வியாழன், 14 மார்ச், 2024

மராட்டியத்தில் பில்லி சூனியம் வைப்பதாகக் கூறி 75 வயது முதியவரை நெருப்பில் தள்ளிய பயங்கரம்


மூடநம்பிக்கையின் உச்சம்

விடுதலை நாளேடு

 மராட்டியத்தில் பில்லி சூனியம் வைப்பதாகக் கூறி

75 வயது முதியவரை நெருப்பில் தள்ளிய பயங்கரம்
கிராம மக்கள் மீது காவல்துறை வழக்கு

மும்பை,மார்ச் 8- பில்லி, சூனியம் வைப்ப தாக சந்தேகப்பட்டு ஒரு வரை கோவில் திருவிழாவில் ஒரு கும்பல் கட்டாயப் படுத்தி நெருப்பில் தள்ளி விட்ட கொடூரம் நடந்துள்ளது.
மராட்டிய மாநிலம் தானே மாவட் டத்தில் உள்ள கேர்வலே கிராமத்தில் லட்சுமண் என்ற 75 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் மாந்திரீக வேலையில் ஈடு பட்டு பில்லி, சூனியம் வைப்பதாக கிராமத்தைச் சேர்ந்த சிலர் சந்தேகப் பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி கிராமத்தில் கோவில் திருவிழா நடந்தது. இதில் தீ மிதிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
நெஞ்சைப் பதற வைக்கும் காட்சி!

அப்போது திடீரென கிராமத்தைச் சேர்ந்த 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் லட்சுமண் வீட்டுக்கு வந்த னர். அவர்கள் தீ மிதி நடக்கும் பகுதிக்கு அவரை அடித்து இழுத்துச் சென்றனர். மாந்திரீக வேலையில் ஈடுபடும் உனக்கு இதுதான் தண்டனை எனக்கூறி, அந்த முதியவரை மிரட்டி, நெருப்பில் இறங்கி நடன மாட வேண்டும் என்று கட் டாயப்படுத்தினர். இதற்கு அவர் தயக் கம் காட்டவே, அந்த கும்பல் முதியவரின் கையை பிடித்து உள்ளே இறக்கி விட்டனர். மேலும் அவர்கள் முதிய வரை வெளியே வர விடாமல் உள்ளே நிற்க வைத்து சித்திரவதை செய்தனர். நெஞ்சைப் பதற வைக்கும் இந்தக் காட் சிகளை கிராம மக்களும் அமைதியாக வேடிக்கை பார்த்தனர்.
நெருப்பின் வெப்பம் தாங்க முடி யாமல் முதியவர் நெருப்புக் குழியில் அங்கும், இங்கும் ஓடினார். சிறிது நேரத் துக்கு பின்னரே கும்பல், முதியவரை நெருப்பில் இருந்து வெளியே வர அனுமதித்தனர்.

இதற்கிடையே அந்த கும்பலின் கொடூர செயலால் முதியவரின் கால் உள்ளிட்ட பகுதிகளில் தீக்காயம் ஏற் பட்டது. இந்த நிகழ்வு குறித்து முதியவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் மூடநம்பிக்கை ஒழிப் புச் சட்டம், காயம் ஏற்படுத்துதல் உள் ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கும் பலைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

முதியவரை கிராமத்தினர் கட் டாயப் படுத்தி நெருப்பில் இறங்க வைத்த காட்சிப் பதிவுகள் தற்போது சமூகவலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சனி, 9 மார்ச், 2024

பக்தி படுத்தும் பாடு சிறுமி பாலியல் வன்கொடுமை:மடாதிபதி கைது

 


விடுதலை நாளேடு

பெங்களூரு மார்ச் 9 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மடாதிபதியை காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளரும் காவல்துறையினரிடம் சிக்கினார்.

கருநாடகத்தின் துமகூரு மாவட்டம் ஹங்கரனஹள்ளி கிராமத்தில் ஹங்க ரனஹள்னி வித்யாசவுடேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள இந்த கோவிலுக்குச் சொந்தமான மடத் தின் மடாதிபதியாக பாலமஞ்சுநாதா சுவாமி என்பவர் இருக்கிறார். அவருக்கு உடலில் தோல் நோய் ஏற்பட்டது.

இதுபற்றி அவர் தனது மேனாள் உதவியாளர் அபிஷேக் என்பவரிடம் கூறியுள்ளார். அவர், டாக்டர் என கூறி ஒரு இளம்பெண்ணை மடாதிபதிக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
ஆனால், அந்த இளம்பெண்ணிடம் நேரடியாக தனது உடலில் உள்ள பிரச் சினைகளைக் காண்பிக்க மறுத்த மடாதி பதி, அந்த இளம் பெண்ணின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு தன்னுடைய உடலில் உள்ள தோல் நோய் தொடர்பான ஒளிப் படங்களை அனுப்பினார். பின்னர் காட்சிப் பதிவு அழைப்பு மூலம் பேசி உடல் பிரச்சினைகளை காண்பித்தார்.
அதை அந்த இளம்பெண், மடாதி பதியின் மேனாள் உதவியாளர் அபி ஷேக் உள்ளிட்டோர் சேர்ந்து கைப்பேசி யில் பதிவு செய்து கொண்டனர். பின்னர் அதை வைத்து மடாதிபதியிடம் பணம் கேட்டு மிரட்டினர்.
இதுபற்றி மடாதிபதி தனது தற் போதைய உதவியாளர் அபிலாஷ் என்பவர் மூலம், சைபர் கிரைம் காவல் துறையில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் அபிஷேக், பெங்க ளூருவைச் சேர்ந்த அந்த இளம்பெண் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய் தனர். இந்த நிகழ்வு கடந்த மாதம் நடந்தது.

இந்த நிலையில், அபி ஷேக்கை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்தார். அதில் மடாதிபதி பால மஞ்சுநாதாசுவாமி, தனது மடத்தில் 18 வயது நிரம்பாத சிறுமி யைத் தொடர்ந்து பாலியல் வன் கொடுமை செய்து வருவதாகக் கூறி னார்.
அதையடுத்து கடந்த 7 ஆம் தேதி இரவு காவல்துறையினர் மடத்தில் சோதனை நடத்தி சில முக்கிய ஆவ ணங்களைக் கைப்பற்றினர். மேலும் மடாதிபதி பால மஞ்சுநாதாசுவாமி, சிறு மியை பாலியல் வன்கொடுமை செய்த தும் தெரியவந்தது. அதையடுத்து காவல் துறையினர் பால மஞ்சுநாதா சுவாமி, அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளர் அபிலாஷ் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் மீது ஹூலியூர் துர்கா காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.