Published June 28, 2024,விடுதலை நாளேடு
ராமாபுரம், ஜூன் 28- சித்தப்பா வீட்டில் தங்கி இருந்தேபாது 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் சைதுசெய்யப்பட்டனர்.
சென்னையை அடுத்த பள்ளிக் கரணை பகுதியை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு 17 மற்றும் 14 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இருவரும் தந்தையுடன் வசித்து வருகின்றனர். இவர்களது தந்தை தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். அப்போது 2 பேரும் வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், கோத் தாரி நகரில் உள்ள அவர்களது சித்தப்பா வீட்டில் தங்கி வந்தனர்.
அவரது சித்தப்பா வீட்டில் அடிக்கடி பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சாமியாரான அரீஷ் (வயது 38), விஜி என்ற ஜெயக்குமார் (30), சூளைமேடு பகுதியை சேர்ந்த சதீஷ் (41) ஆகிய 3 பேரும் சேர்ந்து செய்து வந்தனர்.
அப்போது இவர்கள் 3 பேரும் சேர்ந்து, பூஜை செய்ய வேண்டும் என கூறி 14 வயது சிறுவனை தனியாக அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்தனர். மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் சிறுவனை மிரட்டினர்.
இந்தநிலையில் கடந்த சில நாள்sகளுக்கு முன்பு சிறுவர்கள் இருவரும் தாயாரை பார்க்க பள்ளிக்கரணைக்கு சென்றனர். அப்போது 14 வயது மகனின் உடலில் இருந்த காயங்களை பார்த்த அவரது தாயார், அதுபற்றி கேட்டபோதுதான், சிறுவன் சித்தப்பா வீட்டில் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கூறினார்.
அதிர்ச்சி அடைந்த சிறுவ னின் தாயார், இதுபற்றி வளசர வாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சாமியார் அரீஷ் மற்றும் விஜி, சதீஷ் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக