திங்கள், 8 பிப்ரவரி, 2021

மதத்தின் பெயரால் நடந்த மூடச்சடங்கு குழந்தையின் உயிரைப்பறித்த அவலம்


பாதிரியார் மீது வழக்குப்பதிவு

புகாரெஸ்ட், பிப். 8- தென்கிழக்கு அய்ரோப்பிய நாடாகிய ருமேனியாவில் மதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட சடங்கான 'ஞானஸ்நான'த் தின்போது  தண்ணீரில் அழுத் தப்பட்ட குழந்தை பரிதாப மாக உயிரிழந்தது.

ருமேனியா நாட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தையை பாதிரியார் தண்ணீரில் 3 முறை அமிழ்த்தி எடுத்துள்ளார். இதனை யடுத்து சில மணி நேரத்தில் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரலில் தண்ணீர் இருந் ததையும், தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்ட குழந்தைக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டதையும் உறுதி செய் தனர். இதனையடுத்து தேவா லய பாதிரியார்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசா ரணை நடைபெற்று வருகி றது. ருமேனியா நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்றதாக வும், இதனால் 'ஞானஸ்நானம்' நடைமுறைகளை மாற்ற வேண் டும் எனவும் கோரிக்கை எழுந் ததாகவும் அந்நாட்டு ஊட கங்கள் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக