சனி, 1 ஜூன், 2024

பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறதாம் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அர்ச்சகர் கைது


கோவையைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் சென்னையில் தங்கி பிரபல சேனலில் தொகுப்பாளனியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர், சமீபத்தில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், “கடந்த 2021 ஆம் ஆண்டு மண்ண டியில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது கோவில் அர்ச்சக ரான கார்த்திக் முனுசாமி என்பவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து எனது வீட்டுக்கு வந்த அவர், ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை பாலில் வன்கொடுமை செய்தார். நான் மயக்கம் தெளிந்து பார்தத போது, எனது காலில் விழுந்த அவர், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதாகவும் தெரிவித்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி வந்த காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி, என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது அவரின் சித்தப்பா காளிதாஸ் என்னை மிரட்டினார்.

இதற்கிடையே நான் கர்ப்பமடைந்த காலத்தில் என்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தனர்” என்று குறிப்பிட்டிருந்தார் அந்த தொகுப்பாளினி.

இதனையடுத்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறை யினர் காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி, அவரது சித்தப்பா காளிதாஸ் உட்பட அய்ந்து பேர் மீது கருக்கலைத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் கார்த்திக் முனுசாமி திடீரென தலைமறைவானார். இதனால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கார்த்திக் முனுசாமி கொடைக்கானலில் தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கொடைக்கானல் சென்ற காவலர் அவரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக