மூடநம்பிக்கையின் உச்சம்

மராட்டியத்தில் பில்லி சூனியம் வைப்பதாகக் கூறி
75 வயது முதியவரை நெருப்பில் தள்ளிய பயங்கரம்
கிராம மக்கள் மீது காவல்துறை வழக்கு
மும்பை,மார்ச் 8- பில்லி, சூனியம் வைப்ப தாக சந்தேகப்பட்டு ஒரு வரை கோவில் திருவிழாவில் ஒரு கும்பல் கட்டாயப் படுத்தி நெருப்பில் தள்ளி விட்ட கொடூரம் நடந்துள்ளது.
மராட்டிய மாநிலம் தானே மாவட் டத்தில் உள்ள கேர்வலே கிராமத்தில் லட்சுமண் என்ற 75 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் மாந்திரீக வேலையில் ஈடு பட்டு பில்லி, சூனியம் வைப்பதாக கிராமத்தைச் சேர்ந்த சிலர் சந்தேகப் பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி கிராமத்தில் கோவில் திருவிழா நடந்தது. இதில் தீ மிதிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
நெஞ்சைப் பதற வைக்கும் காட்சி!
அப்போது திடீரென கிராமத்தைச் சேர்ந்த 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் லட்சுமண் வீட்டுக்கு வந்த னர். அவர்கள் தீ மிதி நடக்கும் பகுதிக்கு அவரை அடித்து இழுத்துச் சென்றனர். மாந்திரீக வேலையில் ஈடுபடும் உனக்கு இதுதான் தண்டனை எனக்கூறி, அந்த முதியவரை மிரட்டி, நெருப்பில் இறங்கி நடன மாட வேண்டும் என்று கட் டாயப்படுத்தினர். இதற்கு அவர் தயக் கம் காட்டவே, அந்த கும்பல் முதியவரின் கையை பிடித்து உள்ளே இறக்கி விட்டனர். மேலும் அவர்கள் முதிய வரை வெளியே வர விடாமல் உள்ளே நிற்க வைத்து சித்திரவதை செய்தனர். நெஞ்சைப் பதற வைக்கும் இந்தக் காட் சிகளை கிராம மக்களும் அமைதியாக வேடிக்கை பார்த்தனர்.
நெருப்பின் வெப்பம் தாங்க முடி யாமல் முதியவர் நெருப்புக் குழியில் அங்கும், இங்கும் ஓடினார். சிறிது நேரத் துக்கு பின்னரே கும்பல், முதியவரை நெருப்பில் இருந்து வெளியே வர அனுமதித்தனர்.
இதற்கிடையே அந்த கும்பலின் கொடூர செயலால் முதியவரின் கால் உள்ளிட்ட பகுதிகளில் தீக்காயம் ஏற் பட்டது. இந்த நிகழ்வு குறித்து முதியவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் மூடநம்பிக்கை ஒழிப் புச் சட்டம், காயம் ஏற்படுத்துதல் உள் ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கும் பலைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
முதியவரை கிராமத்தினர் கட் டாயப் படுத்தி நெருப்பில் இறங்க வைத்த காட்சிப் பதிவுகள் தற்போது சமூகவலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக