பாலியல் வன்புணர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலியல் வன்புணர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 செப்டம்பர், 2019

முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் பல மாணவிகளிடம் பாலியல் வன்முறை

பாஜக அமைச்சரின் முகத்திரையைக் கிழித்த மாணவி


ஷாஜகான்பூர், செப்.11, உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று சமூக இணையளத்தில் காணொலி ஒன்று வெளியிட்டார். அதில் தான் படித்த கல்லூரியை நடத்தி வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சின்மயானந்த்(72) தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார் என்றும் கொன்றுவிடுவதாக மிரட்டுவ தாகவும் புகார் கூறினார். அடுத்த நாளே அவர் காணாமல் போனார். இது குறித்து அந்த மாணவியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். இந்நிலையில் காணாமல் போன அந்த மாணவி ராஜஸ் தானில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் ஷாஜகான்பூரில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: சின்மயானந்த், என்னை பலாத்காரம் செய்தார். ஓராண் டுக்கு மேலாக எனக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு என்னிடம் காணொலி உட்பட அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அவர் பல மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் என்றார்.

-  விடுதலை நாளேடு, 11.9.19

செவ்வாய், 28 மே, 2019

பில்லி சூன்ய ஏமாற்று சாமியார் பெண்ணை சூறையாடிய கேவலம்



விழுப்புரம், மே28, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மாந்திரீகம் செய்வதாகக் கூறி, பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட  சாமியார், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் இருவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட் டனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் அருகே உள்ள ஓங்கூரில் வசித்து வருபவர் மணி என்கிற செல்வமணி (வயது 40). இவரது சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் சூணாம்பேடு ஆகும். திருமணமாகி, மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தான் ஒரு சாமியார் என்றும், மாந்திரீகம் செய்து, பில்லி-சூனியம் போன்றவைகளை நீக்கி தருவதாக வும் கூறி வந்துள்ளார்.

இதற்காக நீண்ட தாடி, ஜடா முடியுடன் விழுப்புரம் மாவட்டத் தில் உள்ள பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் உள்ளிட்ட பல் வேறு கிராமங்களில் வலம் வந்தார். அவரை நம்பியவர்களில் பெண் கள் பலரும் பில்லி-சூனியத்தை நீக்கி தருமாறு சாமியாரை நாடிச் சென் றுள்ளனர். அந்த சமயத்தில் அவர் களை பற்றி முழுவதும் அறிந்து கொள்ளும் மணி, பில்லி-சூனியத்தை நீக்குவதாக கூறி அவர்களது வீடு களுக்கு சென்று வந்தார். இதில் பல பெண்களை ஏமாற்றி, அவர்களை கணவரிடமிருந்து பிரித்து, தன்வச மாக்கி குடும்பம் நடத்தி வந்ததாக வும், சிறிது நாட்களுக்கு பிறகு அந்த பெண்களை ஏமாற்றி விட்டு, வேறு பெண்களை தேடியும் சென்றுள்ளார்.

தற்போது மதுரையை சேர்ந்த ஹேமா (40) என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

மாந்திரீகம், பில்லி சூனியம் நீக்குவதாக கூறி திண்டிவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களான பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் உள் ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள் ளார். பில்லி சூனியம் எடுப்பதுபோல் சென்று, பெண்களையும் ஏமாற்றி வந்துள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மணியை செல்பேசிமூலம் தொடர்பு கொண்டார். அப்போது தனது மகனின் வாழ்வில் பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது, அதை நீங்கள் வந்து சரிசெய்து தரவேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, சாமியார் மணி அவரது வீட்டுக்கு நேரடியாக சென் றார். அங்கு அவர்களது பிரச்சி னைகள் மற்றும் குடும்பத்தில் உள்ள வர்களின் விவரங்களை கேட்டறிந் தார். அப்போது, அவருக்கு 18 வயதில் ஒரு மகள் இருப்பதை தெரிந்து கொண்டார்.

இதையடுத்து, உங்கள் ஊரில் ஒரு கோவில் கட்டினால் அனைத்து பிரச்சினைகளும் பறந்து போய் விடும் என்று தெரிவித்தார். கோவில் கட்டும் போது உங்களது மகள் வீட்டில் இருந்தால் அவளுக்கு ஆகாது, எனவே எனது பாதுகாப்பில் அவள் இருக்க வேண் டும் என்று தெரிவித்தார்.

இதை நம்பிய அவர்கள், தங் களது மகளை சாமியாரோடு அனுப்பி வைத்தனர். அதன்படி அந்த இளம்பெண்ணை சாமியார் ஓங்கூருக்கு அழைத்து வந்தார். பல மாதங்களாக தன்னுடன் இருந்த, அந்த இளம்பெண்ணுக்கு 19-ஆவது வயது பிறந்தவுடன், அவரது பெற்றோரை சந்தித்து, உங்களது மகளை நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன், ஆகை யால் எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்டார்.

இதை கேட்டு இளம்பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, எதிர்ப்பு தெரிவித்தனர். சாமியாரின் ஆசைக்கு இளம் பெண்ணும் சம்மதிக்கவில்லை. எனவே அவரிடம், உனது அண் ணனின் பிரச்சினை தீர வேண்டும் என்றால், நீ என்னுடன் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே முடியும் எனக்கூறி ஓங்கூரில் உள்ள தனது வீட்டில் வைத்து இளம் பெண் ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார்.

இது குறித்து தனது தந்தையிடம் இளம்பெண் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் விஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

பாலியல் வன்முறை புகாரில் சாமியார் மணியும், அவருக்கு உத விய பெண் ஹேமாவும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினர் சாமியாரிடம் நடத்திய விசாரணையில் அவர் பல்வேறு மோசடிகளை செய்து வந்துள்ளார் என்பது தெரிய வந் தது. ஹேமாவை அவரது கணவரி டம் இருந்து பிரித்து வந்து தன்வசப் படுத்திக்கொண்டதும் தெரியவந் தது. டிப் டாப் மனிதராக இருக்கும் மணி ஒட்டு தாடியுடன், சாமியார் உடை அணிந்து கையில் வேப் பிலையுடன் வலம் வந்துள்ளார்.அவர் பல பெண்களின் வாழ்க்கையை அவர் சீரழித்து இருக்கலாம் எனும் கோணத்தில்  காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

- விடுதலை நாளேடு, 28.5.19

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

சிறுமி பாலியல் வன்கொடுமை: பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருவனந்தபுரம், பிப்.17 கேரளத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில், பாதிரி யாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தலசேரி போக்ஸோ சட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளியான ராபின் வடக்கன் செரிலுக்கு (51) பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும் சட்டம் (போக்ஸோ), இந்திய தண்டனையியல் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளின் கீழ் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.வினோத் சனிக்கிழமை தீர்ப் பளித்தார். இந்த தண்டனையை, அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ராபினுக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதில், பாதித் தொகை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்படும். இதுதவிர, வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதுதொடர்பாக, அரசு தரப்பு வழக் குரைஞர் பீனா கூறியதாவது: கடந்த 2016-இல் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுமியை பாதிரியார் பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பமாக்கினார். 2017-ஆம் ஆண் டில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கூத்துபரம்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அந்தச் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், அந்தக் குழந்தை, வயநாடு மாவட்டத்தில் உள்ள ஓர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப் பட்டது.
மாவட்ட சிறார் பாதுகாப்பு ஆணை யத்துக்கு வந்த தொலைபேசித் தகவலை அடுத்து, சிறுமி பலாத்கார சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. முதலில், பாலியல் குற்ற சம்பவத்தை மூடி மறைத்ததற்காக, சிறுமியின் தந்தை மீது குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையின் 2 மருத்துவர்கள், அந்த மருத்துவமனை நிர்வாகி, வயநாடு சமூகநலத் துறையின் முன்னாள் தலைவர் தாமஸ் ஜோசப் தேரகம், அந்தக் குழுவின் உறுப்பினர் பெட்டி ஜோஸ், வயநாடு ஆதரவற்றோர் இல்லத்தின் கண்காணிப்பாளர் ஒபிலியா ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவரம் தெரிந்த பிறகு, காவல் துறைக்கு தெரி விக்காமல், அதை மூடி மறைத்ததற்காக, அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. எனினும், போதிய ஆதாரங்கள் இல் லாததால், அவர்கள் 6 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர் என்று அந்த வழக்குரைஞர் கூறினார்.
-  விடுதலை நாளேடு, 17.2.19

வெள்ளி, 19 அக்டோபர், 2018

சாமியார்கள் ராஜ்ஜியத்தில்.... உய்யலாலா? கொலை - பாலியல் வன்முறை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை



புதுடில்லி, அக்.17 அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பால் சிங்ஜடின்.அய்.டி.அய்.டிப்ளமோபட்ட தாரியான இவர் அரியானாவில் நீர்ப்பாசனத் துறை இளநிலைப் பொறியாளராகப் பணி யாற்றினார்.

திருமணமாகி மனைவி, 2 மகன், 2 மகள்கள் உள்ள நிலையில் திடீர் என்று ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு சாமி யாரானார். அரியானாவில் கரோதா கிராமத் தில் ஆசிரமம் தொடங்கினார். பின்னர் அரி யானா முழுவதும் ஆசிரமங்கள் தொடங்கி ஆன்மிக சேவை ஆற்றுவதாக கூறிக் கொண்டார்.

இவர் ஆன்மிகம் தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசினார். இதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் காயம் அடைந்தார். இதையடுத்து சாமியார் மீது கொலை, கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது. ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத் ததாகவும் புகார் கூறப்பட்டது.

இதையடுத்து காவல்துறை ராம்பால் மீது வழக்குப் பதிவு செய்து கடந்த 2014- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப் பட்டார். அப்போது ஏற்பட்ட மோதலில் 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை பலியானது.

ஹசார் நீதிமன்றத்தில் அவர் மீதான பல்வேறு வழக்குகள் தனித்தனியாக விசா ரிக்கப்பட்டு வந்தன. இதில் 2 வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார். கொலை மற்றும் பாலியல் வன்முறை வழக்கில் அவருக்கு ஹசார் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

சாமியார் ராம்பால் ஹசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற வழக்குகள் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

 - விடுதலை நாளேடு, 17.10.18

சனி, 22 செப்டம்பர், 2018

கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு செப்.24 வரை போலீஸ் காவல்


03:00 pm Sep 22, 2018 | dotcom@dinakaran.com(Editor)





கேரளா: கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு செப்.24 வரை போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிஷப் பிரான்கோவை செப்.24 வரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிராங்கோவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோட்டயம் பாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. 

...........

பாலியல் வன்முறை வழக்கில் சிக்கிய பேராயர் பிராங்கோ கைது

கொச்சி, செப்.22  கன்னியாஸ்திரி பாலியல் வன்முறை வழக்கில், கேரள காவல்துறையினர் விசாரிக்கப்பட்டு வந்த, பேராயர் பிராங்கோ, 54, நேற்று கைது செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில், பிஷப்பாக பணியாற்றிய பிராங்கோ, 2014 - 2016இல், கேரள மாநிலம் கோட்டயத்தில் பணியாற்றினார்.அப்போது, அங்கிருந்த கன்னியாஸ்திரியை மிரட்டி, 13 முறை பாலியல் வன்முறை செய்ததாக, காவல்துறையினர் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கேரள காவல்துறையினர் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, விசாரிக்கின்றனர். இதையடுத்து, பேராயர் பொறுப்பிலிருந்து, பிராங்கோ விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில், காவல்துறையினரின் தொடர் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியானதை அடுத்து, நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

 - விடுதலை நாளேடு, 22.9.18