செவ்வாய், 22 டிசம்பர், 2015

பாதிரியார்கள் திருமணம்: போப்பிடம் பெண்கள் விண்ணப்பம்


வாடிகன்,மே 21- வாடிகன் சிட்டியில் கத்தோலிக்க பாதிரி யார்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்க வலி யுறுத்தி போப்புக்கு பெண்கள் கடிதம் எழுதியுள்ளனர். கத் தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை. இந்த பழக்கம் சுமாராக ஆயிரம் ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை யில் இத்தாலியை சேர்ந்த 26 பெண்கள் போப் பிரான்சி சுக்கு கடிதம் எழுதியுள்ளனர். நாங்கள் அனைவரும் கத்தோ லிக்க கிறிஸ்தவ மத பாதிரியார்களை காதலிக்கிறோம். அவர் களும் எங்களை மனமாற விரும்புகின்றனர். ஆனால், எங் களை திருமணம் செய்ய விடாமல் மத கோட்பாடு தடுக் கிறது. இதனால் நாங்கள் கடும் துயருக்கு ஆளாகி இருக் கிறோம். அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. எனவே, அவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதியுங்கள். உங்களின் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறோம். பல கஷ்டங்களில் தவிக்கும் அவர்களுக்கு மாற்றம் தாருங்கள். இதன் மூலம் அனைத்து தேவாலயங்களிலும் நல்லது நடக்கும் என்று தெரிவித்துள்ளனர். கடிதத்தில் தங்களின் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களை மட்டும் எழுதி கையெழுத்திட்டுள்ளனர்.  கடிதத்தில் பல தொலைபேசி எண்களையும் எழுதியுள்ளனர். இத்தகவலை வாடிகன் இணையதளம் வெளியிட்டுள்ளது.
-விடுதலை,21.5.14

பாதிரியாரின் காமப் பசிக்கு மாணவி இரை!


திருவனந்தபுரம், ஜூலை 28_ கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வண்டிபெரியார் பகுதியைச் சேர்ந்தவர் ஜோமோன் (வயது 28). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ கோவிலில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார்.
இலவச கணினிப் பயிற்சி
இந்தக் கோவிலின் சார்பில் ஒரு இலவச கணினிப் பயிற்சி நிறுவன மும் நடத்தப்பட்டு வரு கிறது. இந்த நிறுவனத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழை பெண்கள் இலவச மாக கணினி பயிற்சி பெற்று வந்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவியும் கணினி பயிற்சி பெற்று வந்தார். அந்த மாணவியிடம் பாதி ரியார் ஜோமோன் அன் பாக பழகினாராம். மேலும் அவரது படிப் பிற்கும் பல உதவிகளை செய்து வந்தாராம்.
இந்த நிலையில் அவர் ஆசைவார்த்தைகளை கூறி அந்த மாணவியை பாலியல் வன்முறை செய்துள்ளார். மேலும் அதை தனது செல்பேசி யில் படம் பிடித்து வைத்து கொண்டு மிரட்டி அந்த மாண வியை தொடர்ந்து தனது ஆசைக்கு பலியாக்கி வந்துள்ளார்.
காவல் துறை கண்காணிப்பாளரிடம்...
நாளடைவில் அந்தப் பாதிரியாரின் தொந்தரவு அதிகமானது. தனது ஆசைக்கு இணங்காவிட் டால் அந்த மாணவியின் ஆபாச படத்தை இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டத் தொடங்கினார். இதனால் பயந்துபோன அந்த மாணவி இடுக்கி காவல் துறை கண்காணிப்பாள ரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி எடுத் துக்கூறி கதறி அழுதார்.
அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு காவல் துறையினர் இதுபற்றி விசாரணை நடத்தி அந்தப் பாதிரியாரைக் கைது செய்தனர். அவரது செல்பேசியை பறிமுதல் செய்து சோதனை செய்த போது அதில் அந்த மாணவி மட்டுமல்லாமல் வேறு பல பெண்களின் ஆபாசப் படங்களும் பதிவு செய்யப்பட்டு இருந் தது தெரிய வந்தது.
மேலும் அந்தப் பாதிரி யாரின் கணினியிலும் ஏராளமான ஆபாச படங்களும் பதிவு செய் யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதனால் பாதிரி யார் ஜோமோன் மேலும் பல பெண்களின் வாழ்க் கையும் சீரழித்து இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் காவல்துறையி னர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் பாதிரி யாருக்கு எதிராக  பெண் கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துப் போராட்டங்களிலும் இறங்கியுள்ளனர்.
-விடுதலை,18.7.14

செக்ஸ் குற்றம் மன்னிப்புக் கோரும் போப்!

வாடிகன்சிட்டி, ஜூலை 10_ மேலை நாடுகளில் சில கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் பிஷப்களால் செக்ஸ் குற்றத்துக்கு ஆளாகி பல சிறுவர்  சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வெளி யாகி இருந்தன. அவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவர் _சிறுமிகளிடம் போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டார்.
வாடிகன் சிட்டியில் நேற்று அவர் பிரார்த்தனை கூட்டம் நடத்தினார். அதில் பாதிரியார்களின் செக்ஸ் குற்றத்தால் பாதிக் கப்பட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் நீண்ட உரை யாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பாதிரியார்களின் செக்ஸ் குற்றத்தை மறுந்து விடும்படி உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் உங்களுக்கு செய்த கொடுமைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அதற்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். இருந்தாலும் அவர்கள் செய்த குற்றத் தையும் பாவச் செயல்க ளையும் விட்டு விடுங்கள். அவர்களின் செயலுக்காக உங்களிடம் நான் மன் னிப்பு கேட்டுக் கொள்கி றேன்.
செக்ஸ் குற்றத்தால் பாதிக்கப்பட்டு அதற்கு அடிமையானவர்கள் மற் றும் தற்கொலை செய்தவர் களை நினைக்கும்போது மிகுந்த மனவேதனையாக உள்ளது என்றார்.
பிரார்த்தனையின்போது அவர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். அது ஸ்பெ யினில் மொழி பெயர்க்கப் பட்டது.
-விடுதலை,10.7.14

வெள்ளி, 11 டிசம்பர், 2015

சாமியார் சல்லாபம்: டி.வி. காட்டிக் கொடுத்ததுபெங்களூர், மே 2-வாஸ்து நிபுணர் மற்றும் ஜோசியக்காரர் என்று தன்னைத் தானே விளம் பரப்படுத்திக்கொண்ட சாமியாரான தேவி சிறீ ராமசாமி என்பவர் கர்நாடகாவில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது ஆசிரமத்தில் பூஜையின் போது பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி கன்னட டி.வி. சேனல்களில் நேற்று அதிரடியாக ஒளிபரப்பானது.
இந்த வீடியோ டி.வி.யில் ஓட ஆரம்பித்தவுடன் சாமியாரின் ஓட்டமும் ஆரம்பமானது. டி.வி.யில் வீடியோ ஒளிபரப்பான தகவல் கிடைத்தவுடன் சாமியாரின் ஓட்டுநர் அவரை காப்பாற்றி காரில் ஏற்றிச் சென்றுவிட்டார். அந்த ஆசிரமத்தில் சீடனாக இருக்கும் வசந்த் என்பவரும், ஆசிரமத்தின் ஊழியரான உதயா என்பவரும் சாமியாரின் லீலைகளை பார்த்து வெறுப்புற்று அவரைக் கையும் களவுமாக பிடிக்க அவருக்கு தெரியாமலேயே இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.
பின்னர் இந்த வீடியோவை அவர்கள் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கொடுத்துள்ளனர். இதை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியவுடன் சாமியாரின் தீவிரமான சீடர்கள் கடும் கோபத்துடன் ஆசிரமத்தை அடித்து நொறுக்கினர். காரில் தப்பிய சாமியார் தற்போது தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருடன் இருக்கும் பெண் யாரென்று இதுவரை தெரிய வில்லை.

சபரிமலையில் பெண் பக்தர்களிடம் தவறான நடத்தை
திருவனந்தபுரம், மே 2- சபரிமலையில் உள்ள  அய்யப்பன் கோ விலுக்கு லட் சக்கணக் கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலைக்கு பெண்கள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 10 வயதுக் குட்பட்ட சிறுமிகளும் 50 வயதுக்கு மேலான பெண்களும் மட்டுமே சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய முடியும்.
இந்த நிலையில் கடந்த சித்திரை விஷு பண்டிகையின்போது சபரிமலை சன்னிதானத்தில் 18ஆம் படி அருகே பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்த காவல்துறை துணை ஆய்வாளர் ஜகாங்கீர் என்பவர் சிறுமிகளிடமும், பெண் பக்தர்களிடமும் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக பக்தர்கள் உயர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இந்த புகார் மீது சரியான விசாரணை நடத்தப்படவில்லை.
இதைத் தொடர்ந்து காவல் உயர் அதிகாரி ஏ.டி.ஜி.பி.ஹேமச்சந்திரனிடம் புகார் கூறப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் நடைபெற்ற விசா ரணையில் துணை ஆய்வாளர் ஜகாங்கீர் மீதான குற்றச்சாட்டு உண்மை என்று தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
-விடுதலை,2.5.14

சிறுமிகளை பாலியல் வன்முறை செய்து தலைமறைவான பாதிரியார் பிரேசிலில் கைது


ரியோ டி ஜெனிரோ, மார்ச் 2 அமெரிக்காவின் மின்னியபொலிஸ் அருகே உள்ள ஃபின்லேசன் பகுதி யில் கிறிஸ்துவ மத தொண் டூழியம் செய்யவரும் இளம் பெண்களுக்கான கன்னி யாஸ்திரி முகாமை நடத்தி வந்த பாதிரியாரான விக்டர் அர்டன் பெர்ணார்ட் (53) என்பவர் அந்த முகாமில் பயிற்சிக்காக வந்த ஒரு சிறுமியை 13 வயதில் இருந்து சுமார் 10 ஆண்டு கள் வரை பலவந்தப்படுத்தி பாலியல் வன்முறை செய்த தாக புகார்கள் எழுந்தன.
இதேபோல், தன்னையும் அவர் 12 வயது முதல் 20 வயது வரை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத் தியதாக அதே முகாமில் தங்கியிருந்த மற்றொரு பெண்ணும் தெரிவித்தார்.  அவரால் பாதிக்கப் பட்ட மேலும் பல பெண் கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கத் தயங்கி வந்த நிலையில் விக்டர் அர்டன் பெர்ணார்ட் கடந்த 2010ஆ-ம் ஆண்டு திடீரென தலைமறை வானார்.
அவர் பிடிபட் டால் அதிகபட்சமாக 30 ஆண்டு சிறை தண்டனை உறுதி என்ற நிலையில் அமெரிக்க காவல்துறை யினர் அவரை வலைவீசி தேடிவந்தனர்.
அமெரிக்க அரசால் தேடப்படும் முக்கிய குற்ற வாளியாகவும் அறிவிக்கப் பட்டிருந்த அவரை பிரே சில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இருந்து சுமார் 2100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ப்ரை யாடா பிப்பா கடற்கரை பகுதியில் உள்ள ஒரு பங் களாவில் நேற்று பிரேசில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவருடன் சுமார் 33 வயது மதிக்கத்தக்க பிரேசில் நாட்டுப் பெண்னும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் இருந்த கணி னிகள், செல்பேசிகள், பென் டிரைவ்கள் உள்ளிட்ட முக்கிய பொருள்களையும் பறிமுதல் செய்யப்பட்டது. விரைவில் அமெரிக்க காவல்துறையினரிடம் அவர்கள் ஒப்படைக்கப் படுவார்கள் என தெரி கின்றது.
-விடுதலை,2.3.15

குழந்தை வரத்திற்கு நள்ளிரவு பூஜையாம் பெண் வன் புணர்ச்சி: இருவர் கைதுசிவகங்கை, பிப். 27_ சிவ கங்கையில், குழந்தை வரத் திற்கு இரவில் சிறப்புப் பூஜை நடத்தி, பெண்ணை வன் புணர்ச்சி செய்தது தொடர்பாக இருவரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
சிவகங்கை அருகே, அல்லூர் பெண்ணிற்கு திரு மணமாகி மூன்றாண்டு களாக குழந்தை இல்லை. ஜோசியத்தில் கணவருக்கு நேரம் சரியில்லை என அறிந்து சிறப்புப் பூஜைக்கு ஏற்பாடு செய்தனர்.
தேவகோட்டை அருகே பில்லி, சூனியம் செய்யும் கணவரின் தூரத்து உறவின ரான எழுவன் கோட்டை விசுவநாதன் வயது 50, அவரது நண்பர் ஜெபஸ் திராஜ் (வயது 45) ஆகி யோர் பிப்., 19இல் அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். அன்றிரவு 10.30 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூஜையின்போது, கணவர் எதிரில் மனைவி இருக்கக்கூடாது என விசுவநாதன் கூறியதால் பெண்ணை கண்மாய் கரைக்கு அழைத்துச் சென்று ஜெபஸ்திராஜ் பாலியல் வன்முறை செய் துள்ளார்.
காவல்துறையினர் விசாரணையில் இருவரும் செய்த சதியில் பெண் வன் புணர்ச்சி செய்யப்பட்டது தெரிந்தது. வேறொரு பெண்ணுக்கு சிறப்பு பூஜை நடத்தவேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் ணின் கணவர் மூலம் இருவரையும் வரவழைத்த காவல்துறையினர் அவர் களை கைது செய்தனர்.
-விடுதலை,27.2.15

வியாழன், 10 டிசம்பர், 2015

தர்ம அடி வாங்கினான் மந்திரவாதிமைசூரு, டிச.10 உன்சூர் அருகே புதையல் இருப்பதாகக் கூறி விவசா யியிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த மந்திரவா தியை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப் படுவதாவது:
மைசூரு அருகே கெத் தனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகாதேஷ் (வயது 46). இவர் தன்னை மந்திரவாதி என்று கூறிக் கொண்டு அந்தப் பகுதி மக்களிடம் பில்லி, சூனி யம் எடுக்க பூஜை செய்வ தாக கூறி வந்தார். இதற் கிடையே கடந்த 2 மாதங் களுக்கு முன்பு மகாதே சுக்கு, மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா ஆஸ் வாலு கிராமத்தை சேர்ந்த குமாரசாமி என்ற விவ சாயியுடன் பழக்கம் ஏற் பட்டது. இந்த பழக்கத்தை வைத்து மகாதேஷ், குமாரசாமியின் குடும்பப் பிரச்சினை, சொத்து விவ ரங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டார்.
இந்த நிலையில் மகா தேஷ், குமாரசாமியின் விவசாய தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும், அந்த புதையலை எடுக்க நிறைய பூஜைகள் நடத்த வேண்டும் என்றும், அந்த புதையலை எடுக்காமல் விட்டுவிட்டால் குடும்பத் தினர் உயிருக்கு ஆபத்து என்றும் குமாரசாமியிடம் கூறியுள்ளார். இதனால் அவரும் புதையலை எடுக்க பூஜை நடத்த சம்மதம் தெரிவித்தார்.
அதன்படி அடிக்கடி லட்சக்கணக்கான ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு குமாரசாமியின் நிலத்தில் உள்ள புதையலை எடுக்க மந்திரவாதி மகாதேஷ் தனது வீட்டிலேயே பூஜை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட் கிழமை இரவு குமாரசாமி யின் தோட்டத்திற்கு சென்ற மகாதேஷ், தானே ஒரு பழைய குடத்தை ஒரு இடத்தில் புதைத்து வைத் துள்ளார். மறுநாளான நேற்று முன்தினம் (செவ் வாய்க்கிழமை) மகாதேஷ், குமாரசாமியின் தோட் டத்திற்கு சென்று பூஜை நடத்தினார். அப்போது குமாரசாமியும், அவரது உறவினர்களும் அங்கு இருந்தனர். அந்த சமயத் தில் தோட்டத்தில் ஒரு இடத்தை காண்பித்து இங்கு புதையல் இருப்ப தாக மகாதேஷ் கூறியுள் ளார்.
ஆனால் அந்த இடத் தில் ஏற்கனவே குழி தோண்டி மணல் மூடப் பட்டிருந்தது. இதனால் குமாரசாமிக்கும் அவரது உறவினர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் அந்த இடத்தில் குழி தோண்டி பார்த்தனர். அங்கு ஒரு பழைய குடம் மட்டும் இருந்தது. அதில் புதையல் இல்லை. இந்த சம்பவம் அந்தப் பகுதி மக் களுக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து குமார சாமி, மகாதேசிடம் கேட் டுள்ளார். அதற்கு நீங்கள் பூஜை நடத்தும் போது சுத்தமாக இல்லை. இத னால் புதையல் கிடைக் காமல் போய்விட்டதாக கூறி, அங்கிருந்து புறப் பட்டுச் சென்றார். அப் போது குமாரசாமியின் பக்கத்து தோட்டத்துக் காரர் ஒருவர் அங்கு வந் தார். அவர், திங்கட் கிழமை இரவு மந்திரவாதி மகாதேஷ் இங்கு வந்து குழி தோண்டி குடத்தை புதைத்து வைத்ததை குமாரசாமியிடம் தெரிவித் தார். அப்போது தான் மந்திரவாதி மகாதேஷ், புதையல் இருப்பதாக கூறி பணம் பறித்து வந்தது அவருக்கு தெரியவந்தது.
இதனால் ஆத்திர மடைந்த குமாரசாமி, அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மந்திர வாதி மகாதேசை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை பிளி கெரே காவல் நிலையத் தில் ஒப்படைத்தனர். அவரை காவல் நிலையத் தில் கைது செய்தனர்.
மேலும் குமாரசாமி, பிளிகெரே காவலர் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், மந்திரவாதி மகாதேஷ் எனது தோட் டத்தில் புதையல் இருப்ப தாகவும், அந்த புதையலை எடுக்க பூஜை செய்வதாக கூறி ரூ.6 லட்சம் வரை வாங்கி மோசடி செய்துள் ளார் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, கைதான மகாதேசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-விடுதலை,10.12.15

பாதிரியார் கைது


திருச்சூர், டிச.10 கேரள மாநிலம் திருச் சூரை அடுத்த கோட் டபுரத்தில் உள்ள ஒரு கிறித்துலயத்தில் பாதிரி யாராக இருந்தவர் எட்வின் பிகாரஸ் (வயது 41). திருச்சபையில் வேலை பார்த்து வந்த ஒரு சிறு மியை எட்வின் தொடர்ந்து மிரட்டி பாலியல் வன் கலவி செய்து வந்தார்.
இது குறித்து அந்த சிறுமி தன்னுடைய பெற் றோரிடம் கூறியுள்ளார்.   அவர்கள் காவல் நிலையத் தில் புகார் அளித்தனர்.
இதனிடையே எட்வின் தப்ப உதவியதாக அவருடைய உறவினர்கள் 2 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர். அவர்கள் மூலமாக எட் வினை 8 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் காவல்துறை யினர் கைது செய்தனர்.
-விடுதலை,10.12.15

திங்கள், 30 நவம்பர், 2015

மாணவி பாலியல் வன்முறை மதபோதகர் கைதுகோத்தகிரி, நவ.30  படிக்க வைப்பதாக அழைத்துச்சென்று, மாணவியை பலாத்காரம் செய்த மதபோதகர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம், குன்னுரைச் சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ், 40. கோத்தகிரியில் தங்கி, போதனை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஏழை ஒருவரின் மகளை படிக்க வைப்பதாக கூறி, மேட்டுப்பாளையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஒரு வாடகை வீட்டில் இரண்டு ஆண்டுகள் தங்க வைத்து படிக்க வைத்துள்ளார். அப்போது, மாணவியை பலமுறை பாலியல் வன்முறை செய்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்ததால், மாணவி யாரிடமும் சொல்லவில்லை. மகளைப் பார்க்க மேட்டுப்பாளையத்துக்கு சென்ற அவரது தந்தை, மகள் உடல் நலமில்லாமல் இருப்பதை கண்டார். மதபோதகர் அருள்தாசின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து, கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் அவரது மகளை மீட்டு, பெண்கள் பாதுகாப்பு மய்யத்தில் சேர்த்தனர். விசாரணையில், பாலியல் வன்முறை செய்ததை அருள்தாஸ் ஒப்புக்கொண்டார். ஆக., 28இல் கைது செய்யப்பட்டு, குன்னுர் சிறையில் அடைக்கப்பட்டார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கர் உத்தரவை அடுத்து, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அருள்தாஸ், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

-விடுதலை,30.11.15

ஞாயிறு, 22 நவம்பர், 2015

பாலியல் வன்முறை: பாதிரியார் மீது மாணவி புகார்


சென்னை, ஜன.11-  திருமண ஆசைகாட்டி சீரழித்து பலமுறை கர்ப்பத்தை கலைத்துவிட்டு தன்னை ஏமாற்றிய பாதிரியார் மீது நர்சிங் மாணவி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். விழுப்புரத்தைச் சேர்ந்தவர் காவ்யா(25)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் நேற்று (9.1.2013) சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து பாதிரியார் மீது புகார் கொடுத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், என் தந்தை ஒரு விவசாயி. அவருக்கு என்னையும் சேர்த்து 7 பிள்ளைகள். நான் பி.எஸ்.சி. நர்சிங் படித்துக் கொண்டிருக்கிறேன். முதலில் தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்தபோது வியாசர்பாடி சர்மா நகரைச் சேர்ந்த அந்தோணி ஜோசப்(31) என்பவர் அவரது பெரியம்மா லூர்து மேரிக்கு சிகிச்சை அளிக்க என்னை அழைத்துச் சென்றார்.
அங்கிருந்து அவர் தினமும் என்னை தனது வாகனத்தில் கல்லூரிக்கு அழைத்து வருவார். அப்போது அவர் தன்னை மணக்குமாறு கேட்டார். முதலில் மறுத்தேன். உடனே அவர் நீ என்னை மணக்காவிட்டால் நான் அவர் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.
அதன் பிறகு என்னை கட்டாயப்படுத்தி தனது காரில் 23-4-2012 அன்று மூணாறுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு ஹோட்டலில் தங்க வைத்த அவர் குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். மயக்கம் தெரிந்த பிறகு அவருடன் தகராறு செய்தேன். உடனே என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி என்னை சமாதானம் செய்தார்.
அவரது வார்த்தையை நம்பி நடந்த விஷயத்தை நான் யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில் நான் கர்ப்பமானேன். மருத்துவரிடம் அழைத்துச் சென்று என்னை தனது மனைவி என்று கூறி கல்லூரியில் படிக்கும் சமயத்தில் குழந்தை வேண்டாம் என்று நினைக்கிறோம் என்று கூறி மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து கருவை கலைத்தார். அதன் பிறகு அவர் தங்கி இருந்த மூலக்கடை அசிசி நகர், ஆலயத்தில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்று திருமண ஆசை காட்டி என்னை மீண்டும் சீரழித்தார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி தோழியின் திருமணத்திற்காக வேலூர் கிளம்பினேன். அப்போது அவர் என்னை தனது காரில் அழைத்துச் சென்றார். வேலூரில் ஒரு அறை எடுத்து தங்கினோம். அப்போது அவர் எனது கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டிவிட்டு என்னை மனைவி என்று கூறி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பின்னர் தங்கத் தாலி வாங்கித் தருவதாகக் கூறி மஞ்சள் கயிற்றை அறுத்துவிட்டார். கொடைக்கான லுக்கு சுற்றுலா சென்றோம்.
அதன் பிறகு கிண்டிக்கு சென்றோம். இரண்டு இடங்களிலும் கணவன், மனைவி என்று கூறியோ அறை எடுத்தோம். இந்த காலகட்டத்தில் 3 முறை கர்ப்பம் ஆனேன். ஆனால் இந்த விஷயம் தெரிந்தால் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறியே கர்பத்தை கலைக்க வைத்தார்.
எனக்காக பாதிரியார் தொழிலையே விட்டுவிடுவதாக தெரிவித்தார். ஆனால் கடந்த சில வாரங்களாக என்னுடன் அவர் பேசவில்லை. இதையடுத்து அவரை தொடர்பு கொண்டபோது என்னை திருமணம் செய்ய மறுத்தார். மேலும் தனக்கு அதிகாரம் படைத்த பலரைத் தெரியும் என்றும், என்னால் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறினார். அவருடன் சேர்ந்து அவரது தம்பியும் மிரட்டுகிறார்.
அதனால் திருமண ஆசை காட்டி என்னை சீரழித்த பாதிரியார் அந்தோணி ஜோசப் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-விடுதலை,11.1.13

ஞாயிறு, 15 நவம்பர், 2015

பாதிரியார் இவர்!


வழிபட வந்தவர்களையே உணவாக்குவதா? பாதிரியார் பக்தர்களையே உணவாக்கிக் கொண்டதாக லாஸ் ஏஞ்ஜெல்ஸ் காவல்துறை வெள்ளிக்கிழமையன்று குற்றம் சாட்டியுள்ளது.
20 பெண்களுக்கு மேல் பாதிரியார் வன்புணர்ச்சி செய்ததாகவும், அவர்களில் பலர் ஸ்பானிஷ் மொழி பேசும் ஆவணங்களற்று குடிபெயர்ந்தோர் ஆவர்.
2004 அக்டோபரிலேயே இந்தத் தவறுகள் நடக்க ஆரம்பித்துள்ளன. நார்வாக்கிலுள்ள லாஸ் பியூனஸ் நவாஸ் தேவாலயத்தில் காஸ்ட்ரோ துணைப் பாதிரியாராகப் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து 2012 செப்டம்பர் வரை தொடர்ந்து இந்த தவறுகள் நடந்து வந்துள்ளதாக காவல்துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
சென்ற வெள்ளிக்கிழமை காஸ்ட்ரோ நார்வாக்கில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு லாஸ் ஏஞ்ஜெல்ஸ் சிறையில், 2 மில்லியன் டாலர் பிணைத் தொகைக்குப் பதிலாக அடைக்கப்பட்டிருக்கிறார். 18லிருந்து 39 வயதுக் குட்பட்ட பெண்கள், காஸ்ட்ரோவை மூன்றாவது நபர் ஒருவருடன் தொடர்புபடுத்த, அவர் துப்பறி பவர்களிடம் கூறியதாக அதிகாரிகள் கூறினர்.
அந்தப் பெண்களின் ஏதுமிலா நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு பாதிரியார் அவர்களைப் பாழ்ப் படுத்தி விட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர் அந்தப் பெண்களின் மனங்களில் அச்சத்தை ஊட்டி, அவர்களைப்பற்றி அவர் அதிகாரிகளிடம் புகார் கூறினால், அவர்கள் நாடு கடத்தப்படு வார்கள்; அத்துடன் பொது மக்களிடையே அவமானத்துக்கும் கேலிக்கும் ஆளாவார்கள் என்று பயமுறுத்தி உள்ளார்.
வன்புணர்ச்சி, வாய் வழிப்புணர்ச்சி உட்பட்ட ஆறு கடும் குற்றச்சாட்டுகள், காஸ்ட்ரோ மீது கூறப்பட்டுள்ளன. வேறு யாரும் இவ்வாறு பாதிரியாரால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை பற்றி துப்பறிவாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
-விடுதலை,5.10.15

பேயை விரட்டினாரா? பெண்ணைக் கெடுத்தாரா?


மராட்டிய மாநிலம் காட்கேபரை சேர்ந்தவர் மந்திரவாதி  நவீன் மாலிக் .அதே பகுதியில் இருந்த ஒருவர் நீண்ட நாட்களாக முட்டி வலியால் அவதி  பட்டு வந்தார். பல மருத் துவர்களிடம் சிகிச்சை எடுத்தும் அவரது முட்டி வலி குணமாக வில்லை. இறுதியாக மந்திரவாதி நவீன் மாலிக்கை சென்று பார்த்தார். அவரும்  சிகிச்சை அளித்து வந்தார்.
சிகிச்சைக்காக மந்திர வாதி அடிக்கடி முட்டி வலி உடையவரின் வீட் டுக்குச் என்று வரத் தொடங் கினார். அப்போது அவரது 25 வயது மகளை பார்த்து உள்ளார்.  அந் தப் பெண்னை அடைய ஆசைபட்ட மந்திரவாதி அதற்கான நேரத்தை எதிர்பார்த்து இருந்தார்.  கடந்த புதன் கிழமை சிகிச்சைக்காக வீட்டுக்குச் சென்று உள்ளார். அப் போது வீட்டில் யாரும் இல்லை. இளம் பெண் மட்டும் தனியாக இருந்து உள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்த நினைத்த மந்திரவாதி  இளம்பெண் ணின் அறையைச் சுற்றி பேய்கள் மற்றும் தீய சக்திகள்  நடமாடுவதாக வும்  அவற்றிடம் இருந்து விடுவிக்கப் போவதாகவும் கூறி ஒரு வித பொடியைத் தூவி உள்ளார். பின்னர் இளம் பெண்ணின் முகத் திலும் பொடியைத் தூவி னார். இதில் இளம் பெண் மயக்கம் அடைந்தார். மந் திரவாதி தனது ஆசையை நிறைவேற்றி கொண்டு அங்கிருந்து தப்பினார்.
இது குறித்து காட் கேபர் காவல் நிலையத் தில் புகார் செய்யபட்டது காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து மந்திர வாதியை கைது செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
-விடுதலை, 6.9.15

வெள்ளி, 13 நவம்பர், 2015

பூசாரிகளின் யோக்கியதை!


இந்துமத அறக்கட்ட ளைகள் பற்றி விசாரிக்க மத்திய அரசு 1960ஆம் ஆண்டு நியமித்த சி.பி.இராமசாமி அய்யர் கமிட்டி தனது அறிக் கையை 1962ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் காணப்படும் பூசாரிகள் பற்றி விவரங்கள் (அத்தியாயம் 5) இங்கே திரட்டித் தரப்படுகின்றன.
நாங்கள் தேசத்தின் பல்வேறு  பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது ஏராளமான கோயில்களுக்கு நேரடியாக நாங்களே போய்ப் பார்க்க எங்களுக்கு நிரம்ப வாய்ப்புக் கிடைத்தது.
அர்ச்சகர்களும், பூசாரிகளும் ஒன்று கல்வி அறிவற்ற தற்குறிகளாக இருக்கின்றனர். அல்லது அரைகுறை யாக படித்தவர்களாக இருக்கின்றனர்; இவர்கள் வழக்கமாகவே பணம் பறிப்பவர்களாகவும் இருக்கின்றனர். இதில் ஏதோ சிற்சில சிறப்பான விதிவிலக்குகள் உள்ளன. இந்த விதிவிலக்குகள் வடக்கைவிட தெற்கேதான் அதிகம் - இவ்வாறுதான் தோன்றுகிறது.
பொருளறியாத புலம்பலே மந்திரம்!
அவர்கள் ஓதும் மந்திரங்களில் அவர்களின் உச்சரிப்பும் உச்சாடனமும் பதியத்தக்கதாக இல்லை; தப்புந்தவறுமாக இருக்கின்றன. தாங்கள் முழங்கும் இந்த மந்திரங்களின் சிறப்பையோ அல்லது பொருளையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது வருந்துதற்குரியது.
தெய்வத்தின் கருணையைப் பெறுவதற்காக கோயில்களுக்கு வரும் பக்தர்களிடத்திலும் வழிபடுவோரிடத்திலும் பக்தியும் மரியாதையும் அடங்கிய ஒரு உணர்ச்சியை ஊட்டக் கூடிய நிலை யில் அர்ச்சகர்கள் இருப்பதில்லை என்பது வெளிப்படை.
சின்னஞ்சிறு பயலுக்கு என்ன தெரியும்?
ஆந்திரப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் இருக்கிறது; இந்தக் கோயில்களில் நடத்தப்பட்டு வரும் வழி பாடு கொஞ்சம் கூட போதாது என்று கூறப்படுகிறது, தாங்கள் பணிபுரியும் கோயிலில் எந்த ஆகமம் கடைப் பிடிக்கப்பட வேண்டும் என்பதுகூட பூசாரிகளில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.
தெய் வத்துக்கு எந்த நேரத்தில் அபிசேகம் செய்யப்பட வேண்டும் என்றும் எந்த மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை.
மகாநந்தி என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு தாம் போயிருந்தபோது அங்கே 15 வயதாகிய ஒரு சிறுவன் பூசாரியாக இருந்ததைக் கண்டதாக திரு.ரமேசன் என்பவர் சாட்சியம் கூறியுள்ளார். தெய்வங்கள் பெயர்கள்கூட அந்தச் சிறுவனுக்குத் தெரியவில்லை, எந்தவகையான வழிபாடு நடத்தப்பட வேண்டும் - என்னென்ன மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்பதும் அச்சிறுவனுக்கு தெரியவில்லை.
=விடுதலை,2.10.15

மதபோதகர் கைது

வேலூர், அக்.16 மாணவியுடன், 'உல்லாச மாக' இருந்து விட்டு, திருமணத்துக்கு மறுத்த கிறிஸ்தவ மதபோதகர் கைதானார்.வேலுர் மாவட்டம், திருப்பத்துர் அடுத்த ஜலகாம்பாறை கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது பெண், அருகில் உள்ள அரசு பெண்கள் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 1 படித்து வந்தார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, அப்துல்லாபுரத் தைச் சேர்ந்த தீபக்குமார், 47, ஜலகாம்பாறை அருகே உள்ள, மிட்டூர் கிறிஸ்தவ தேவாலயத்தில், மதபோ தகராக இருந்து வரு கிறார்.தேவாலயத்துக்கு, அடிக்கடி மாணவி சென்ற போது, மதபோதகருடன் பழகி உள்ளார். இதை யடுத்து, அவர், பல இடங் களுக்கு, மாணவியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலை யில், ஆகஸ்ட் மாதம், மாணவியை, சென்னைக்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள் வதாக வாக்குறுதி அளித்து, அவருடன் மதபோதகர், 'உல்லாசமாக' இருந்த தாகத் தெரிகிறது. இதன் பின், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, அவரை, மாணவி வலியு றுத்தியதற்கு, மறுப்பு தெரிவித்து உள்ளார்.
அத்துடன், 'சம்ப வத்தை வெளியே தெரிவித் தால், கொலை செய்து விடுவேன்' எனவும், மத போதகர் மிரட்டி உள் ளார். இதுகுறித்து, திருப் பத்துர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், மாணவி புகார் கொடுத் தார். வழக்கு பதிந்த காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு, மத போதகர் தீபக்குமாரை கைது செய்தனர்.
-விடுதலை,16.10.15

பெண் நரபலி : மந்திரவாதி கைது


மடிகேரி, அக்.16 கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி புறநகர் பகுதியில் 21 வயது மந்திரவாதி ஒருவர் பில்லி சூனியம் வைத்தல், எடுத் தல் போன்ற மாந்த்ரீ கங்கள் செய்து வந்தார்.
18 வயதிலேயே தன்னி டம் அபூர்வ சக்தி இருப் பதாகவும், தன்னை மந்தி ரவாதி என்றும் கூறிக் கொண்டார். தனது பெயரை துர்க்கா தத்தா காளிதாஸ் என்று வைத் துக் கொண்டார். அமா வாசை போன்ற விசேஷ நாட்களில் சாமியாடிக் கொண்டே குறி சொல் வார். இதனால் பிரபலமா னார். ஏராளமான கிராம மக்கள் அவரிடம் வந்து தங்கள் குறைகளைச் சொல்லி நிவர்த்தி கேட்டு சென்றனர்.
மேலும் அந்தப் பகுதி யில் புதையல் இருப்ப தாகவும் அதை நரபலி கொடுத்தால் கைப்பற்ற லாம் என்றும் மந்திரவாதி கூறி வந்தார்.
இந்த நிலையில் மடி கேரி அருகில் உள்ள இப்னி வேலவாடி கிரா மத்தைச் சேர்ந்த ஆஷா என்ற பெண் நீண்ட நாட் களாக நோய் வாய்ப்பட்டு கிடந்தார். அவரது தீராத நோயை தீர்த்து வைப்ப தாக கூறி மந்திரவாதி தன்னை சந்திக்க வருமாறு கூறினார். இதற்கு அவரது கணவரும், மகன்களும் சம்மதித்தனர்.
அமாவாசை தினத் தன்று தனது வீட்டுக்கு ஆஷாவை வரவழைத்தார். பூஜை அறையில் உட்கார வைத்து பூஜைகள் செய் தார். நடனமாடியவாறே ஏதேதோ மந்திரங்கள் சொன்னார். திடீர் என்று அவர் பூஜை அறையில் இருந்து அரிவாளை எடுத் துக் கொண்டு சாமியா டியவாறு இருந்தார்.
திடீர் என்று யாரும் எதிர்பாராத வகையில் ஆஷாவை அரிவாளால் துடிக்க துடிக்க வெட்டிக் கொன்று ரத்தத்தை எடுத்து நரபலி கொடுத் தார். மந்திரவாதி என்ப தால் கிராம மக்கள் அதை தடுக்க முன்வரவில்லை.
இந்த பயங்கர சம்பவம் பற்றி 2 நாள் கழித்து காவல்துறைக்கு தெரிய வந்தது. உடனே காவல் துறை அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று மந்திர வாதியை கைது செய்தனர். நரபலி கொடுக்க உதவிய தாக அவரது உதவியா ளர்கள் தாரணி, பவன், கவன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
4 பேரும் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டனர். பெண் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலையுண்ட ஆஷா வின் கணவர் நானய்யா பெங்களூரில் செக்யூரிட்டி காவலாளியாக பணிபுரி கிறார். ஒரு மகன் ஹரிஷ் பெங்களூரில் பணிபுரி கிறார். மற்றொரு மகன் சென்னையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.டெக் படித்து வரு கிறார்.
தாயின் உடல் நலம் குணமாக வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மந்திரவாதியை சந்திக்க மகன்கள் சம்மதித்தனர். ஆனால் மந்திரவாதி கொடூரமாக செயல்பட்டு நரபலி கொடுத்து விட் டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
-விடுதலை,16.10.15

புதன், 11 நவம்பர், 2015

ரஜ்னீஷ் சாமியாரின் அந்தரங்க வாழ்க்கை


கால-மான பின் அவ-ரது மதிப்பு உண-ரப்-பட்-டா-லும், வாழும் காலத்-தில் ஒரு சர்ச்-சைக்கு-ரிய சாமி-யா-ரா-கவே கரு-தப்-பட்-ட-வர், ஓஷோ ரஜ்-னீஷ். அதி-ர-டி-கள் நிறைந்த ரஜ்-னீ-ஷின் வாழ்-வில் அவ-ரது நிழ-லாக இருந்-த-வர் மா ஆனந்-த-ஷீலா.
ரஜ்-னீ-ஷின் முதல் உத-வி-யா-ள-ராக, காத-லி-யாக, ஆசி-ர-மத்-தின் தலைமை நிர்-வா-கி-யாக இருந்த ஆனந்-த-ஷீலா, ரஜ்-னீ-ஷின் அந்-த-ரங்கங்கள் அனைத்-தும் அறிந்-த-வர்.
ரஜ்-னீ-ஷுக்கு இணை-யாக அதி-ரடித் திருப்-பங்கள் நிறைந்-தது இவ-ரது வாழ்க்கை.
ஒரு நொடி-யில் சட்-டென்று தீர்-மா-னித்து ரஜ்-னீ-ஷி-டம் சர-ண-டைந்த ஆனந்-த-ஷீலா, அவ-ரது ஆசி-ர-மத்-தின் உச்ச நப-ராக உயர்ந்-தார்.
ரஜ்-னீஷ் மறை-வுக்குப் பிறகு பல கோடி ரூபாய் பணத்-துடன் ஆசி-ரமத்-தில் இருந்து ஓடிப்-போய்-விட்-ட-தாகக் குற்-றஞ்-சாட்-டப்-பட்ட இவர், 39 மாதங்க-ளைச் சிறை-யி-லும் கழித்-தார்.
தற்-போது சுவிட்-சர்-லாந்-தில் ஒரு முதி-யோர் இல்-லத்தை அமை-தியாக நடத்-திவரும் ஆனந்-தஷீலா, ரஜ்-னீஷ் பற்-றிய உள்-வட்ட ரக-சியங்களை தனது புதிய புத்-தகத்-தில் வெளிப்-ப-டுத்-தி-யி-ருக்கி-றார்.
அவரைக் கொல்-லா-தீர்கள் என்ற அந்த நூலில் இருந்து சில துளி-கள்...
  • மும்-பை-யில் எனது நெருங்-கிய உற-வி-னர் வீட்-டுக்கு எதி-ரே-தான் ரஜ்-னீஷ் அப்-போது வசித்-தார். அத-னால் அப்-பா-யின்ட்-மென்ட் ஏதும் பெறா-மல் நாங்-கள் அவரை நேரே சந்-திக்கச் சென்-றோம். அதா-வது, நானும் என் அப்-பா-வும். அது என் வாழ்க்-கை-யில் மிக முக்கி-ய-மான தரு-ணம். அது-தான் எங்-கள் முதல் சந்-திப்பு.
பக-வா-னின் (ரஜ்-னீஷ்) செய-லா-ளர் மா லட்சுமி, பக-வா-னின் அனு-மதி பெற்று எங்-களை உள்ளே அனு-ம-தித்-தார்.
ஒரு அறை-யில் வச-தி-யான நீண்ட கைப்-பிடி நாற்-கா-லி-யில் கால்-களை குறுக்காகப் போட்-ட-படி ரஜ்-னீஷ் அமர்ந்-தி-ருந்-தார். அவ-ரைத் தவிர அறை-யில் வேறு யாரும் இல்லை. நான் அறைக்குள் நுழைந்-த-தும் என்-னைப் பார்த்-துப் பிர-கா-ச-மா-கப் புன்-ன-கைத்-தார், வாஞ்-சை-யோடு கைகளை விரித்-தார். அவ-ரது கரங்க-ளுக்குள் நான் அப்-ப-டியே போய் விழுந்-தேன். அவ-ரது நெஞ்-சோடு என்னை இறுக அணைத்துக் கொண்-டார். பர-வ-சத்-தில், எல்-லாம் அப்-ப-டியே உறைந்-து-விட்-டது போலி-ருந்-தது எனக்கு. இனி இவர்-தான், இவரை விட்டு விலகி என்-னால் வாழ   முடி-யாது என்று நான் அந்தக் கணத்-தில் முடிவு செய்-தேன்.
ஷீலா... நீ நாளை மதி-யம் 2.30-க்கு என்னை வந்து பார் என்-றார் பக-வான். அன்று இர-வு-தான் என் வாழ்க்-கை-யில் மிக நீண்ட இரவு. மறு-நாள், நான் மிக மிகப் பொறு-மை-யி-ழந்து காத்-தி-ருந்த அந்த நேரம் வந்-தது. பக-வா-னி-டம் ஓடிச் சென்-றேன். அவர் முந்-தைய தினத்தை விட மிக அழ-காக இருந்-தார்.
நான் அவ-ரி-டம், என்-னால் சாப்-பிட முடி-ய-வில்லை, தூங்க முடி-ய-வில்லை, பைத்-தி-யம் பிடித்-தது போலி-ருக்கி-றது என்-றேன்.
அவர் சிரித்-த-படி, ஷீலா... இது ரொம்ப சிம்-பி-ளான விஷ-யம். நீ என்னை மிக-வும் நேசிக்கி-றாய். நானும் உன்னை ரொம்-ப-வும் நேசிக்கி-றேன் என்-றார்.

றீ ஆசிரமத்தில் ஆரம்-பத்-தில் இட-நெ-ருக்க-டி-யா-லும், கட்-டுப்-பா-டற்ற பழக்க- வ-ழக்கங்க-ளா-லும் அசுத்-த-மும் வியா-தி-களும் பர-வின. பாலு-ணர்வைக் கட்-டுப்ப-டுத்-து-வ-தற்கு எதி-ராக எப்-போ-தும் பக-வான் பேசி வந்-தார். எனவே ஆசி-ர-ம-வா-சி-கள் தங்-களின் பாலி-யல் இச்-சை-களை சர்வ சுதந்-தி-ர-மாக வெளிப்-ப-டுத்-தி-னர்.
அதன் விளை-வாக, ஆசி-ர-மத்-தில் பால்-வினை நோய்-கள் ஒரு பெரும் பிரச்-சி-னை-யா-கின. பாலி-யல் நோய்த் தொற்-று-க-ளைத் தடுப்-பது கடி-ன-மான விஷ-ய-மா-னது.
சில ஆசி-ர-ம-வா-சி-கள், ஒரு மாதத்-தில் மட்-டும் 90 வெவ்-வேறு வித-மான செக்ஸ் தொடர்-பு-களில் ஈடு-பட்-ட-னர். எப்-போ-தும் ஆசி-ர-மம் பர-ப-ரப்-பாக இருக்கும் வேளை-யில் அவர்க-ளுக்கு செக்ஸுக்கு எப்-படி நேர-மும், சக்தி-யும் கிடைக்கி-றது என்று எனக்கு வியப்-பாக இருந்-தது. அது குறித்து ஒரு-வ-ரி-டம் நான் கேட்-க-வும் செய்-தேன்.
அதற்கு அவர் சிரித்-தபடி, தான் ஒவ்-வொரு நாளும் மூன்று முறை செக்ஸ் உறவு வைத்-துக்-கொள்-வ-தாகக் கூறி-னார். காலைச் சிற்-றுண்-டிக்கு முன்பு ஒன்று, மதிய உண-வுக்குப் பின் ஒன்று, இரவு உண-வுக்குப் பின் ஒன்று, என்-றார்.
நான் அவ-ரி-டம், ஆக, ஒவ்-வொரு உண-வின்-போ-தும் நீங்-கள் ஓர் இனிப்பு சாப்-பி-டு-கி-றீர்கள்? என்று நகைச்-சு-வை-யாக சொன்-னேன்.
ஒட்-டு-மொத்த மோச-மான சுகா-தார நிலை கார-ண-மா-க-வும், அலர்ஜி, ஆஸ்-துமா,
முது-கு-வலி போன்-ற-வற்-றா-லும் பக-வா-னும் அப்-போது பாதிக்கப்-பட்-டார். அவ-ரது ஆரோக்கி-யத்தைக் காக்க நாங்-கள் மிக-வும் கஷ்-டப்-பட்-டோம். பக-வா-னுக்கு வாச-னைத் திர-வி-யங்கள், பெர்-பி-யூம்கள் அலர்ஜி என்-ப-தால், பக்தர்களை மோப்-பம் பிடிப்-ப-தற்கு ஆட்-கள் நிய-மிக்கப்-பட்-ட-னர். அவர்கள் மோப்-பம் பிடித்து, வாச-னைத் திர-வியங்க-ளைப் பூசிய பக்தர்களை பக-வானை நெருங்கா-மல் தடுத்-து-வி-டு-வார்கள்.
  • பக-வான் வியா-பார நுணுக்கங்க-ளும் அறிந்-த-வர். அவர் தான் வழங்-கும் விஷ-யங்கள், அவற்-றுக்கான மதிப்பு, அவற்றை சந்-தைப்-ப-டுத்-து-தல் எல்-லா-வற்-றை-யும் அறிந்-தி-ருந்-தார். ஆசி-ரம செல-வு-கள் அனைத்-தை-யும் சமா-ளிப்-ப-தற்கான வரு-வாய் தாரா-ள-மாக வர வேண்-டும் என்று அவர் நினைத்-தார். ஆரம்-ப-கட்-ட-மாக, அவ-ரது சொற்-பொ-ழி-வு-களுக்கு நுழை-வுக்கட்-ட-ணம் விதிக்கப்-பட்-டது. ஆசி-ர-மத்-தில் இருந்த தெர-பிஸ்ட்கள் அதைப் பின்-பற்-றி-னர். பல்-வேறு தெரபி- களு-டன், பபே முறை-யில் உணவு வழங்கப்-படும். அதற்குக் கட்-டணம். ஆசி-ரமத்-துக்கு வரு-வோர் தாங்-கள் விரும்-பும் தெர-பியை பணம் கட்-டிப் பெற-லாம். ஆசி-ரமத்-தின் வேறு பல சேவை-களுக்கும் கட்-ட-ணம் விதிக்கப்-பட, பணம் தண்-ணீ-ரைப் போல கொட்ட ஆரம்-பித்-தது.
பாலு-றவு வேட்-கை-தான் மனி-த-னின் கஷ்-டங்க-ளுக்கு எல்-லாம் கார-ணம், அவன் அதை முழு-மை-யாக அனு-ப-வித்து அதி-லி-ருந்து மீண்-டு-வர வேண்-டும் என்-பது பக-வா-னின் கருத்து.
எனவே, ஆசி-ர-மத்-தில் வழங்கப்-பட்ட அனைத்து தெர-பி-களி-லும் பாலி-யல் பிர-தான அம்-ச-மாக இருந்-தது. அடக்கி வைக்கப்-படும் பாலு-ணர்வு  பாலி-யல் வக்கி-ரத்-தில் இருந்து விடு-தலை பெற வேண்-டும் என்-பதே நோக்க-மாக இருந்-தது. எனவே எந்தக் கட்-டுப்-பா-டு-மின்றி செக்ஸ் ஏற்-கப்-பட்-டது.
செக்ஸைப் பொறுத்-தவரை ஆசி-ரமத்-தில் தடுக்கப்-பட்-டது எது-வும் இல்லை, இது-தான் ஒழுக்கம் என்று எது-வும் வரை-ய-றுக்கப்-ப-ட-வில்லை. நாங்-கள் அனை-வ-ரும் பொறாமை, தன்-னு-ரிமை உணர்வு இல்-லா-மல் இருக்க வேண்-டும் என்று பக-வான் விரும்-பி-னார். நாங்-கள் எங்-களின் செக்ஸ் விருப்-பங்களை அடுத்-தவரின் ஒப்-புதலோடு வெளிப்-படுத்-தலாம் என்று அவர் கூறி-னார். இந்த விஷ-யத்-தில் நீதி-நெறி உணர்வு, குற்ற உணர்-வைத் தாண்-டிச் செல்ல வேண்-டும் என்று பகவான் சொன்னார். இதன் மூலம் ஞானம் பெறப்-போ-கி-றோம் என்ற அதீத உற்-சா-கத்-தில் பல-ரும் குழு-வாக செக்ஸ் செயல்-பா-டு-களில் ஈடு-ப-டத் தொடங்-கி-னர். ஆனால் யாரும், எப்-போ-தும் எவ-ரை-யும் எதற்கா-க-வும் நிர்ப்-பந்-திக்க-வில்லை.
  • நாங்-கள் புனே-யில் இருந்-த-போது, பக-வா-னுக்கு மிக அந்-த-ரங்க-மாக விவேகா என்ற பெண் இருந்-தாள். அவள் தன்னை பக-வா-னின் மனைவி என்று கூறிக்-கொண்-டாள். பக-வா-னுக்கு நெருக்க-மாக இருந்த மற்ற பெண்-கள் மீது பொறாமை கொண்ட விவேகா, பக-வா-னி-டம் அது-கு-றித்-துச் சண்-டை-யிட்-டும் வந்-தாள்.
இந்-நி-லை-யில், பக-வா-னு-ட-னான உற-வில் அவள் கர்ப்-ப-மா-னாள். அத்-த-க-வலை வெளி-யிட்டு பக-வா-னின் பெயரை நாற-டிப்-பேன் என்று அவள் மிரட்-டினாள். நல்-லவே-ளை-யாக, பக-வா-னின் பக்தர்க-ளி,ல் ஒரு-வ-ரான மகப்-பேறு மருத்-து-வர் ஒரு-வ-ரின் உத-வி-யால் விவே-கா-வின் கரு கலைக்கப்-பட்-டது.
அதன்-பி-ற-கும் விவேகா உட-னான பக-வா-னின் பிரச்-சினை முற்றி, இவ-ளுக்கு உடனே இங்-கிலாந்-துக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து அனுப்-பிடு. இனி இவ ஒரு நொடி கூட இங்கே இருக்கக் கூடாது என்று என்-னி-டம் சப்-த-மிட்-டார் பக-வான். நானும் சரி என்-றேன். பின்-னர், அப்பெண்ணைக் கடை-சி-யாக ஒரு-முறை மன்-னித்து, தன்-னு-டன் இருக்க அனு-ம-திப்-ப-தாகக் கூறி-னார் பக-வான்.
அப்-போ-து-தான், பக-வா-னுக்கும் சாதா-ரண மனி-தர்க-ளுக்குரிய உணர்-வு-கள் உண்டு, ஞானம் பெற்ற அவ-ரா-லும் பெண் பிடி-யில் இருந்து மீள முடி-ய-வில்லை என்-பதை நான் உணர்ந்-தேன். றீ ஒரு-கட்-டத்-தில், எல்-லாம் சீராக நடை-பெ-றத் தொடங்-கின. குறிப்-பிட்ட கால இடை-வெ-ளி-களில் நூல்-கள் வெளி-யி-டப்-பட்-டன, விழாக்கள் நடத்-தப்-பட்-டன, ஐரோப்-பிய நாடு-களில் பக-வா-னின் மையங்கள் அரு-மை-யாக இயங்கிக் கொண்-டி-ருந்-தன. பக்தர்க-ளிடம் இருந்து காணிக்-கை-களைப் பெறு-வதற்-குப் -புதிய புதிய வழி-களும் கண்-டு-பி-டிக்கப்-பட்டுக் கொண்-டி-ருந்-தன. பக-வான் சொன்-ன-படி எல்-லாம் ஒழுங்காக, சீராக நடை- பெற்-றுக்-கொண்-டி-ருந்-தன.
பக-வான் இவற்-றால் உற்-சா-கமோ, மகிழ்ச்-சியோ அடை-ய- வில்லை. மாறாக அவ-ருக்கு போர-டித்-தது. அந்த அலுப்-பில் திடீ-ரென்று அவர் ஒரு-நாள் என்-னி-டம், ஒரே மாதத்-தில் 33 ரோல்ஸ் -_ ராய்ஸ் ஆடம்-பர கார்-களை வாங்-கும்-படி கூறி-னார். அப்-போது ஏற்-கெ-னவே ஆசி-ரமத்-தில் 90 புத்-தம்- பு-திய ரோல்ஸ் _ ராய்ஸ் கார்-கள் இருந்-தன. மேலும் புதிய 33 ரோல்ஸ் _ ராய்ஸ் கார்-கள் வாங்க வேண்-டும் என்-றால் பல-கோடி ரூபாய் தேவை. என்ன செய்-வது என்று புரி-யா-மல், அவ-ரி-டம் மெது-வாக விஷ-யத்-தைச் சொன்-னேன். மறு-நாள் அவர் என்-னிடம் ஒரு பட்-டியலைக் கொடுத்-தார். அதில், ஐம்-பது, அறு-பது பெயர்கள் இருந்-தன. எல்-லோ-ருமே பெரும் பணக்கா-ரர்கள். அவர்களை அழைக்கச் சொன்ன பக-வான், 21 பேர் ஞானம் பெற்-ற-தாக அறி-வித்-தார். அவர்கள் ஆசி-ர-மத்-தின் உள்-வட்-டத்-தில் இணைந்-த-னர். அவர்க-ளால் ரோல்ஸ் _ ராய்ஸ் கார்-கள் வாங்-கு-வ-தற்கான பணப் பிரச்-சி-னை-யும் தீர்ந்-தது.
-விடுதலை ஞா.ம.,9.2.13

வெள்ளி, 6 நவம்பர், 2015

மாரியம்மன் கோயிலில் சோரம் புரிந்த அர்ச்சகனின் அடாத செயல்


திருச்சிராப்பள்ளி பீமநகரிலுள்ள மாரியம்மன் கோயிலுக்கு அர்ச்சகரான ஒரு பட்டர் சென்ற 11.9.1929 புதன்கிழமையன்று இரவு சுமார் 9 மணிக்கு மாரியம்மன் தரிசனத்துக்கென வந் திருந்த ஒரு பெண்ணை பலாத்காரப்படுத்தி அம்மன் சந்நிதி யிலே ஒரு இருட்டு நிறைந்த இடத்தில் சோரம் புரிந்து கொண்டிருந்தான்.
அச்சமயம் கோயிலுக்கு அம்மன் தரிசனத்துக்கென வேறு சிலர் வரவும், இவர்களிருவரும் மடப்பள்ளிக்குள் ஓடி ஒளிந்தனர்.
இவர்கள் ஒளிவதைக் கண்டு சந்தேகமுற்று தரிசனத்துக்கு வந்திருந்தவர்கள் இவர்களைப் பிடித்து விசாரிக்கையில் தனது அறியாமையினால் செய்த குற்றத் திற்காக மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டதின் பேரில் அப் பட்டனிடமிருந்த கோயில் சாவி சாமான்கள் முதலான வைகளைக் பிடுங்கிக்கொண்டு அவனைத் துரத்திவிட்டனர்.
இந்தப் பார்ப்பனன் இதற்கு முன்னும் பல அடாத செயகைகளை செய்து வந்ததைக் குறித்து பல பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் தர்மகர்த்தாவிடம் முறையிட்டுக் கொண்டும் அவர் இதைக் கவனிக்காமல் அசட்டையாயிருந்து விட்டாராம்.
(குடிஅரசு, 1929)
குறிப்பு: காஞ்சிபுரம் தேவநாதனுடைய அண் ணன்கள் அத்திம்பேர்கள் அந்தக் காலத்திலிருந்தே கோயில்களில் இந்தத் திருத் தொண்டை புரிவதற் கென்றே இருந்தார்கள் போலும், கடவுளின் பெய ராலும், பக்தியின் பயத்தாலும் இப்படி எத்தனை பெண்கள் இவன் போன்றவர்களால் சீரழிக்கப்
பட்டனரோ!


கடவுள் கருணை உள்ளவரா?
ஆசிரியர்: கடவுள் இல்லாமல் உயிரைப் படைக்க முடியுமா?
மாணவன்: முடியும் சார்!
ஆசிரியர்: எப்படி?
மாணவன்: இன்னைக்கு எங்க மாட்டை ஆஸ்பத்திரிக்கு ஓட்டிக்கிட்டுப் போயிருந் தேன்.
ஆசிரியர்: மாட்டுக்கு என்ன?
மாணவன்: வாலிலே புண், அதிலிருந்து ஒரு நூறு புழு இருக்கும் சார்!
ஆசிரியர்: அந்தப் புழுவையும் கடவுள்தான் படைத்தார்.
மாணவன்: அப்படின்னா, கடவுள் கருணை உள்ளவருன்னு சொன்னீங்களே, அது அசல் பொய்யா சார்?
ஆசிரியர்: எப்படி?
மாணவன்: பாவம், வாயில்லா ஜீவனாகிய ஒரு மாட்டு புண்ணுல போய் புழுவைப் படைப்பவர் கருணை உள்ளவரா சார்?
ஆசிரியர்: ?  ?  ?
-விடுதலை,30.10.15

ஞாயிறு, 1 நவம்பர், 2015

மத போதகரின் மன்மத லீலைகன்னியாகுமரி, அக்.20 கன்னியாகுமரி அருகே விடுதியில் இளம் பெண்களுடன் லீலையில் ஈடு பட்ட கிறிஸ்தவ மத போதகர் கைது.  இது தான் மத போதகரின் இலட்சணமா? கன்னியாகுமரி காவல் நிலைய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு விடுதியில் மயிலாடி காமராஜர் புதூரை சார்ந்த  கிறிஸ்தவ மத போதகர்  பெண்களுடன் லீலையில் ஈடுபட்டு கொண் டிருந்தார்.  உடனடியாக அவரை காவல் துறை யினர் கைது செய்தனர்.இது தான் கிறிஸ்தவ மத போதகரின் இலட்சணமா? மதம் என்ற பெயரில் பெண்களை மயக்கி இது போன்ற லீலையில் ஈடுபடலாமா?
இந்து மதத்தில் நித்தியானந்தா போன்று கிறிஸ் தவ மதத்திலும் இவரைப் போன்ற பாதிரியார் பலர் உள்ளனர்.
-விடுதலை,20.10.15

  போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோனின் காமலீலை: கையும் களவுமாக லாட்ஜில் பெண்களுடன் பொலீஸாரிடம் பிடிபட்டது!


போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோனின் காமலீலை: கையும் களவுமாக லாட்ஜில் பெண்களுடன் பொலீஸாரிடம் பிடிபட்டது!
கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - பாதிரி மற்றும் பெண்கள் பிடிபட்டனர்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – பாதிரி மற்றும் பெண்கள் பிடிபட்டனர்
கன்னியாகுமரியில் சமீபகாலத்தில் பாலியல் குற்றங்கள் அதிகமாகவே நடந்து வருகின்றன. குறிப்பாக கிருத்துவ மிஷனரிகள் அவற்றில் அதிகமாக ஈடுபட்டுள்ளதும் செய்திகள் மூலம் வெளியாகியுள்ளன. பெண்கள், வயது வந்த சிறுமிகள்-சிறுவர்கள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். “பிடோபைல்” – சிறார் கற்பழிப்பு, பாலியன் வன்புணர்ச்சி என்று விசயங்கள் வந்தாலும், அவற்றில் கிருத்துவர்களின் பங்கு இருப்பதனால் விசயங்கள் மறைக்கப்படுகின்றன. கேரளாவுக்கு அறுகில் இருப்பதனால், அங்கு குற்றம் செய்தவர்கள் இங்கு வந்து தங்குவதும், இங்குள்ளவர்கள் அங்கு சென்று மறைவாக வாழ்வதும் நடந்து வருகின்றது. போலீஸ் விசாரணைகளில் அத்தகைய நிலை வெளிவருகிறது. ஆனால், இவற்றினால் பாதிக்கப்படுவது பெண்கள் தாம். பெண்களின் மீதான வன்முறை தடுக்கப்பட வேண்டும் என்று சில நிறிவனங்கள் கூட்டங்கள், மாநாடுகள் நடத்தினாலும்[1], பிரச்சினையைத் தீர்ப்பதாக இல்லை. டாஸ்மாக் கடைகள் மூடவேண்டும், சிறுபான்மையினரின் உரிமைகள் காக்கப்படவேண்டும் என்றெல்லாம் பேசினாலும்[2], இத்தகைய குற்றங்களைப் பற்றி மூச்சு விடுவதில்லை. விபச்சாரம் நடப்பதும், கைது நடவடிக்கையும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன[3].
லீபுரம் சர்ச், கன்னியாகுமரி
லீபுரம் சர்ச், கன்னியாகுமரி
லீபுரம் சர்ச், கன்னியாகுமரி
கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - கைது
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது
செலின் ஜெப சுவீஸ் ஆரோன் கைது- கன்னியாகுமரி
செலின் ஜெப சுவீஸ் ஆரோன் கைது- கன்னியாகுமரி
கன்னியாகுமரி விபச்சாரத்தில் உள்ளூர்வாசிகளின் பங்கு: சுற்றுலா ஸ்தலம் என்றதால் விபச்சாரம் நடக்கிறது என்றாலும், உள்ளூர்வாசிகளின் பங்கும் வெளிப்படத்தான் செய்கிறது[4]. முறைகள் மாறினாலும்[5], விசயம் மாறாமல் தான் இருந்து வந்துள்ளன[6]. இங்கு சிறுபான்மையினர்-பெரும்பான்மையினர் என்று பிரித்துப் பார்க்கவும் முடியாது. ஏனெனில், இங்கு கிருத்துவர்கள் தாம் அதிகமாக உள்ளனர். இதில் படித்தர்கள்-படிக்காதவர்கள்[7] என்ற வேறுபாடும் இல்லாமல் கலாச்சாரச் சீரழிவு நடந்து வருகின்றது[8]. இங்கு கிருத்துவர்களையோ, கிருத்துவமதத்தையோ குறைகூறுவதாக எண்ன வேண்டாம், ஆனால், அவர்களை சேர்ந்தவர்கள் ஈடுபடுவதாலும், அவர்கள் மதரீதியில் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என்று பறைச் சாற்றிக் கொள்வதினாலும், அவர்களில் பலர் ஏன் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்பது தான் கேள்வி. இந்நிலையில் தான் லீபுரம் போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் காமலீலை வருகிறது.
கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - கைது - ஒரு பெண்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – ஒரு பெண்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – ஒரு பெண்
கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - கைது - இன்னொரு பெண்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – இன்னொரு பெண்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – இன்னொரு பெண்
கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - கைது - பெண்கள் வெளியே வருதல்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – பெண்கள் வெளியே வருதல்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – பெண்கள் வெளியே வருதல்.
கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - பாதிரி மற்றும் பெண்கள்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – பாதிரி மற்றும் பெண்கள்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – பாதிரி மற்றும் பெண்கள்.
கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது
கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது
கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது.
செலின் ஜெப சுவீஸ் ஆரோன் கைது- கன்னியாகுமரி லாட்ஜில் உல்லாசம்
செலின் ஜெப சுவீஸ் ஆரோன் கைது- கன்னியாகுமரி லாட்ஜில் உல்லாசம்
ஒழுக்கம் இல்லாத மதபோதகரும், அவரது கூடா ஒழுக்கமும், கணவன்வி உறவு பாதிப்பும்: கன்னியாகுமரியில் லாட்ஜில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதகரிடம் மேல் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மனு கொடுத்தார்[9]. கன்னியாகுமரியில் விபசார வழக்கில் சிக்கியதால் போதகரின் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதில் தற்காலிக போதகர் லீபுரம் சபைக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். தற்காலிகமாக எனும்போதே, சர்ச் இப்பிரச்சினையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தேரிகிறது. சிறிது காலத்தில், இவ்விசயம் மறக்கப்பட்டுவிடும், மறுபடியும் அதே ஆள் தனது வேலைக்கு வந்துவிடுவார் அல்லது வேறொரு இடத்தில் அதை செய்ய ஆரம்பிப்பார். போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன், என்ற இவருக்கும், ஈத்தாமொழி தர்மபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த அந்த பெண்ணின் கணவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்[10]. இதுவே வேடிக்கையாக இருக்கிறது. மனைவிக்கும் மதபோதகருக்கும் தொடர்பு என்றால், அம்மதபோதகரின் ஒழுக்கம் சரியில்லை, அம்மதத்திலும் ஒழுக்கம் (இந்த கள்ள உறவைப் பொறுத்தவரையில்) இல்லை என்றாகிறது. கிருத்துவமதத்தில், அடுத்தவன் மனைவியை பார், அவளுடன் கள்ள உறவு வைத்துக் கொள் என்று போதிப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அவையெல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் தான் சந்தேகங்கள் எழுகின்றன. இதையடுத்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போதகர் செலினையும், அந்த பெண்ணையும் எச்சரித்து அனுப்பினர். இருவரும் ஒன்றாக சந்திக்க கூடாது என எழுதியும் வாங்கினர்[11]. அதன் பின்னரும் போதகர் தொடர்ந்து தனது கள்ளக்காதலியை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது[12].
கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - கைது - மூன்றாவது பெண்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – மூன்றாவது பெண்
போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் தனியாக மூன்று பெண்களுடன் என்ன செய்து கொண்டிருந்தார்?: கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகக்கூறி போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன், லாட்ஜ் உரிமையாளர் ஜேம்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடப்பட்டனர். தொடர்ந்து குற்றம் செய்தாலும், ஜாமீனில் விடப்பாட்டார் என்றால், அதற்காக முறைப்படி, வக்கில் வந்துள்ளார், ஆவன செய்துள்ளாற் என்று தெரிகிறது. அப்படியென்றால், ஆரோன் எல்லாவற்றிற்கும் தயாகத்தான் இருக்கிறான் என்று தெரிகிறது. வெளியாகியுள்ள வீடியோவைப் பார்க்கும் போது, மேலும் விசயங்கள் வெளிப்படுகின்றன. ஆரோன் போலிஸாருக்கு பயந்ததாகத் தெரியவில்லை. உள்ளேயிருந்து மூன்று பெண்கள் வெளிவருகின்றனர். அவர்களில் ஒரு பெண் தான், கண்ணீர் விட்டு அழுகிறார். மற்ற இருவர்களும் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள். போலீஸாரின் கேள்விகளுக்கும் தைரியமாக பதில் சொல்கின்றனர். ஒருவருடன் மூன்று பெண்கள் ஏன் ஒரே அறையில் இருக்க வேண்டும், அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்ற கேள்விகள் எழலாம். ஆனால், கையும்-களவுவுனமாக மாட்டிக் கொண்டதால், உண்மை வெளிவந்தே ஆகவேண்டும்.
கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது.-படம்
கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது.-படம்
பெண்களில் ஒருவரின் கணவர் நாகர்கோவில் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த மனு[13]: அவர்களுடன் இருந்த 2 பெண்களும் மீட்கப்பட்டனர். அந்த பெண்களில் ஒருவரின் கணவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு 2ஆண் குழந்தைகளும்ஒரு பெண் குழந்தையும் உண்டுநான்சலவைத் தொழில் செய்து வருகிறேன்எங்கள் ஊரில் செலின்ஜெபசுவீஸ் ஆரோன் என்பவர் மதபோதகராக ஈத்தாமொழி தர்மபுரம்பகுதியில் பணியாற்றினார்அவர் எனது மனைவியிடம் ஆசைவார்த்தைகளைச் சொல்லி அவரது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளார்இதுதொடர்பாக கடந்த மாதம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டிடம் எனது மனைவி மற்றும் போதகர் மீது புகார்கொடுத்தேன்அதனை கன்னியாகுமரி மகளிர் போலீஸ் நிலையபோலீசார் விசாரித்தனர்அப்போது இருவருக்கும் கள்ளத்தனமானதொடர்பு கிடையாது என்று எழுதிக்கொடுத்துவிட்டு சென்றனர்.இந்தநிலையில் நேற்று முன்தினம் பொதுமக்கள் முன்னிலையில்கன்னியாகுமரி பகுதியில் ஜேம்ஸ் என்பவரின் லாட்ஜில்அரைகுறை ஆடையுடன் இருந்த போதகரை போலீசார் கைதுசெய்தனர்அவருடன் இருந்த எனது மனைவியையும் போலீஸ்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்பின்னர் அவர்களைகோர்ட்டுக்கு கொண்டு செல்லாமல் நேற்று அதிகாலை ஜாமீனில்விட்டுவிட்டனர்[14]எனவே அவர்கள் 2 பேர் மீது நடவடிக்கைஎடுக்கவும்அவர்கள் மீது மேல் விசாரணை செய்ய கன்னியாகுமரிபோலீசாருக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்”, இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்[15]. கர்த்தர் இவர்களுக்கு சாந்தத்தையும், அமைதியையும் கொடுப்பாராக!
© வேதபிரகாஷ்
18-10-2015