மராட்டிய மாநிலம் காட்கேபரை சேர்ந்தவர் மந்திரவாதி நவீன் மாலிக் .அதே பகுதியில் இருந்த ஒருவர் நீண்ட நாட்களாக முட்டி வலியால் அவதி பட்டு வந்தார். பல மருத் துவர்களிடம் சிகிச்சை எடுத்தும் அவரது முட்டி வலி குணமாக வில்லை. இறுதியாக மந்திரவாதி நவீன் மாலிக்கை சென்று பார்த்தார். அவரும் சிகிச்சை அளித்து வந்தார்.
சிகிச்சைக்காக மந்திர வாதி அடிக்கடி முட்டி வலி உடையவரின் வீட் டுக்குச் என்று வரத் தொடங் கினார். அப்போது அவரது 25 வயது மகளை பார்த்து உள்ளார். அந் தப் பெண்னை அடைய ஆசைபட்ட மந்திரவாதி அதற்கான நேரத்தை எதிர்பார்த்து இருந்தார். கடந்த புதன் கிழமை சிகிச்சைக்காக வீட்டுக்குச் சென்று உள்ளார். அப் போது வீட்டில் யாரும் இல்லை. இளம் பெண் மட்டும் தனியாக இருந்து உள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்த நினைத்த மந்திரவாதி இளம்பெண் ணின் அறையைச் சுற்றி பேய்கள் மற்றும் தீய சக்திகள் நடமாடுவதாக வும் அவற்றிடம் இருந்து விடுவிக்கப் போவதாகவும் கூறி ஒரு வித பொடியைத் தூவி உள்ளார். பின்னர் இளம் பெண்ணின் முகத் திலும் பொடியைத் தூவி னார். இதில் இளம் பெண் மயக்கம் அடைந்தார். மந் திரவாதி தனது ஆசையை நிறைவேற்றி கொண்டு அங்கிருந்து தப்பினார்.
இது குறித்து காட் கேபர் காவல் நிலையத் தில் புகார் செய்யபட்டது காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து மந்திர வாதியை கைது செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
-விடுதலை, 6.9.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக