ஞாயிறு, 15 நவம்பர், 2015

பாதிரியார் இவர்!


வழிபட வந்தவர்களையே உணவாக்குவதா? பாதிரியார் பக்தர்களையே உணவாக்கிக் கொண்டதாக லாஸ் ஏஞ்ஜெல்ஸ் காவல்துறை வெள்ளிக்கிழமையன்று குற்றம் சாட்டியுள்ளது.
20 பெண்களுக்கு மேல் பாதிரியார் வன்புணர்ச்சி செய்ததாகவும், அவர்களில் பலர் ஸ்பானிஷ் மொழி பேசும் ஆவணங்களற்று குடிபெயர்ந்தோர் ஆவர்.
2004 அக்டோபரிலேயே இந்தத் தவறுகள் நடக்க ஆரம்பித்துள்ளன. நார்வாக்கிலுள்ள லாஸ் பியூனஸ் நவாஸ் தேவாலயத்தில் காஸ்ட்ரோ துணைப் பாதிரியாராகப் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து 2012 செப்டம்பர் வரை தொடர்ந்து இந்த தவறுகள் நடந்து வந்துள்ளதாக காவல்துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
சென்ற வெள்ளிக்கிழமை காஸ்ட்ரோ நார்வாக்கில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு லாஸ் ஏஞ்ஜெல்ஸ் சிறையில், 2 மில்லியன் டாலர் பிணைத் தொகைக்குப் பதிலாக அடைக்கப்பட்டிருக்கிறார். 18லிருந்து 39 வயதுக் குட்பட்ட பெண்கள், காஸ்ட்ரோவை மூன்றாவது நபர் ஒருவருடன் தொடர்புபடுத்த, அவர் துப்பறி பவர்களிடம் கூறியதாக அதிகாரிகள் கூறினர்.
அந்தப் பெண்களின் ஏதுமிலா நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு பாதிரியார் அவர்களைப் பாழ்ப் படுத்தி விட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர் அந்தப் பெண்களின் மனங்களில் அச்சத்தை ஊட்டி, அவர்களைப்பற்றி அவர் அதிகாரிகளிடம் புகார் கூறினால், அவர்கள் நாடு கடத்தப்படு வார்கள்; அத்துடன் பொது மக்களிடையே அவமானத்துக்கும் கேலிக்கும் ஆளாவார்கள் என்று பயமுறுத்தி உள்ளார்.
வன்புணர்ச்சி, வாய் வழிப்புணர்ச்சி உட்பட்ட ஆறு கடும் குற்றச்சாட்டுகள், காஸ்ட்ரோ மீது கூறப்பட்டுள்ளன. வேறு யாரும் இவ்வாறு பாதிரியாரால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை பற்றி துப்பறிவாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
-விடுதலை,5.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக