ஞாயிறு, 21 மே, 2017

கேரளாவில் பாலியல் வன்கலவி செய்ய முயன்ற சாமியாரின் பிறப்புறுப்பை துண்டித்த இளம்பெண்: முதல்வர் பாராட்டு
திருவனந்தபுரம், மே 21- தன்னை கற்பழிக்க முயன்ற சாமியாரின் பிறப்பு உறுப்பை இளம்பெண் துண்டித்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் தைரியத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டி உள்ளார்.
கேரள தலைநகர் திருவனந் தபுரம் அருகே உள்ள பேட்டை பகுதியில் 23 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவரது தந்தை நீண்டகாலமாக படுக்கையாக உள்ளார். இத னால் வேதனையில் இருந்த இந்த குடும்பத்துக்கு கணேசா னந்தா தீர்த்தபாடம் என்கிற ஹரிசுவாமி (வயது 54) என்ற சாமியார் கடந்த சில ஆண்டு களுக்கு முன் அறிமுகமானார்.
கொல்லத்தில் உள்ள சட்டம்பி சுவாமி ஆசிரமத்தை சேர்ந்தவர் என்று அந்த இளம் பெண்ணின் தாயிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த சாமியார் அடிக்கடி இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்று வந்தார். அவரை நம்பிய இளம் பெண்ணின் தாயும், தங்கள் வீட்டில் அடிக்கடி பூஜை செய் யுமாறு சாமியாரை கேட்டுக் கொண்டார்.
அதன்பேரில் அந்த வீட் டுக்கு சென்று பூஜைகள் செய்து வந்த சாமியார், அந்த இளம் பெண்ணுக்கு அடிக்கடி பாலி யல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள் ளார். ஆனால் அவர் அதை அலட்சியம் செய்து வந்ததாக தெரிகிறது.
இதனால் வேதனைக்குள் ளான அந்த இளம்பெண், காம வெறி பிடித்த சாமியாருக்கு தக்க தண்டனை வழங்க முடிவு செய்தார். இதற்கான தருணம் பார்த்து அவர் காத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவிலும் சாமியார் அந்த இளம்பெண்ணின் வீட் டுக்கு சென்றார். அங்கு அவர் இளம்பெண்ணை வலுக்கட் டாயமாக பாலியல் வன்கலவி செய்ய முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டில் இருந்த கத்தி ஒன்றை எடுத்து சாமியாரின் பிறப்பு உறுப்பை துண்டித்தார்.
இதை எதிர்பாராத ஹரி சுவாமி வலி தாங்காமல் அல றித்துடித்தார். இதனால் அதிர்ச் சியடைந்த அந்த இளம்பெண், சாமியார் தன்னை கொன்று விடுவார் என்ற நோக்கில் உடனே அவசர எண் 100 மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் அங்கு வந்த காவல்துறையினர் சாமியாரை மீட்டு திருவனந்தபுரம் மருத் துவக்கல்லூரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். அங்கு அவ ருக்கு அறுவை சிகிச்சை மூலம் சிறுநீர் குழாய் சீரமைக்கப்பட் டது.
பின்னர் சாமியார் ஹரி சுவாமி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் நடத்தப்பட்ட விசார ணையில், அந்த இளம்பெண் 10ஆம் வகுப்பிலிருந்தே சாமி யாரின் இந்த கொடுமைக்கு ஆளாகி வந்ததாக தெரிய வந் தது. எனவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இந்த குற்றத்தை மறைக்க முயன்றதாக இளம் பெண்ணின் தாய் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் கேர ளாவில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே தன்னை பாலியல் வன்கலவி செய்ய முயன்ற சாமியாரின் பிறப்பு உறுப்பை துண்டித்த அந்த இளம்பெண்ணுக்கு பாராட்டு கள் குவிகிறது. கேரள முதல்-வர் பினராயி விஜயன் இளம் பெண்ணின் தீரச்செயலை பாராட்டியுள்ளார்.
-விடுதலை,21.5.17

சனி, 20 மே, 2017