செவ்வாய், 12 ஜூன், 2018

தோஷம் கழிப்பதாக பெண்ணிடம் நகைகளை திருடிய 5 சாமியார்கள் கைது

திருவொற்றியூர், ஜூன் 10 மணலி புதுநகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி தமிழரசி (45). நேற்று காலை முருகன் வேலைக்கு சென்றுவிட்டார். தமிழரசி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது, சாமியார் உடையணிந்து 5 பேர் தமிழரசி வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள், உங்கள் வீட்டில் தோஷம் உள்ளது, அதை சரிசெய்ய வீட்டில் உள்ள நகைகளை வைத்து ஒரு பூஜை செய்ய வேண்டும், என்றனர். இதை நம்பிய தமிழரசி, அவர் அணிந்திருந்த 2 கம்மல்களையும், ஒரு மோதிரத்தையும் கழட்டி கொடுத்தார். அதை வாங்கிய அவர்கள், மந்திரம் செய்துவதுபோல், தமிழரசி நெற்றியில் திருநீர் பூசியுள்ளார். அடுத்த நொடியே தமிழரசி மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து, நகையுடன் அந்த குப்பைல் தப்பியது. சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து பார்த்தபோது பூஜை செய்தவர்கள் நகையுடன் காணாமல் போனது தெரியவந்தது.

தமிழரசி அவர்களை தேடி வெளியில் வந்தபோது அங்கு மணலி காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தனர். அவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர். உடனே காவல்துறையினர் தீவிரமாக தேடி ஒரு தெருவில்   சாமியார்களை பிடித்தனர். விசாரணையில், விழுப்புரம், விக்கிரவாண்டி, தஞ்சனூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் (20), முத்து (23), வெற்றிவேல் (20), அரசகுமார் (21), லட்சுமணன் (21) என்பதும், இவர்கள் தண்டையார் பேட்டை அய்ஒசி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் பூஜை செய்வதாக கூறி மயக்கப்பொடி தூவி பணம் நகை திருடுவதை ஒரு தொழிலாகவே செய்ததும் தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

-  விடுதலை நாளேடு, 10.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக