வெள்ளி, 23 அக்டோபர், 2026

கென்யாவில் 190 குழந்தைகளைப் பட்டினி போட்டுக் கொன்ற பாதிரியார்



நைரோபி அக். 23- கென்யாவில் 190 குழந்தைகள் மற்றும் ஒரு பெரியவரைப் பட்டினிப் போட்டுப் படுகொலை செய்த வழக்கில், ‘குட்நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச்’ (Good News International Church) அமைப்பின் தலைவரான மதபோதகர் பால் மக்கென்சி (Paul Mackenzie) மற்றும் அவரது ஆதரவாளர்கள் 28 பேர் குற்றவாளிகள் என மொம்பாசா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கென்யாவின் ஷககோலா காட்டுப் பகுதியில் 800 ஏக்கர் பரப்பில் மக்கென்சியின் சபை அமைந்துள்ளது. தன்னைத் தானே மத போதகர் என அறிவித்துக்கொண்ட இவர் “இயேசுவை நேரில் சந்திக்க வேண்டும் என்றால், குழந்தைகள் உட்பட அனைவரும் பட்டினி இருந்து உயிரை விட வேண்டும்” என தனது ஆதரவாளர்களுக்குப் போதனை செய்துள்ளார்.

முறையான கல்வியும், நவீன மருத்துவச் சிகிச்சைகளும் “சாத்தானின் வழிமுறைகள்” எனக் கூறி, ஆதரவாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை அவர் தடை செய்துள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்தியப் பெருங்கடலை ஒட்டிய மாலிண்டி (Malindi) நகருக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இதுவரை 400 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் 191 உடல்கள் மட்டும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிறரும் பட்டினி இருந்தே இறந்திருக்கலாம் என சூழல் அடிப்படையிலான சாட்சிகள் மூலம் உறுதியானது.

முதலில் குழந்தைகள்,பின் பதின்ம வயதினர், பெண்கள், ஆண்கள் என பட்டினி இருந்து இறப்பதற்கு படிநிலை வகுத்துள்ளார்.  குற்றம் சாட்டப்பட்ட மக்கென்சி யும் அவரது ஆதரவாளர்களும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம் அவர்களுக்கான தண்டணையை நவம்பர் 6 ஆம் தேதி அறிவிக்கவுள்ளது.

- விடுதலை  நாளேடு, 23.10.26

சனி, 10 ஜனவரி, 2026

சபரிமலை அய்யப்பன் கோயிலில் மோசடிகள் தொடர்கிறது! கோயில் அர்ச்சகர் கைது!

திருவனந்தபுரம், ஜன.10 சபரிமலை அய்யப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரு கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் உள்ள சபரி மலை அய்யப்பன் கோயில் கருவறையின் கதவுகள் மற்றும் பீடத்துடன்கூடிய 2 துவாரபாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசப்பட்டது. அதன் பிறகு 4.5 கிலோ தங்கம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வரு கிறது. இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக சபரிமலை அய்யப்பன் கோயில் தந்திரி கண்டரரு ராஜீ வரு நேற்று (9.1.2026) கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கூறும் போது, “முன்னாள் அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரியை, தேவசம் போர்டிடம் தந்திரி கண்டரரு ராஜீவரு அறிமுகம் செய்திருக்கிறார். அவரது அறிவுரைப்படியே துவார பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசும் பணி உன்னிகிருஷ்ணனிடம் ஒப்ப டைக்கப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக ராஜீ வருவிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தங்கம் திருட்டு வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவரை கைது செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தனர்.

- விடுதலை நாளேடு, 10.1.26