பெங்களூரு, அக்.29 பெங்களூரு இந்திராநகரில் 6 வயது குழந்தையை கடத்தி சென்று பாலியல் வன் முறை செய்த கோவில் அர்ச்சகரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பெங்களூரு இந்திராநகர் திப்பசந்திரா பகுதியை சேர்ந் தவர் சிவகுமார் (54). அப்பகுதி யில் உள்ள கோவிலில் அர்ச்ச கராக பணியாற்றி வந்தார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோவில் அருகே அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி விளை யாடி கொண்டிருந்தார். அதை நோட்டமிட்ட சிவகுமார், சிறு மியை கோவிலுக்குள் கடத்தி சென்று பாலியல் வன்முறை செய்துள்ளார். இச்சம்பவம் சிறுமி வீட்டிற்கு திரும்பியதும் தெரியவந்தது. இது குறித்து பெற்றோர் இந்திராநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர். இந்திராநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரி டம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-விடுதலை,29.10.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக