திங்கள், 18 ஜூன், 2018

பெண் சீடரை பாலியல் வன்முறை செய்த வழக்கு பா.ஜ.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயாவுக்கு கைது ஆணை உ.பி. நீதிமன்றம் உத்தரவு

ஷாஜகான்பூர், மே 26 பெண் சீடரை பாலியல் வன்முறை செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின் மயானந்தாவுக்கு பிணையில் வெளிவரக் கூடிய கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பாஜ.வைச் சேர்ந்த முன் னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தா.உத்தரப்பிர தேசத்தை சேர்ந்த இவர், ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் மீது இவரது பெண் சீடர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார்.

அதில், சுவாமி சின்மயா னந்தா என்னை ஆசிரமத்தில் பாலியல் வன்முறை செய் தார்.இதில்கர்ப்பமானஎன்னை கருக்கலைப்பு செய்ய மிரட்டி னார் என கூறியுள்ளார்.  இந்த வழக்கில் காவல்துறை தன்னை கைது செய்யக் கூடாது என  அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சின்மயானந்தா தடை பெற்றி ருந்தார். இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநில அரசு சின்மயானந்தா மீதான பாலியல் வன்முறை வழக்கை திரும்பப் பெறுவதற்கான மனுவை நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கு  பாதிக்கப்பட்ட பெண் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. 

அப்போது அரசின் மனுவை நிராகரித்த நீதிபதி, சின்மயானந்தா மீது ஜாமீனில் வெளிவரக் கூடிய கைது ஆணையை பிறப்பித்தார். மேலும், இந்த வழக்கு விசா ரணைஜூலை12ஆம்தேதி நடைபெறும்போது,சின் மயானந்தாவை ஆஜர்படுத்த வேண்டும்  என நீதிபதி உத்தர விட்டார்.
- விடுதலை நாளேடு, 26.5.18

வெள்ளி, 15 ஜூன், 2018

ஆசிரமம் வந்த பெண்ணிடம் பாலியல் வன்முறை: சாமியார் தாதி மகராஜ்மீது வழக்கு

ஆசிரமம் வந்த பெண்ணிடம் பாலியல் வன்முறை:


சாமியார் தாதி மகராஜ்மீது வழக்கு


புதுடில்லி, ஜூன் 13 டில்லியில் ஆசிரமம் நடத்தி வரும் தாதி மகராஜ் எனும் சாமியாரும் அவரது சீடர்களும் சேர்ந்து, 25 வயது பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

டில்லியில் ஆசிரமம் நடத்தி வருபவர் தாதி மகராஜ். இவர், தனது ஆசிரமத்திற்கு வந்த 25 வயது பெண் ஒருவரை, தனது சீடர்களுடன் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக தொடர்ந்து அவரை மிரட்டி, டில்லி, ராஜஸ்தானில் உள்ளஆசிரமங்களிலும் தாதி மகராஜின் சீடர்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.


இதனால் மனநிலையும், உடல் நிலையும் பாதிக்கப்பட்ட அந்த பெண், தற்போது தனது பெற்றோருடன் சென்று தெற்கு டில்லியல் உள்ள பதேபூர் பெரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் தாதி மகராஜ் உள்ளிட்டோர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாதி மகராஜ், தன்னைத்தானே கடவுளாக அறிவித்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-  விடுதலை நாளேடு, 13.6.18

செவ்வாய், 12 ஜூன், 2018

தோஷம் கழிப்பதாக பெண்ணிடம் நகைகளை திருடிய 5 சாமியார்கள் கைது

திருவொற்றியூர், ஜூன் 10 மணலி புதுநகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி தமிழரசி (45). நேற்று காலை முருகன் வேலைக்கு சென்றுவிட்டார். தமிழரசி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது, சாமியார் உடையணிந்து 5 பேர் தமிழரசி வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள், உங்கள் வீட்டில் தோஷம் உள்ளது, அதை சரிசெய்ய வீட்டில் உள்ள நகைகளை வைத்து ஒரு பூஜை செய்ய வேண்டும், என்றனர். இதை நம்பிய தமிழரசி, அவர் அணிந்திருந்த 2 கம்மல்களையும், ஒரு மோதிரத்தையும் கழட்டி கொடுத்தார். அதை வாங்கிய அவர்கள், மந்திரம் செய்துவதுபோல், தமிழரசி நெற்றியில் திருநீர் பூசியுள்ளார். அடுத்த நொடியே தமிழரசி மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து, நகையுடன் அந்த குப்பைல் தப்பியது. சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து பார்த்தபோது பூஜை செய்தவர்கள் நகையுடன் காணாமல் போனது தெரியவந்தது.

தமிழரசி அவர்களை தேடி வெளியில் வந்தபோது அங்கு மணலி காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தனர். அவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர். உடனே காவல்துறையினர் தீவிரமாக தேடி ஒரு தெருவில்   சாமியார்களை பிடித்தனர். விசாரணையில், விழுப்புரம், விக்கிரவாண்டி, தஞ்சனூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் (20), முத்து (23), வெற்றிவேல் (20), அரசகுமார் (21), லட்சுமணன் (21) என்பதும், இவர்கள் தண்டையார் பேட்டை அய்ஒசி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் பூஜை செய்வதாக கூறி மயக்கப்பொடி தூவி பணம் நகை திருடுவதை ஒரு தொழிலாகவே செய்ததும் தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

-  விடுதலை நாளேடு, 10.6.18

சாமியாரிணி சுக்லா தலைமறைவு

ஆசிரமத்தில் காவல்துறையினர் தேடுதல் வேட்டை


சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்ட 9 பேர் மீட்பு




கான்பூர், ஜூன் 10 சாமியார் ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேசத்தில் சாமியாரிணி சாலினி சுக்லா என்பவர் கேசரி பகுதியில் ஆசிரமத்தை வைத்து நடத்தி வருகிறார். அந்த ஆசிரமத்தில் சட்டவிரோதமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் அவர் களின் விருப்பமில்லாமல் அடைத்து வைக் கப்பட்டிருந்தார்கள். நான்கு மாதங்களுக்குப் பிறகு  ஒன்பது பேரும் மீட்கப்பட்டுள்ளார்கள்.

தகவல் அறிந்த காவல்துறையினர் ஆசிர மத்திலிருந்த குடும்பத்தினரை காவல்துறையினர் ஆசிரமத்தில் தேடுதல் வேட்டை நடத்தி மீட்டுள்ளனர்.

4 மாதமாக ஒரே குடும்பத்தினர் ஆசிரமத்தில்


ஷிவ்லி காவல்நிலைய அலுவலர் மகேந் திர பிரதாப் சிங் கூறியதாவது:

கணவன் மனைவி இருவருடன் மகன்கள் இருவர், மகள்கள் இருவர், மருமகள் மற்றும் குழந்தைகள் இருவர் ஆக மொத்தம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரும் ஆசிரமத்தில் அவர்களின் விருப்பமின்றி, கடந்த 8.2.2018 நாளிலிருந்து  ஆசிரமத்திற்குள் ளேயே அடைக்கப்பட்டிருந்தார்கள்.  ஆசிர மத்திலிருந்த அக்குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆசிரமத்திலிருந்து தப்பி வந்து கிராமத்தினரிடம் தெரிவித்தார். கிராம மக்கள் அளித்த தகவலின்படி, காவல்துறையினர் ஆசிரமத்தில் நுழைந்து தீவிரமாக விசாரணை செய்தோம்.

விலங்குகளைப்போல் அடைத்துவைத்து சித்ரவதை


விலங்குகளைப்போல் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்பட்டதுடன், சுக்லாவின் பக்தர்களாக மாறவில்லை என்பதற்காக ஆசி ரமத்தில் இருந்த அவருடைய சீடர்களால் துன் புறுத்தப்பட்டதாகவும் அப்பெண் கூறினார்.

எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்த அப்பெண் படிப்பைத் தொடர முடியாமல் இடையிலேயே நிறுத்திவிட் டாள். கிராமத்தில் பொது மக்கள் கூட்டத்தைக் கூட்டிய பின் னர், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேவேந்திர சிங் முன்னிலையில் அப் பெண்ணை நிறுத்தி ஆசிர மத்தில் அரங்கேற்றப்படு கின்ற அக்கிரமங் கள்குறித்த உண்மைகளைக் கூறச் செய் தார்கள்.

பெண்கள், குழந்தைகளின் கதறல்கள்


கான்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ராதே சியாம் கூறியதாவது:

ஆசிரமத்தில் நான்கு மாதங்களுக்கும் மேல் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பதுபேரையும்  ஷிவ்லி காவல்துறையினர் மீட்டுள்ளார்கள் என்றார்.

ஆசிரமத்தில் எப்போதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கதறல்கள் கேட்டபடி இருக்கும் என்று ஆசிரமத்திற்கு அருகில் இருந்தவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தார்கள்.

சாமியாரிணி தலைமறைவு


சாமியாரிணி சுக்லா மற்றும் ஆசிரமத்திலிருந்த அவர் சீடர்கள்மீது  இந்திய தண் டனைச்சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள் ளனர். காவல்துறையினரின் தேடுதல் வேட் டையின்போது சாமியாரிணி சுக்லா தப்பி யோடி தலைமறைவாகிவிட்டார்.

- விடுதலை நாளேடு, 10.6.18