வெள்ளி, 13 நவம்பர், 2015

மதபோதகர் கைது

வேலூர், அக்.16 மாணவியுடன், 'உல்லாச மாக' இருந்து விட்டு, திருமணத்துக்கு மறுத்த கிறிஸ்தவ மதபோதகர் கைதானார்.வேலுர் மாவட்டம், திருப்பத்துர் அடுத்த ஜலகாம்பாறை கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது பெண், அருகில் உள்ள அரசு பெண்கள் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 1 படித்து வந்தார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, அப்துல்லாபுரத் தைச் சேர்ந்த தீபக்குமார், 47, ஜலகாம்பாறை அருகே உள்ள, மிட்டூர் கிறிஸ்தவ தேவாலயத்தில், மதபோ தகராக இருந்து வரு கிறார்.தேவாலயத்துக்கு, அடிக்கடி மாணவி சென்ற போது, மதபோதகருடன் பழகி உள்ளார். இதை யடுத்து, அவர், பல இடங் களுக்கு, மாணவியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலை யில், ஆகஸ்ட் மாதம், மாணவியை, சென்னைக்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள் வதாக வாக்குறுதி அளித்து, அவருடன் மதபோதகர், 'உல்லாசமாக' இருந்த தாகத் தெரிகிறது. இதன் பின், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, அவரை, மாணவி வலியு றுத்தியதற்கு, மறுப்பு தெரிவித்து உள்ளார்.
அத்துடன், 'சம்ப வத்தை வெளியே தெரிவித் தால், கொலை செய்து விடுவேன்' எனவும், மத போதகர் மிரட்டி உள் ளார். இதுகுறித்து, திருப் பத்துர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், மாணவி புகார் கொடுத் தார். வழக்கு பதிந்த காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு, மத போதகர் தீபக்குமாரை கைது செய்தனர்.
-விடுதலை,16.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக