ஆசிரமத்தில் காவல்துறையினர் தேடுதல் வேட்டை
சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்ட 9 பேர் மீட்பு
கான்பூர், ஜூன் 10 சாமியார் ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேசத்தில் சாமியாரிணி சாலினி சுக்லா என்பவர் கேசரி பகுதியில் ஆசிரமத்தை வைத்து நடத்தி வருகிறார். அந்த ஆசிரமத்தில் சட்டவிரோதமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் அவர் களின் விருப்பமில்லாமல் அடைத்து வைக் கப்பட்டிருந்தார்கள். நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒன்பது பேரும் மீட்கப்பட்டுள்ளார்கள்.
தகவல் அறிந்த காவல்துறையினர் ஆசிர மத்திலிருந்த குடும்பத்தினரை காவல்துறையினர் ஆசிரமத்தில் தேடுதல் வேட்டை நடத்தி மீட்டுள்ளனர்.
4 மாதமாக ஒரே குடும்பத்தினர் ஆசிரமத்தில்
ஷிவ்லி காவல்நிலைய அலுவலர் மகேந் திர பிரதாப் சிங் கூறியதாவது:
கணவன் மனைவி இருவருடன் மகன்கள் இருவர், மகள்கள் இருவர், மருமகள் மற்றும் குழந்தைகள் இருவர் ஆக மொத்தம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரும் ஆசிரமத்தில் அவர்களின் விருப்பமின்றி, கடந்த 8.2.2018 நாளிலிருந்து ஆசிரமத்திற்குள் ளேயே அடைக்கப்பட்டிருந்தார்கள். ஆசிர மத்திலிருந்த அக்குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆசிரமத்திலிருந்து தப்பி வந்து கிராமத்தினரிடம் தெரிவித்தார். கிராம மக்கள் அளித்த தகவலின்படி, காவல்துறையினர் ஆசிரமத்தில் நுழைந்து தீவிரமாக விசாரணை செய்தோம்.
விலங்குகளைப்போல் அடைத்துவைத்து சித்ரவதை
விலங்குகளைப்போல் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்பட்டதுடன், சுக்லாவின் பக்தர்களாக மாறவில்லை என்பதற்காக ஆசி ரமத்தில் இருந்த அவருடைய சீடர்களால் துன் புறுத்தப்பட்டதாகவும் அப்பெண் கூறினார்.
எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்த அப்பெண் படிப்பைத் தொடர முடியாமல் இடையிலேயே நிறுத்திவிட் டாள். கிராமத்தில் பொது மக்கள் கூட்டத்தைக் கூட்டிய பின் னர், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேவேந்திர சிங் முன்னிலையில் அப் பெண்ணை நிறுத்தி ஆசிர மத்தில் அரங்கேற்றப்படு கின்ற அக்கிரமங் கள்குறித்த உண்மைகளைக் கூறச் செய் தார்கள்.
பெண்கள், குழந்தைகளின் கதறல்கள்
கான்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ராதே சியாம் கூறியதாவது:
ஆசிரமத்தில் நான்கு மாதங்களுக்கும் மேல் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பதுபேரையும் ஷிவ்லி காவல்துறையினர் மீட்டுள்ளார்கள் என்றார்.
ஆசிரமத்தில் எப்போதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கதறல்கள் கேட்டபடி இருக்கும் என்று ஆசிரமத்திற்கு அருகில் இருந்தவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தார்கள்.
சாமியாரிணி தலைமறைவு
சாமியாரிணி சுக்லா மற்றும் ஆசிரமத்திலிருந்த அவர் சீடர்கள்மீது இந்திய தண் டனைச்சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள் ளனர். காவல்துறையினரின் தேடுதல் வேட் டையின்போது சாமியாரிணி சுக்லா தப்பி யோடி தலைமறைவாகிவிட்டார்.
- விடுதலை நாளேடு, 10.6.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக