சென்னை, செப்.11 தோஷம் கழிப்பதாக கூறி மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை பாலியல் வன்முறை செய்தததாக கைதான சாமியார் காவல்துறையினரிடம் வாக்கு மூலம் அளித்து உள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக பெண்ணின் தாயும் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த பெருங்குடி கல்லுக்குட்டையைச் சேர்ந்தவர் நாகமணி (வயது 42). இவருடைய 19 வயது மகள் கடந்த சில தினங்களாக வயிற்று வலியால் துடித்தார். அவரை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். அந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இன்னும் திருமணம் ஆகாத அந்த இளம்பெண் கர்ப்பம் ஆனதால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள், இதுபற்றி துரைப் பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் இளம் பெண்ணின் தாய் நாகமணியிடம் விசாரித்தனர்.
அப்போது அவர், ‘‘நான் மாதந்தோறும் அமாவாசை அன்று மேல்மலையனூர் கோவி லுக்கு செல்வது வழக்கம். அங்கு சாமியரான விழுப்புரம் மாவட் டம் விக்கிரவாண்டியை சேர்ந்த கார்த்திக்(27) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் தான் தோஷம் கழிப்பதாக கூறி எனது மகளை பாலியல் வன்முறை செய்தார்’’ என காவல் துறையினரிடம் கூறினார்.
இதையடுத்து துரைப்பாக்கம் காவல் துறையினர், சாமியாராக மக்களை ஏமாற்றி வந்த கார்த் திக்கை கைது செய்தனர். காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திக் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:
மேல்மலையனூர் கோவி லுக்கு நாகமணி மாதந்தோறும் வரும்போது அவரது குடும்ப கஷ்டங்களை என்னிடம் சொல் வார். இதனால் அவருக்கு தோ ஷம் இருப்பதாகவும், அதை பூஜை செய்து சரிசெய்து விடலாம் எனவும் அவரிடம் கூறினேன். அதை நம்பி நாகமணியும் பூஜைக்கு வந்தார்.
அப்போது விபூதி தண்ணீரில் மயக்க மருந்து கலந்து அதை நாகமணிக்கு கொடுத்தேன். அவர் அந்த தண்ணீரை குடித்ததும் மயங்கினார். பின்னர் நான் அவரை பாலியல் வன்முறை செய்தேன். அதன் பிறகு நாங்கள் நெருங்கி பழகி வந்தோம். இத னால் நான் நாகமணி வீட்டுக்கும் சென்று வந்தேன்.
அப்போது வீட்டில் அவரது மகளை பார்த்ததும் அவரையும் அடைய எண்ணினேன். அப் போது நாகமணி, தனது மகள் மன அழுத்தத்தில் இருப்பதாக வும், எப்போதும் சோகமாக இருப்பதாகவும் என்னிடம் வேத னையுடன் கூறினார். இதுதான் சரியான சந்தர்ப்பம் என நினைத்த நான், உனது மகளுக்கும் தோஷம் உள்ளது. அதை கழிக்க அவருக்கு தனியாக பூஜை செய்ய வேண்டும். மேல்மலையனூருக்கு அழைத்து வா என்று கூறினேன்.
அதை நம்பி அவரும் மகளு டன் அங்கு வந்தார். அப்போது நாகமணியை மட்டும் பூஜை பொருட்களை வாங்கி வரும்படி கூறி அனுப்பி விட்டேன். அதன் பிறகு நாகமணிக்கு கொடுத்தது போலவே அவரது மகளுக்கும் விபூதி தண்ணீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்தேன். அவர் மயங்கியதும் அவரையும் பாலி யல் வன்முறை செய்தேன்.
இவ்வாறு கார்த்திக் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
தாயும் கைது
இதையடுத்து சாமியாருக்கு உடந்தை யாக இருந்ததாக இளம் பெண்ணின் தாய் நாகமணியையும் காவல்துறையினர் கைது செய் தனர். கைதான 2 பேரிடமும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
-விடுதலை,119.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக