பாதிரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாதிரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 பிப்ரவரி, 2021

மதத்தின் பெயரால் நடந்த மூடச்சடங்கு குழந்தையின் உயிரைப்பறித்த அவலம்


பாதிரியார் மீது வழக்குப்பதிவு

புகாரெஸ்ட், பிப். 8- தென்கிழக்கு அய்ரோப்பிய நாடாகிய ருமேனியாவில் மதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட சடங்கான 'ஞானஸ்நான'த் தின்போது  தண்ணீரில் அழுத் தப்பட்ட குழந்தை பரிதாப மாக உயிரிழந்தது.

ருமேனியா நாட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தையை பாதிரியார் தண்ணீரில் 3 முறை அமிழ்த்தி எடுத்துள்ளார். இதனை யடுத்து சில மணி நேரத்தில் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரலில் தண்ணீர் இருந் ததையும், தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்ட குழந்தைக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டதையும் உறுதி செய் தனர். இதனையடுத்து தேவா லய பாதிரியார்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசா ரணை நடைபெற்று வருகி றது. ருமேனியா நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்றதாக வும், இதனால் 'ஞானஸ்நானம்' நடைமுறைகளை மாற்ற வேண் டும் எனவும் கோரிக்கை எழுந் ததாகவும் அந்நாட்டு ஊட கங்கள் தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

சிறுமி பாலியல் வன்கொடுமை: பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருவனந்தபுரம், பிப்.17 கேரளத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில், பாதிரி யாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தலசேரி போக்ஸோ சட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளியான ராபின் வடக்கன் செரிலுக்கு (51) பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும் சட்டம் (போக்ஸோ), இந்திய தண்டனையியல் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளின் கீழ் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.வினோத் சனிக்கிழமை தீர்ப் பளித்தார். இந்த தண்டனையை, அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ராபினுக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதில், பாதித் தொகை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்படும். இதுதவிர, வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதுதொடர்பாக, அரசு தரப்பு வழக் குரைஞர் பீனா கூறியதாவது: கடந்த 2016-இல் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுமியை பாதிரியார் பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பமாக்கினார். 2017-ஆம் ஆண் டில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கூத்துபரம்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அந்தச் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், அந்தக் குழந்தை, வயநாடு மாவட்டத்தில் உள்ள ஓர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப் பட்டது.
மாவட்ட சிறார் பாதுகாப்பு ஆணை யத்துக்கு வந்த தொலைபேசித் தகவலை அடுத்து, சிறுமி பலாத்கார சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. முதலில், பாலியல் குற்ற சம்பவத்தை மூடி மறைத்ததற்காக, சிறுமியின் தந்தை மீது குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையின் 2 மருத்துவர்கள், அந்த மருத்துவமனை நிர்வாகி, வயநாடு சமூகநலத் துறையின் முன்னாள் தலைவர் தாமஸ் ஜோசப் தேரகம், அந்தக் குழுவின் உறுப்பினர் பெட்டி ஜோஸ், வயநாடு ஆதரவற்றோர் இல்லத்தின் கண்காணிப்பாளர் ஒபிலியா ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவரம் தெரிந்த பிறகு, காவல் துறைக்கு தெரி விக்காமல், அதை மூடி மறைத்ததற்காக, அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. எனினும், போதிய ஆதாரங்கள் இல் லாததால், அவர்கள் 6 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர் என்று அந்த வழக்குரைஞர் கூறினார்.
-  விடுதலை நாளேடு, 17.2.19

வியாழன், 29 நவம்பர், 2018

பாலியல் வழக்கு: தென்கொரியாவில் பாதிரியாருக்கு 15 ஆண்டு சிறை



சியோல், நவ. 26- தென் கொரி யாவின் தலைநகர் சியோலில், மேமின் மத்திய தேவாலயம் என்ற பெயரில் மிகப்பெரிய கிறித்தவ ஆலயத்தை நடத்தி வந்தவர் பாதிரியார் லீ ஜே ராக் (வயது 75).

1982-ஆம் ஆண்டு வெறும் 12 பேருடன் ஆரம்பித்த இந்த தேவாலயத்தில் இப்போது 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் உறுப் பினர்களாக இருக்கிறார்கள்.

அந்த ஆலயத்தின் உறுப்பி னர்களாக உள்ள 3 பெண்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்களை பாதிரியார் லீ, தனது அடுக்கு மாடி குடியிருப்பு வீட் டுக்கு அழைத்து, வலுக்கட்டா யமாக பாலியல் வன்முறை செய்து விட்டார் என புகார் செய்தனர்.

அவர்களில் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அவர் அரசரை விட மேலா னவர். அதனால்தான் அவர் கேட்டதை என்னால் மறுக்க முடியவில்லை என்று கூறினார்.

இந்த 3 பெண்களைப் போன்று மேலும் 5 பெண்கள், பாதிரியார் லீ மீது காவல்துறை யில் பாலியல் புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து அவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட் டார். அவர் தன் மீதான பாலியல் புகார்களை மறுத்தார்.

இருப்பினும் அவர் மீது சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்படி வழக்கு விசாரணை நடைபெற் றது. விசாரணையில், அவர் தனது ஆலயத்தில் உறுப்பினர் களாக உள்ள பெண்களை நீண்ட காலமாக பாலியல் வன் முறை செய்து வந்திருப்பது அம்பலமானது. இதையடுத்து அவர் குற்றவாளி என கருதி 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சுங் மூன் சங் தீர்ப்பு அளித்தார்.

-  விடுதலை நாளேடு, 26.11.18

சனி, 22 செப்டம்பர், 2018

கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு செப்.24 வரை போலீஸ் காவல்


03:00 pm Sep 22, 2018 | dotcom@dinakaran.com(Editor)





கேரளா: கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு செப்.24 வரை போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிஷப் பிரான்கோவை செப்.24 வரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிராங்கோவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோட்டயம் பாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. 

...........

பாலியல் வன்முறை வழக்கில் சிக்கிய பேராயர் பிராங்கோ கைது

கொச்சி, செப்.22  கன்னியாஸ்திரி பாலியல் வன்முறை வழக்கில், கேரள காவல்துறையினர் விசாரிக்கப்பட்டு வந்த, பேராயர் பிராங்கோ, 54, நேற்று கைது செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில், பிஷப்பாக பணியாற்றிய பிராங்கோ, 2014 - 2016இல், கேரள மாநிலம் கோட்டயத்தில் பணியாற்றினார்.அப்போது, அங்கிருந்த கன்னியாஸ்திரியை மிரட்டி, 13 முறை பாலியல் வன்முறை செய்ததாக, காவல்துறையினர் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கேரள காவல்துறையினர் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, விசாரிக்கின்றனர். இதையடுத்து, பேராயர் பொறுப்பிலிருந்து, பிராங்கோ விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில், காவல்துறையினரின் தொடர் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியானதை அடுத்து, நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

 - விடுதலை நாளேடு, 22.9.18

புதன், 12 செப்டம்பர், 2018

பாலியல் சர்ச்சை; பதவி துறந்தார் பிஷப்

ஆஸ்திரேலியாவில் ரோமன் கத்தோ லிக்க ஆர்ச் பிஷப்புகளில் முக்கியமானவர் பிலிப் வில்சன். அவர் 2 சிறுவர்களிடம் தகாத உறவை வைத்திருந்ததாகவும், சிறுவர்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவரை குற்றவாளி என்று விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறை யீட்டு மனு மீதான விசாரணை நிலுவை யில் உள்ளது. இதனால், பதவி விலக பிலிப் வில்சன் மறுத்து வந்தார்.


ஆர்ச் பிஷப் பிலிப் வில்சன் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆஸ்திரேலியாவில் வலுத்தது. இந்த விவகாரத்தில் போப் தலையிட வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கடந்த 19ஆம் தேதி வலியுறுத் தினார். இதனால், ஆர்ச் பிஷப் பதவியில் இருந்து பிலிப் வில்சன் எந்த நேரத்திலும் நீக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து தனது பதவி விலகல் கடி தத்தை போப்புக்கு பிலிப் வில்சன் அனுப்பி வைத்தார். இந்நிலையில், போப் பிரான்சிஸ் நேற்று வெளியிட்ட ஒருவரி அறிக்கையில், “ஆர்ச் பிஷப் பிலிப் வில்சன் பதவி விலகல் கடிதம் ஏற்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

(தினமலர் வேலூர் பதிப்பு: 28.7.2018)

- விடுதலை ஞா.ம., 25.8.18

திங்கள், 2 ஜூலை, 2018

பாதிரியார்களின் வன்புணர்ச்சி !

#பாவமன்னிப்பு_கேட்க_வந்தபெண்ணை
#கூட்டு_வன்புணர்ச்சி !
நடந்தது என்ன ??
*
(வன்புணர்சிக்குட்ப்பட்ட)அந்தப் பெண் அன்றைய தினம் பாவ மன்னிப்பு கேட்பதற்காக திருவனந்தபுரத்தில் அருகே உள்ள பந்தனம்திட்டா வருகிறார்..
*
அங்குள்ள சிரியன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சிற்குச் செல்கிறார்.இவர் இப்பிரிவைச் சேர்ந்தவர்!
*
திருமணத்திற்கு முன்பு தனக்கும் ஒரு சர்ச் ஃபாதருக்கும் தகாத உறவு இருந்தது , தற்போது எனக்கு திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
*
அன்று நடந்த பாவம்,என் மனதை வாட்டுவதால் ,பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று, பாவமன்னிப்புக்  கூண்டில் இருந்த பத்தனம்திட்டா சர்ச் ஃபாதரிடம் கூறுகிறார்.
*
அங்கிருந்த ஃபாதர் பாவ மன்னிப்பு கோரிய பெண்னின் முழுக் கதையும் கேட்டு கொண்ட பின்னர் , உன் பாவங்கள் மண்னிப்பட்டது. ஆனாலும், என்னோடு ஒத்துழைத்து அதை முழுமையாக போக்கி கொள் என்கிறார்.
*
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்து, மறுத்த பெண்ணிடம், ஒத்துழைப்பு தரவில்லை என்றால், இதையெல் லாம் அப்படியே உன் கணவரிடம் சொல்லி விடுவேன் எனக் கூறுகிறார்.பயத்தில் அப்பெண்னும் சம்மதிக்கிறார்.
*
தன் ஆசையை தீர்த்துக் கொண்ட பின்,  அப்பெண்னின் பயத்தை சாதகமாக்கி,
தன் சக பாதிரிகள் 6 பேருக்கும் படுக்கையை பங்கிட்டுக் கொடுக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.
*
இப்படியாக 6 பாதிரிகள் மற்றும் அவர்களுடைய 2 நண்பர்கள் என 8 பேருக்கு விருந்தளிக்கப்படுகிறது அப்பெண்னின் கற்பு.
*
இறுதியாக ஒருவருக்கு ஒத்துழைப்பு தந்த பின்,உன்னை தொந்தரவு செய்ய மாட்டோம் என வாக்களிப்பட்டதால்,
*
மேலும் ஒரு பாதிரியார் 9வது நபராக டில்லியில் இருந்து அவசரமா கேரளா வந்துள்ளார்.
*
அந்த பாதிரியின் சொல்படி குறிப்பிட்ட லாட்ஜில் அப்பெண் வர வழைக்கப்பட்டுள்ளார்.
*
வேறு வழியின்றி அங்கு சென்ற அந்த பெண்ணிடம் எல்லாவற்றையும் முடித்து விட்டு, அந்த பெண்ணோட வங்கி அட்டையை வைத்தே, லாட்ஜ் வாடகை செலுத்தியுள்ளார்,சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட டெல்லி பாதிரியார்.
*
பணம் எடுத்த மெசேஜ் அந்த பெண்ணோட கணவன் மொபைலுக்கு குறுஞ்செய்தியாக சென்றுள்ளது.
*
அப் பெண்னின் கணவர் பணம் என்ன காரணத்திற்காக எடுக்கப்பட்டதென விசாரித்துள்ளார். சரியான பதிலை தராத மனைவியை அடித்து விசாரித்துள்ளார். விபரம் அறிந்ததும், காவல் துறை செல்லவில்லை அப்பெண்ணின் கணவர்.
*
ஏன் ?திருச்சபை புகழ் கெட்டுவிடுமாம்?அதனால் திருச்சபை பேராயரை சந்தித்து,ஆதாரங்களோடு புகார் செய்திருக்கிறார்!
*
ஒழுக்கம் தவறும் சில பாதிரிமார்களால், அனைத்து பாதிரிமார்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படும் என்பதால்,  அந்த சர்ச்சின் நிர்வாகம்,பாவிகள் அனைவரையும் நீக்கியதுடன், மேலும் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள்!
*
தன் திருமணத்திற்கு முன் தெரியாமல் செய்த ஒரு பாவத்தைப் போக்க சென்ற இடத்தில்,ஒன்பது பாவங்கள் அவரைத் தொற்றிக் கொண்டது.
*
தற்போது பரிதாபமாக நிற்கும் இந்தப் பெண்னின் பாவத்திற்கு , யார் பொறுப்பு?
*
தேவனால் எல்லாம் கைகூடும் போது,பாவத்தை,மனிதன் எப்படி மன்னிக்க முடியும்.
*
எல்லா மதங்களிலும் இத்தகைய அவலம் நடக்கிறது.மக்களே மதத்தை உதறித் தள்ளுங்கள்.மதம் ஒரு ஆணியும் புடுங்காது.
*
இந்துமத சாமியார்கள், பாவமன்னிப்பு வழங்கும் பாதிரியார்கள்,மௌலவிகள் எவரையும் நம்ப வேண்டாம்.
*
பக்தி இருந்தால் கடவுளை மட்டும் கும்பிடு!இல்லையேல் இதையும் விட்டுவிடு!
*
எல்லா மதங்களும் மக்களால் கைகழுவப்படும் காலம் விரைந்து வரட்டும்!
தோழர் பொன்னுசாமி தமிழன்.
-  கட்செவி பதிவு