கூறி இளம்பெண்ணை நிர்வாணமாக்க முயன்ற மோசடி சாமியார் கைது செய்யப்பட்டார். 

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், ரேணிகுண்டா அடுத்த தாரகாராமா நகரை சேர்ந்தவர் ஹமாவதி (30). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இந்தநிலையில், காளஹஸ்தியை சேர்ந்த சுப்பையா என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவரிடம் ஹமாவதி தனது உடல்நிலை பாதிப்பு குறித்து தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட சுப்பையா,’உங்கள் வீட்டில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் உடல் நலக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும்’’ என்று கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த ஹமாவதியிடம் பூஜைக்கு ரூ.30 ஆயிரம் செலவாகும் என்றும் சாமியார் கூறியுள் ளார். அதற்கு ஹமாவதி ரூ.20 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டு முன்பணமாக ரூ.7,500அய் போன்பே மூலம் சுப்பையாவின் வங்கிக் கணக்குக்கு அனுப்பினார். 

கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு வீட்டில் பூஜை செய்ய இருப்பதாகவும் வீட்டில் உன்னை தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது எனவும் ஹமாவதியிடம் கூறினார். இதனையடுத்து, ஹமாவதி தனது வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றிவிட்டார். இதையறிந்து கொண்டு சுப்பையா வந்து அவரது வீட்டில் 6 இடங்களில் கோலமிட்டு மஞ்சள், குங்குமம், எலுமிச்சை வைத்து ஒரு பொம்மையை வரைந்துள்ளார்.

இதன்பின்னர், அந்த பொம்மை வரையப்பட்ட இடத்தில் ஹமாவதியை நிர்வாணமாக அமரும்படி கூறியுள்ளார். இதற்கு சம்மதிக்காத ஹமாவதி, ‘’அவ்வாறு எந்த பூஜையும் வேண்டாம்’’ என கூறியுள்ளார். அத்துடன் இதை ஏற்க மறுத்த ஹமாவதி வீட்டில் இருந்து தப்பி வெளியே ஓட முயன்றார். ஆனால், சுப்பையா ஹமாவதியை வலுக்கட்டாயமாக அடித்து நிர்வாணமாக்க முயன்றுள்ளார். அதற்குள் ஹமாவதி அவசர போலீஸ் 100க்கு போன் செய்து தகவல் தெரிவித்ததால் ரோந்து பணியில் இருந்த ரேணிகுண்டா நகர காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தபோது சுப்பையா தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ஹமாவதி அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மோசடி சாமியார் சுப்பையாவை கைது செய் தனர். இவ்வாறு வேறு எங்காவது பூஜை செய்வதாக கூறி இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளானா என்று விசாரிக்கின்றனர்.

புதன், 22 மார்ச், 2023

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முருக மடாதிபதி மீது மேலும் ஒரு வழக்கு

 

பெங்களூரு அக்15 கருநாடகா சித்ரதுர்கா முருக மடத்தில் படிக்கும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச் சாட்டில் மடாதிபதி சிவமூர்த்தி முருக சிறீ காவலில் வைக்கப் பட்டுள்ளார்.  கருநாடக மாநி லம் சித்ரதுர்கா முருக மடத்தின் விடுதியில் படிக்கும் இரண்டு  சிறுமிகளை பாலியல் வன் கொடுமை செய்ததாக மடாதி பதி சிவமூர்த்தி முருக சிறீ மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல் துறையில் சரணடைந்த சிவமூர்த்தி முருகா, செப்டம்பர் 1 முதல் காவலில் வைக்கப்பட் டுள்ளார். முருகசிறீ மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதி கரித்து வரும் நிலையில், தற் போது மடத்தில் சமையல் பணி யாளராக இருந்த பெண் ஒருவர் புதிதாக புகார் அளித்துள்ளார். இந்த நிகழ்வு அதிர்ச்சியை அதிகரித்துள்ளது. அந்த பெண், தனது மகள்களில் ஒருவரை காவல் நிலையத்திற்கு  13.10.2022 அன்று அழைத்துச் சென்று, தனது இரண்டு மகள்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் அளித்தார்.

இது தவிர, மேலும் இரண்டு சிறுமிகள் உள்பட மொத்தம் நான்கு சிறுமிகள் பாலி யல் வன்கொடுமைக்கு ஆளான தாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாலியல் துன் புறுத்தல் குற்றச்சாட்டில், சிறை யில் உள்ள சிவமூர்த்தி முருக சிறீ மீது மைசூர் நசராபாத் காவல் நிலையத்தில் நள்ளிரவில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் கூடுதலாக, முருக மடத் தில் பணிபுரியும் ஊழியரின் குழந் தைகளை பாலியல் ரீதியாக துன் புறுத்திய வழக்கில் முருக மடத்தின் சீடர்கள் உட்பட 7 பேர் மீதும் எப்அய்ஆர் பதிவு செய் யப்பட்டுள்ளது. விடுதி வார்டன், சீடர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர். மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடை பெறுகிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.


ஞாயிறு, 5 மார்ச், 2023

பகவான் கிருஷ்ணனை போல நான் நடந்து கொண்டேன் - அதில் என்ன தப்பு?" என்று கூறிய பாலியல் வன்கொடுமை குற்றவாளி சாமியார் ஆசாராமிற்கு ஆயுள் தண்டனை


 அகமதாபாத், பிப்.1 தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில்,  குஜராத் சாமியார் ஆசாராமிற்க்கு ஆயுள் தண்டனை விதித்து காந்திநகர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

குஜராத் மாநிலம், அகமதா பாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசா ராம் பாபு. இவருக்கு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம் உள்ளது. இவரது ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வரும்  பெண் சீடர்களிடம் சாமியார்  அத்துமீறி வந்துள்ளார்.  இது தொடர்பான புகாரின் பேரில்,  கடந்த 2013ஆ-ம் ஆண்டு, ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டன விதித்து  2018-ஆம் ஆண்டு நீதிமன் றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவரது ஆசிரம மேனாள் சிஷ்யை ஒருவர், அவர்மீது , அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா காவல் நிலையத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். அவரது மனுவில், தான்,  தனது 17 வயதில் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஆசிர மத்தில் 2001 முதல் 2006 வரை  இருந்த நேரத்தில் சாமியார் ஆசாராம்  பாபு தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு  குஜராத்தின் காந்தி நகரில் உள்ள நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு வந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே விசாரணை முடிந்த நிலையில், நேற்று (31.1.2023) தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் சாமியார் குற்றவாளி என கூறிய நீதிமன்றம், அவரது  மனைவி லட்சுமி, மகன் நாராயண் சாய், சாமியாரின் பக்தைகள் என கூறிக் கொண்ட 4 பெண்கள் மீதான புகார் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் களை விடுதலை செய்ததுடன்,  குற்றம் சாட்டப்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.