வியாழன், 4 ஏப்ரல், 2019

கா(லி)விகளின் ஒழுக்கம்?

சிறுமி வன்புணர்வு- கொலை!


இந்து பாரத் சேனா நிர்வாகி கைது


கோவை, ஏப்.2 கோவை துடியலூர் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்விற்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாரத இந்து சேனா என்ற அமைப்பினர் கைதாகியுள்ளனர்.

கோவைக்கு அருகில் உள்ள பொள் ளாச்சியில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்த கொடூர பாலியல் வன்புணர்வு நிகழ்வு நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் போது திடீரென்று கோவை புறநகர் துடியலூரில் 8 வயது சிறுமி பாலியல்வன்கொடுமைக்கு ஆட்பட்டு கொல்லப்பட்டது உடற்கூறு பரிசோ தனையில் உறுதியானது, 5 நாட்களாக குற்றவாளியைத் தேடிவந்த காவல் துறையினர் அப்பகுதியைச் சேர்ந்த பாரத் இந்து சேனா என்ற அமைப்பினர் மீது சந்தேகம் வரவே அந்த அமைப் பில் உள்ள விஜயகுமார் என்பவரை விசாரித்த நிலையில் அதே அமைப் பைச் சேர்ந்த பாரத் இந்து சேனா நிர்வாகி சந்தோஷ் குமார் என்பவர் இந்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டார்.

ஏற்கனவே இந்த அமைப்பினர் அப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத் துவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் சரியான சான்றுகள் இல்லாமல் நடவ டிக்கை எடுக்க முடியாது என்று கூறிவிட்டனர்.  இந்த நிலையில், அந்த இந்து அமைப் பினரால் சிறுமி கொலை செய்யப்பட் டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

- விடுதலை நாளேடு, 2.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக