வியாழன், 29 டிசம்பர், 2016

பாதிரிமார்களில் இரண்டு விழுக்காட்டினருக்குமேல் பாலியல் வன்முறை : ஃபோப் ஒப்புதல்!


ரோம், ஜூலை 15-_ பாதிரிமார்களில் ஏறக் குறைய இரண்டு விழுக் காட்டளவினர்மீது பாலி யல் வன்முறைக் குற்றச் சாட்டு உள்ளதாக போப் பிரான்சீஸ் தெரிவித் துள்ளார்.

இத்தாலி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மதக் குருமார்கள்மீது பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு இருப்பதை, போப்பின் திருச்சபை இல்லத்திலேயே தொழுநோயாக உள்ளது என்றும் வருணித்துள்ளார்.

லா ரிபப்ளிகா நாளி தழின் நிறுவனரும், 90 வயதுள்ள நாத்திகருமான யூஜினோ ஸ்கால்ஃபரி பல முறை போப்புகளைக் கண்டித்து எழுதி வந்துள் ளார். யூஜினோவுடன் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற உரையாட லில் போப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது,என்னுடன் பணியாற்றுபவர்களில் என்னிடம் (சிறார்களிடம் பாலியல் வன்முறைக்கு எதிராக இருப்பதால்) மோதல் போக்கில் இருக் கிறார்கள். குறிப்பாக சர்ச்சுகளில் சிறார்கள் மீதான பாலியல் வன் முறைகளில் ஈடுபடுவோர் இரண்டு விழுக்காட் டளவில் உள்ளதாக புள்ளிவிவரத் தகவல்கள் கூறுகின்றன. இந்த புள்ளி விவரத்தகவல்கள் என்னை புதிய சிந்தனைகளுக்கான நடவடிக்கைகளில் தள்ள வேண்டும். ஆனால், அப்படி நிகழவில்லை. உண்மையைக் கூற வேண்டுமானால், இந்தத் தகவல் புதைகுழியாகவே பார்க்கப்படுகிறது என்று போப் கூறினார்.

சர்ச்சுகள் குறித்த 2012 ஆண்டின் புள்ளி விவரங் களின்படி, கத்தோலிக்கக் கிறிஸ்துவ பாதிரிகள் 4,14,000 பேர் உலகம் முழுவதும் உள்ளனர்.

வாடிகன் தொடர்பா ளர் ஃபெடரிகோ லோம் பார்டி கூறும்போது, லா ரிபப்ளிகா நாளிதழ் வெளியிட்டுள்ள தகவல் களை முழுமையாக போப் கூறியதாக எடுத்துக் கொள்ள வேண்டிய தில்லை. சிறுவர்கள்மீதான பாலியல் வன்முறைகுறித்த புகாரில் கர்தினால்கள் இருப்பதாகக் கூறப்படுவ தற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. சிறுவர்களுக்கான வாசகர்களை  கவர்வதற் காக அப்படி வெளியிட் டுள்ளது என்று கூறினார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக 26 பெண்கள் போப்பிடம் பாதிரிமார் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கவும், மதப்பணி களில் ஈடுபடும் பெண் களும்  திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விடுதலை,15.7.14

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

சிறுமி பாலியல் வன்கொடுமை கத்தோலிக்க பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை


திருவனந்தபுரம், டிச. 10- கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட் டம், புத்தன் வேலிகரா பகுதி யைச் சேர்ந்த 14 வயது சிறு மிக்கு அதே பகுதியைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் எட் வின் பிக்காரஸ் (வயது 41) பாலியல் தொல்லை கொடுத் தார் என சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் செய் தார்.
இதுபற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பாதிரியார் எட்வின் பிக்காரஸ், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து அவரை பலமுறை பாலியல் வன்முறை செய்தது தெரிய வந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அச் சிறுமிக்கு பாதிரியார் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை யடுத்து காவல்துறையினர் எட் வின் பிக்காரசை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு எர்ணாகுளம் கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி நிஷார் அகமது வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங் கினார்.
வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர் மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத் தது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரின் நடவடிக்கையால் 14 வயது சிறுமி பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர், பொறுப் பேற்றுள்ள ஆலய உறுப்பினர் கள் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இவரால் பாதிக்கப்பட்டது அந்த சிறுமி மட்டுமல்ல. ஆலய, உறுப்பினர்களும் பாதிக்கப்பட் டுள்ளனர். இச்செயலை புரிந்த குற்றவாளி நீதிமன்றத்தில் சரண் அடைந்ததால் அவருக்கு தண்டனை வழங்குவதில் சலுகை காட்ட நீதிமன்றம் விரும்பவில்லை. சட்டத்திற் குட்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, குழந்தைகள் வன் கொடுமை தடுப்புச் சட்டம் இந்திய தண்டனை சட்டம் 375 (ஏ), 376 (1), 375 (பி), 376 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் இவ ருக்கு இரட்டை ஆயுள் தண் டனை விதிக்கப்படுகிறது மற் றும் அபராதமாக ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.
மேலும் நீதிபதி, தனது தீர்ப்பில் குற்றவாளி எட்வின் பிக்காரசின் சகோதரர் சில்வஸ் டர் பிக்காரசுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தார்.
குற்ற சம்பவம் நடந்ததும் குற்றவாளி எட்வின் பிக்கா ரஸ் தலைமறைவானபோது அவ ருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக இந்ததண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பில் கூறி இருந்தார்.
இதுபோல சிறுமிக்கு பாலி யல் தொல்லை நடந்ததும் அவரை பரிசோதனை செய்த அரசு டாக்டர் அஜிதா, சிறு மிக்கு நேர்ந்த கொடுமையை உடனடியாக காவல்துறையின ருக்கு தெரிவிக்காமல் மறைத்த தோடு, குற்றவாளியின் தவ றுக்கு துணைபோனதையும் கடுமையாக கண்டித்தார்.
பாதிரியார் எட்வின் பிக்கா ரஸ் மீது புகார் கூறப்பட்டு அவர், கைது செய்யப்பட்டதுமே பாதிரியார் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,11.12.16

வியாழன், 3 நவம்பர், 2016

மொபைல் போனுக்காக மகளையே பலி கொடுத்த பாதகன்


கவுகாத்தி, நவ.3 அசாம் மாநிலத்தில், தொலைந்து போன மொபைல் போனை கண்டுபிடிக்க, நான்கு வயது மகளை பலி கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டான்.
அசாமில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சர்பானந்தா சோனவால் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் சாரைதியோ மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், நான்கு வயது சிறுமியின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக நடந்த விசாரணை யில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளி யாகின. அந்த பகுதியைச் சேர்ந்த, ஹனுமன் பும்ஜியின் மொபைல் போன் தொலைந்து விட்டது. அதை கண்டு பிடித்து தரும்படி, மந்திரவாதி அப்துல்
ஜலிலை, அவன் அணுகினான். அவன் குடும்ப விவரங்களை கேட்டறிந்த ஜலில், பும்ஜியின், நான்கு வயது மகளை பலி கொடுத்தால், மொபைல் போனை கண்டுபிடித்து விடலாம் என, கூறியுள்ளான்; அதற்கு, பும்ஜி இணக்கம் தெரிவித்தான். இதையடுத்து, அருகில் உள்ள வனப்பகுதியில், சிறுமி பலியிடப்பட்டாள். இந்த சம்பவம் தொடர்பாக, பும்ஜி, மந்திரவாதியின் உதவியாளன் ஆரிபுல் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மந்திரவாதி ஜலில், அவன் சகோதரன் ஜலில் ஆகி யோரை, காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அப் பகுதியில் பெருத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-விடுதலை,3.11.16

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

சிறுமி பாலியல் வன்முறை அர்ச்சகர் கைது


பெங்களூரு, அக்.29 பெங்களூரு இந்திராநகரில் 6 வயது குழந்தையை கடத்தி சென்று பாலியல் வன் முறை செய்த கோவில் அர்ச்சகரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பெங்களூரு இந்திராநகர் திப்பசந்திரா பகுதியை சேர்ந் தவர் சிவகுமார் (54). அப்பகுதி யில் உள்ள கோவிலில் அர்ச்ச கராக பணியாற்றி வந்தார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு  கோவில் அருகே அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி விளை யாடி கொண்டிருந்தார். அதை நோட்டமிட்ட சிவகுமார், சிறு மியை கோவிலுக்குள் கடத்தி சென்று பாலியல் வன்முறை செய்துள்ளார்.  இச்சம்பவம் சிறுமி வீட்டிற்கு திரும்பியதும் தெரியவந்தது. இது குறித்து பெற்றோர் இந்திராநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர். இந்திராநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரி டம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-விடுதலை,29.10.16

வெள்ளி, 28 அக்டோபர், 2016

“தோஷம்” கழிப்பதாக மயக்க மருந்து கொடுத்து இளம் பெண் பாலியல் வன்முறை: சாமியார் கைது


சென்னை, செப்.11 தோஷம் கழிப்பதாக கூறி மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை பாலியல் வன்முறை செய்தததாக கைதான  சாமியார் காவல்துறையினரிடம் வாக்கு மூலம் அளித்து உள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக பெண்ணின் தாயும் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த பெருங்குடி கல்லுக்குட்டையைச் சேர்ந்தவர் நாகமணி (வயது 42). இவருடைய 19 வயது மகள் கடந்த சில தினங்களாக வயிற்று வலியால் துடித்தார். அவரை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். அந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இன்னும் திருமணம் ஆகாத அந்த இளம்பெண் கர்ப்பம் ஆனதால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள், இதுபற்றி துரைப் பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் இளம் பெண்ணின் தாய் நாகமணியிடம் விசாரித்தனர்.
அப்போது அவர், ‘‘நான் மாதந்தோறும் அமாவாசை அன்று மேல்மலையனூர் கோவி லுக்கு செல்வது வழக்கம். அங்கு சாமியரான விழுப்புரம் மாவட் டம் விக்கிரவாண்டியை சேர்ந்த கார்த்திக்(27) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் தான் தோஷம் கழிப்பதாக கூறி எனது மகளை பாலியல் வன்முறை செய்தார்’’ என காவல் துறையினரிடம் கூறினார்.
இதையடுத்து துரைப்பாக்கம் காவல் துறையினர், சாமியாராக மக்களை ஏமாற்றி வந்த கார்த் திக்கை கைது செய்தனர். காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திக் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:
மேல்மலையனூர் கோவி லுக்கு நாகமணி மாதந்தோறும் வரும்போது அவரது குடும்ப கஷ்டங்களை என்னிடம் சொல் வார். இதனால் அவருக்கு தோ ஷம் இருப்பதாகவும், அதை பூஜை செய்து சரிசெய்து விடலாம் எனவும் அவரிடம் கூறினேன். அதை நம்பி நாகமணியும் பூஜைக்கு வந்தார்.
அப்போது விபூதி தண்ணீரில் மயக்க மருந்து கலந்து அதை நாகமணிக்கு கொடுத்தேன். அவர் அந்த தண்ணீரை குடித்ததும் மயங்கினார். பின்னர் நான் அவரை பாலியல் வன்முறை செய்தேன். அதன் பிறகு நாங்கள் நெருங்கி பழகி வந்தோம். இத னால் நான் நாகமணி வீட்டுக்கும் சென்று வந்தேன்.
அப்போது வீட்டில் அவரது மகளை பார்த்ததும் அவரையும் அடைய எண்ணினேன். அப் போது நாகமணி, தனது மகள் மன அழுத்தத்தில் இருப்பதாக வும், எப்போதும் சோகமாக இருப்பதாகவும் என்னிடம் வேத னையுடன் கூறினார். இதுதான் சரியான சந்தர்ப்பம் என நினைத்த நான், உனது மகளுக்கும் தோஷம் உள்ளது. அதை கழிக்க அவருக்கு தனியாக பூஜை செய்ய வேண்டும். மேல்மலையனூருக்கு அழைத்து வா என்று கூறினேன்.
அதை நம்பி அவரும் மகளு டன் அங்கு வந்தார். அப்போது நாகமணியை மட்டும் பூஜை பொருட்களை வாங்கி வரும்படி கூறி அனுப்பி விட்டேன். அதன் பிறகு நாகமணிக்கு கொடுத்தது போலவே அவரது மகளுக்கும் விபூதி தண்ணீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்தேன். அவர் மயங்கியதும் அவரையும் பாலி யல் வன்முறை செய்தேன்.
இவ்வாறு கார்த்திக் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
தாயும் கைது
இதையடுத்து சாமியாருக்கு உடந்தை யாக இருந்ததாக இளம் பெண்ணின் தாய் நாகமணியையும் காவல்துறையினர் கைது செய் தனர். கைதான 2 பேரிடமும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
-விடுதலை,119.16