புதன், 11 நவம்பர், 2015

ரஜ்னீஷ் சாமியாரின் அந்தரங்க வாழ்க்கை


கால-மான பின் அவ-ரது மதிப்பு உண-ரப்-பட்-டா-லும், வாழும் காலத்-தில் ஒரு சர்ச்-சைக்கு-ரிய சாமி-யா-ரா-கவே கரு-தப்-பட்-ட-வர், ஓஷோ ரஜ்-னீஷ். அதி-ர-டி-கள் நிறைந்த ரஜ்-னீ-ஷின் வாழ்-வில் அவ-ரது நிழ-லாக இருந்-த-வர் மா ஆனந்-த-ஷீலா.
ரஜ்-னீ-ஷின் முதல் உத-வி-யா-ள-ராக, காத-லி-யாக, ஆசி-ர-மத்-தின் தலைமை நிர்-வா-கி-யாக இருந்த ஆனந்-த-ஷீலா, ரஜ்-னீ-ஷின் அந்-த-ரங்கங்கள் அனைத்-தும் அறிந்-த-வர்.
ரஜ்-னீ-ஷுக்கு இணை-யாக அதி-ரடித் திருப்-பங்கள் நிறைந்-தது இவ-ரது வாழ்க்கை.
ஒரு நொடி-யில் சட்-டென்று தீர்-மா-னித்து ரஜ்-னீ-ஷி-டம் சர-ண-டைந்த ஆனந்-த-ஷீலா, அவ-ரது ஆசி-ர-மத்-தின் உச்ச நப-ராக உயர்ந்-தார்.
ரஜ்-னீஷ் மறை-வுக்குப் பிறகு பல கோடி ரூபாய் பணத்-துடன் ஆசி-ரமத்-தில் இருந்து ஓடிப்-போய்-விட்-ட-தாகக் குற்-றஞ்-சாட்-டப்-பட்ட இவர், 39 மாதங்க-ளைச் சிறை-யி-லும் கழித்-தார்.
தற்-போது சுவிட்-சர்-லாந்-தில் ஒரு முதி-யோர் இல்-லத்தை அமை-தியாக நடத்-திவரும் ஆனந்-தஷீலா, ரஜ்-னீஷ் பற்-றிய உள்-வட்ட ரக-சியங்களை தனது புதிய புத்-தகத்-தில் வெளிப்-ப-டுத்-தி-யி-ருக்கி-றார்.
அவரைக் கொல்-லா-தீர்கள் என்ற அந்த நூலில் இருந்து சில துளி-கள்...
  • மும்-பை-யில் எனது நெருங்-கிய உற-வி-னர் வீட்-டுக்கு எதி-ரே-தான் ரஜ்-னீஷ் அப்-போது வசித்-தார். அத-னால் அப்-பா-யின்ட்-மென்ட் ஏதும் பெறா-மல் நாங்-கள் அவரை நேரே சந்-திக்கச் சென்-றோம். அதா-வது, நானும் என் அப்-பா-வும். அது என் வாழ்க்-கை-யில் மிக முக்கி-ய-மான தரு-ணம். அது-தான் எங்-கள் முதல் சந்-திப்பு.
பக-வா-னின் (ரஜ்-னீஷ்) செய-லா-ளர் மா லட்சுமி, பக-வா-னின் அனு-மதி பெற்று எங்-களை உள்ளே அனு-ம-தித்-தார்.
ஒரு அறை-யில் வச-தி-யான நீண்ட கைப்-பிடி நாற்-கா-லி-யில் கால்-களை குறுக்காகப் போட்-ட-படி ரஜ்-னீஷ் அமர்ந்-தி-ருந்-தார். அவ-ரைத் தவிர அறை-யில் வேறு யாரும் இல்லை. நான் அறைக்குள் நுழைந்-த-தும் என்-னைப் பார்த்-துப் பிர-கா-ச-மா-கப் புன்-ன-கைத்-தார், வாஞ்-சை-யோடு கைகளை விரித்-தார். அவ-ரது கரங்க-ளுக்குள் நான் அப்-ப-டியே போய் விழுந்-தேன். அவ-ரது நெஞ்-சோடு என்னை இறுக அணைத்துக் கொண்-டார். பர-வ-சத்-தில், எல்-லாம் அப்-ப-டியே உறைந்-து-விட்-டது போலி-ருந்-தது எனக்கு. இனி இவர்-தான், இவரை விட்டு விலகி என்-னால் வாழ   முடி-யாது என்று நான் அந்தக் கணத்-தில் முடிவு செய்-தேன்.
ஷீலா... நீ நாளை மதி-யம் 2.30-க்கு என்னை வந்து பார் என்-றார் பக-வான். அன்று இர-வு-தான் என் வாழ்க்-கை-யில் மிக நீண்ட இரவு. மறு-நாள், நான் மிக மிகப் பொறு-மை-யி-ழந்து காத்-தி-ருந்த அந்த நேரம் வந்-தது. பக-வா-னி-டம் ஓடிச் சென்-றேன். அவர் முந்-தைய தினத்தை விட மிக அழ-காக இருந்-தார்.
நான் அவ-ரி-டம், என்-னால் சாப்-பிட முடி-ய-வில்லை, தூங்க முடி-ய-வில்லை, பைத்-தி-யம் பிடித்-தது போலி-ருக்கி-றது என்-றேன்.
அவர் சிரித்-த-படி, ஷீலா... இது ரொம்ப சிம்-பி-ளான விஷ-யம். நீ என்னை மிக-வும் நேசிக்கி-றாய். நானும் உன்னை ரொம்-ப-வும் நேசிக்கி-றேன் என்-றார்.

றீ ஆசிரமத்தில் ஆரம்-பத்-தில் இட-நெ-ருக்க-டி-யா-லும், கட்-டுப்-பா-டற்ற பழக்க- வ-ழக்கங்க-ளா-லும் அசுத்-த-மும் வியா-தி-களும் பர-வின. பாலு-ணர்வைக் கட்-டுப்ப-டுத்-து-வ-தற்கு எதி-ராக எப்-போ-தும் பக-வான் பேசி வந்-தார். எனவே ஆசி-ர-ம-வா-சி-கள் தங்-களின் பாலி-யல் இச்-சை-களை சர்வ சுதந்-தி-ர-மாக வெளிப்-ப-டுத்-தி-னர்.
அதன் விளை-வாக, ஆசி-ர-மத்-தில் பால்-வினை நோய்-கள் ஒரு பெரும் பிரச்-சி-னை-யா-கின. பாலி-யல் நோய்த் தொற்-று-க-ளைத் தடுப்-பது கடி-ன-மான விஷ-ய-மா-னது.
சில ஆசி-ர-ம-வா-சி-கள், ஒரு மாதத்-தில் மட்-டும் 90 வெவ்-வேறு வித-மான செக்ஸ் தொடர்-பு-களில் ஈடு-பட்-ட-னர். எப்-போ-தும் ஆசி-ர-மம் பர-ப-ரப்-பாக இருக்கும் வேளை-யில் அவர்க-ளுக்கு செக்ஸுக்கு எப்-படி நேர-மும், சக்தி-யும் கிடைக்கி-றது என்று எனக்கு வியப்-பாக இருந்-தது. அது குறித்து ஒரு-வ-ரி-டம் நான் கேட்-க-வும் செய்-தேன்.
அதற்கு அவர் சிரித்-தபடி, தான் ஒவ்-வொரு நாளும் மூன்று முறை செக்ஸ் உறவு வைத்-துக்-கொள்-வ-தாகக் கூறி-னார். காலைச் சிற்-றுண்-டிக்கு முன்பு ஒன்று, மதிய உண-வுக்குப் பின் ஒன்று, இரவு உண-வுக்குப் பின் ஒன்று, என்-றார்.
நான் அவ-ரி-டம், ஆக, ஒவ்-வொரு உண-வின்-போ-தும் நீங்-கள் ஓர் இனிப்பு சாப்-பி-டு-கி-றீர்கள்? என்று நகைச்-சு-வை-யாக சொன்-னேன்.
ஒட்-டு-மொத்த மோச-மான சுகா-தார நிலை கார-ண-மா-க-வும், அலர்ஜி, ஆஸ்-துமா,
முது-கு-வலி போன்-ற-வற்-றா-லும் பக-வா-னும் அப்-போது பாதிக்கப்-பட்-டார். அவ-ரது ஆரோக்கி-யத்தைக் காக்க நாங்-கள் மிக-வும் கஷ்-டப்-பட்-டோம். பக-வா-னுக்கு வாச-னைத் திர-வி-யங்கள், பெர்-பி-யூம்கள் அலர்ஜி என்-ப-தால், பக்தர்களை மோப்-பம் பிடிப்-ப-தற்கு ஆட்-கள் நிய-மிக்கப்-பட்-ட-னர். அவர்கள் மோப்-பம் பிடித்து, வாச-னைத் திர-வியங்க-ளைப் பூசிய பக்தர்களை பக-வானை நெருங்கா-மல் தடுத்-து-வி-டு-வார்கள்.
  • பக-வான் வியா-பார நுணுக்கங்க-ளும் அறிந்-த-வர். அவர் தான் வழங்-கும் விஷ-யங்கள், அவற்-றுக்கான மதிப்பு, அவற்றை சந்-தைப்-ப-டுத்-து-தல் எல்-லா-வற்-றை-யும் அறிந்-தி-ருந்-தார். ஆசி-ரம செல-வு-கள் அனைத்-தை-யும் சமா-ளிப்-ப-தற்கான வரு-வாய் தாரா-ள-மாக வர வேண்-டும் என்று அவர் நினைத்-தார். ஆரம்-ப-கட்-ட-மாக, அவ-ரது சொற்-பொ-ழி-வு-களுக்கு நுழை-வுக்கட்-ட-ணம் விதிக்கப்-பட்-டது. ஆசி-ர-மத்-தில் இருந்த தெர-பிஸ்ட்கள் அதைப் பின்-பற்-றி-னர். பல்-வேறு தெரபி- களு-டன், பபே முறை-யில் உணவு வழங்கப்-படும். அதற்குக் கட்-டணம். ஆசி-ரமத்-துக்கு வரு-வோர் தாங்-கள் விரும்-பும் தெர-பியை பணம் கட்-டிப் பெற-லாம். ஆசி-ரமத்-தின் வேறு பல சேவை-களுக்கும் கட்-ட-ணம் விதிக்கப்-பட, பணம் தண்-ணீ-ரைப் போல கொட்ட ஆரம்-பித்-தது.
பாலு-றவு வேட்-கை-தான் மனி-த-னின் கஷ்-டங்க-ளுக்கு எல்-லாம் கார-ணம், அவன் அதை முழு-மை-யாக அனு-ப-வித்து அதி-லி-ருந்து மீண்-டு-வர வேண்-டும் என்-பது பக-வா-னின் கருத்து.
எனவே, ஆசி-ர-மத்-தில் வழங்கப்-பட்ட அனைத்து தெர-பி-களி-லும் பாலி-யல் பிர-தான அம்-ச-மாக இருந்-தது. அடக்கி வைக்கப்-படும் பாலு-ணர்வு  பாலி-யல் வக்கி-ரத்-தில் இருந்து விடு-தலை பெற வேண்-டும் என்-பதே நோக்க-மாக இருந்-தது. எனவே எந்தக் கட்-டுப்-பா-டு-மின்றி செக்ஸ் ஏற்-கப்-பட்-டது.
செக்ஸைப் பொறுத்-தவரை ஆசி-ரமத்-தில் தடுக்கப்-பட்-டது எது-வும் இல்லை, இது-தான் ஒழுக்கம் என்று எது-வும் வரை-ய-றுக்கப்-ப-ட-வில்லை. நாங்-கள் அனை-வ-ரும் பொறாமை, தன்-னு-ரிமை உணர்வு இல்-லா-மல் இருக்க வேண்-டும் என்று பக-வான் விரும்-பி-னார். நாங்-கள் எங்-களின் செக்ஸ் விருப்-பங்களை அடுத்-தவரின் ஒப்-புதலோடு வெளிப்-படுத்-தலாம் என்று அவர் கூறி-னார். இந்த விஷ-யத்-தில் நீதி-நெறி உணர்வு, குற்ற உணர்-வைத் தாண்-டிச் செல்ல வேண்-டும் என்று பகவான் சொன்னார். இதன் மூலம் ஞானம் பெறப்-போ-கி-றோம் என்ற அதீத உற்-சா-கத்-தில் பல-ரும் குழு-வாக செக்ஸ் செயல்-பா-டு-களில் ஈடு-ப-டத் தொடங்-கி-னர். ஆனால் யாரும், எப்-போ-தும் எவ-ரை-யும் எதற்கா-க-வும் நிர்ப்-பந்-திக்க-வில்லை.
  • நாங்-கள் புனே-யில் இருந்-த-போது, பக-வா-னுக்கு மிக அந்-த-ரங்க-மாக விவேகா என்ற பெண் இருந்-தாள். அவள் தன்னை பக-வா-னின் மனைவி என்று கூறிக்-கொண்-டாள். பக-வா-னுக்கு நெருக்க-மாக இருந்த மற்ற பெண்-கள் மீது பொறாமை கொண்ட விவேகா, பக-வா-னி-டம் அது-கு-றித்-துச் சண்-டை-யிட்-டும் வந்-தாள்.
இந்-நி-லை-யில், பக-வா-னு-ட-னான உற-வில் அவள் கர்ப்-ப-மா-னாள். அத்-த-க-வலை வெளி-யிட்டு பக-வா-னின் பெயரை நாற-டிப்-பேன் என்று அவள் மிரட்-டினாள். நல்-லவே-ளை-யாக, பக-வா-னின் பக்தர்க-ளி,ல் ஒரு-வ-ரான மகப்-பேறு மருத்-து-வர் ஒரு-வ-ரின் உத-வி-யால் விவே-கா-வின் கரு கலைக்கப்-பட்-டது.
அதன்-பி-ற-கும் விவேகா உட-னான பக-வா-னின் பிரச்-சினை முற்றி, இவ-ளுக்கு உடனே இங்-கிலாந்-துக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து அனுப்-பிடு. இனி இவ ஒரு நொடி கூட இங்கே இருக்கக் கூடாது என்று என்-னி-டம் சப்-த-மிட்-டார் பக-வான். நானும் சரி என்-றேன். பின்-னர், அப்பெண்ணைக் கடை-சி-யாக ஒரு-முறை மன்-னித்து, தன்-னு-டன் இருக்க அனு-ம-திப்-ப-தாகக் கூறி-னார் பக-வான்.
அப்-போ-து-தான், பக-வா-னுக்கும் சாதா-ரண மனி-தர்க-ளுக்குரிய உணர்-வு-கள் உண்டு, ஞானம் பெற்ற அவ-ரா-லும் பெண் பிடி-யில் இருந்து மீள முடி-ய-வில்லை என்-பதை நான் உணர்ந்-தேன். றீ ஒரு-கட்-டத்-தில், எல்-லாம் சீராக நடை-பெ-றத் தொடங்-கின. குறிப்-பிட்ட கால இடை-வெ-ளி-களில் நூல்-கள் வெளி-யி-டப்-பட்-டன, விழாக்கள் நடத்-தப்-பட்-டன, ஐரோப்-பிய நாடு-களில் பக-வா-னின் மையங்கள் அரு-மை-யாக இயங்கிக் கொண்-டி-ருந்-தன. பக்தர்க-ளிடம் இருந்து காணிக்-கை-களைப் பெறு-வதற்-குப் -புதிய புதிய வழி-களும் கண்-டு-பி-டிக்கப்-பட்டுக் கொண்-டி-ருந்-தன. பக-வான் சொன்-ன-படி எல்-லாம் ஒழுங்காக, சீராக நடை- பெற்-றுக்-கொண்-டி-ருந்-தன.
பக-வான் இவற்-றால் உற்-சா-கமோ, மகிழ்ச்-சியோ அடை-ய- வில்லை. மாறாக அவ-ருக்கு போர-டித்-தது. அந்த அலுப்-பில் திடீ-ரென்று அவர் ஒரு-நாள் என்-னி-டம், ஒரே மாதத்-தில் 33 ரோல்ஸ் -_ ராய்ஸ் ஆடம்-பர கார்-களை வாங்-கும்-படி கூறி-னார். அப்-போது ஏற்-கெ-னவே ஆசி-ரமத்-தில் 90 புத்-தம்- பு-திய ரோல்ஸ் _ ராய்ஸ் கார்-கள் இருந்-தன. மேலும் புதிய 33 ரோல்ஸ் _ ராய்ஸ் கார்-கள் வாங்க வேண்-டும் என்-றால் பல-கோடி ரூபாய் தேவை. என்ன செய்-வது என்று புரி-யா-மல், அவ-ரி-டம் மெது-வாக விஷ-யத்-தைச் சொன்-னேன். மறு-நாள் அவர் என்-னிடம் ஒரு பட்-டியலைக் கொடுத்-தார். அதில், ஐம்-பது, அறு-பது பெயர்கள் இருந்-தன. எல்-லோ-ருமே பெரும் பணக்கா-ரர்கள். அவர்களை அழைக்கச் சொன்ன பக-வான், 21 பேர் ஞானம் பெற்-ற-தாக அறி-வித்-தார். அவர்கள் ஆசி-ர-மத்-தின் உள்-வட்-டத்-தில் இணைந்-த-னர். அவர்க-ளால் ரோல்ஸ் _ ராய்ஸ் கார்-கள் வாங்-கு-வ-தற்கான பணப் பிரச்-சி-னை-யும் தீர்ந்-தது.
-விடுதலை ஞா.ம.,9.2.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக