திருச்சிராப்பள்ளி பீமநகரிலுள்ள மாரியம்மன் கோயிலுக்கு அர்ச்சகரான ஒரு பட்டர் சென்ற 11.9.1929 புதன்கிழமையன்று இரவு சுமார் 9 மணிக்கு மாரியம்மன் தரிசனத்துக்கென வந் திருந்த ஒரு பெண்ணை பலாத்காரப்படுத்தி அம்மன் சந்நிதி யிலே ஒரு இருட்டு நிறைந்த இடத்தில் சோரம் புரிந்து கொண்டிருந்தான்.
அச்சமயம் கோயிலுக்கு அம்மன் தரிசனத்துக்கென வேறு சிலர் வரவும், இவர்களிருவரும் மடப்பள்ளிக்குள் ஓடி ஒளிந்தனர்.
இவர்கள் ஒளிவதைக் கண்டு சந்தேகமுற்று தரிசனத்துக்கு வந்திருந்தவர்கள் இவர்களைப் பிடித்து விசாரிக்கையில் தனது அறியாமையினால் செய்த குற்றத் திற்காக மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டதின் பேரில் அப் பட்டனிடமிருந்த கோயில் சாவி சாமான்கள் முதலான வைகளைக் பிடுங்கிக்கொண்டு அவனைத் துரத்திவிட்டனர்.
இந்தப் பார்ப்பனன் இதற்கு முன்னும் பல அடாத செயகைகளை செய்து வந்ததைக் குறித்து பல பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் தர்மகர்த்தாவிடம் முறையிட்டுக் கொண்டும் அவர் இதைக் கவனிக்காமல் அசட்டையாயிருந்து விட்டாராம்.
(குடிஅரசு, 1929)
குறிப்பு: காஞ்சிபுரம் தேவநாதனுடைய அண் ணன்கள் அத்திம்பேர்கள் அந்தக் காலத்திலிருந்தே கோயில்களில் இந்தத் திருத் தொண்டை புரிவதற் கென்றே இருந்தார்கள் போலும், கடவுளின் பெய ராலும், பக்தியின் பயத்தாலும் இப்படி எத்தனை பெண்கள் இவன் போன்றவர்களால் சீரழிக்கப்
பட்டனரோ!
பட்டனரோ!
கடவுள் கருணை உள்ளவரா?
ஆசிரியர்: கடவுள் இல்லாமல் உயிரைப் படைக்க முடியுமா?
மாணவன்: முடியும் சார்!
ஆசிரியர்: எப்படி?
மாணவன்: இன்னைக்கு எங்க மாட்டை ஆஸ்பத்திரிக்கு ஓட்டிக்கிட்டுப் போயிருந் தேன்.
ஆசிரியர்: மாட்டுக்கு என்ன?
மாணவன்: வாலிலே புண், அதிலிருந்து ஒரு நூறு புழு இருக்கும் சார்!
ஆசிரியர்: அந்தப் புழுவையும் கடவுள்தான் படைத்தார்.
மாணவன்: அப்படின்னா, கடவுள் கருணை உள்ளவருன்னு சொன்னீங்களே, அது அசல் பொய்யா சார்?
ஆசிரியர்: எப்படி?
மாணவன்: பாவம், வாயில்லா ஜீவனாகிய ஒரு மாட்டு புண்ணுல போய் புழுவைப் படைப்பவர் கருணை உள்ளவரா சார்?
ஆசிரியர்: ? ? ?
-விடுதலை,30.10.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக