திருவனந்தபுரம், அக்.10 கேரள மாநில தலைநகர் திருவனந்த புரத்தில் உள்ள கன்டந்திட்டா பகுதியில் தென்னிந்திய திருச் சபையை சேர்ந்த கிறிஸ்தவ ஆலயத்தில் பைபிள் வகுப்புக்கு, அப்பகுதியை பத்து வயது சிறுமி நேற்று சென்றாள்.
தனது மகளை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக அங்கு வந்த அவளது தந்தை, அந்த சிறுமியை அங்கு பணியாற்றும் பாதிரியார் பாலியல் வன்முறை செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக, அவர் அளித்த புகாரின் அடிப்ப டையில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவலர்கள் பாதிரியார் தேவராஜ்(65) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
-விடுதலை, 10.10.17