வெள்ளி, 13 நவம்பர், 2015

பெண் நரபலி : மந்திரவாதி கைது


மடிகேரி, அக்.16 கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி புறநகர் பகுதியில் 21 வயது மந்திரவாதி ஒருவர் பில்லி சூனியம் வைத்தல், எடுத் தல் போன்ற மாந்த்ரீ கங்கள் செய்து வந்தார்.
18 வயதிலேயே தன்னி டம் அபூர்வ சக்தி இருப் பதாகவும், தன்னை மந்தி ரவாதி என்றும் கூறிக் கொண்டார். தனது பெயரை துர்க்கா தத்தா காளிதாஸ் என்று வைத் துக் கொண்டார். அமா வாசை போன்ற விசேஷ நாட்களில் சாமியாடிக் கொண்டே குறி சொல் வார். இதனால் பிரபலமா னார். ஏராளமான கிராம மக்கள் அவரிடம் வந்து தங்கள் குறைகளைச் சொல்லி நிவர்த்தி கேட்டு சென்றனர்.
மேலும் அந்தப் பகுதி யில் புதையல் இருப்ப தாகவும் அதை நரபலி கொடுத்தால் கைப்பற்ற லாம் என்றும் மந்திரவாதி கூறி வந்தார்.
இந்த நிலையில் மடி கேரி அருகில் உள்ள இப்னி வேலவாடி கிரா மத்தைச் சேர்ந்த ஆஷா என்ற பெண் நீண்ட நாட் களாக நோய் வாய்ப்பட்டு கிடந்தார். அவரது தீராத நோயை தீர்த்து வைப்ப தாக கூறி மந்திரவாதி தன்னை சந்திக்க வருமாறு கூறினார். இதற்கு அவரது கணவரும், மகன்களும் சம்மதித்தனர்.
அமாவாசை தினத் தன்று தனது வீட்டுக்கு ஆஷாவை வரவழைத்தார். பூஜை அறையில் உட்கார வைத்து பூஜைகள் செய் தார். நடனமாடியவாறே ஏதேதோ மந்திரங்கள் சொன்னார். திடீர் என்று அவர் பூஜை அறையில் இருந்து அரிவாளை எடுத் துக் கொண்டு சாமியா டியவாறு இருந்தார்.
திடீர் என்று யாரும் எதிர்பாராத வகையில் ஆஷாவை அரிவாளால் துடிக்க துடிக்க வெட்டிக் கொன்று ரத்தத்தை எடுத்து நரபலி கொடுத் தார். மந்திரவாதி என்ப தால் கிராம மக்கள் அதை தடுக்க முன்வரவில்லை.
இந்த பயங்கர சம்பவம் பற்றி 2 நாள் கழித்து காவல்துறைக்கு தெரிய வந்தது. உடனே காவல் துறை அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று மந்திர வாதியை கைது செய்தனர். நரபலி கொடுக்க உதவிய தாக அவரது உதவியா ளர்கள் தாரணி, பவன், கவன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
4 பேரும் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டனர். பெண் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலையுண்ட ஆஷா வின் கணவர் நானய்யா பெங்களூரில் செக்யூரிட்டி காவலாளியாக பணிபுரி கிறார். ஒரு மகன் ஹரிஷ் பெங்களூரில் பணிபுரி கிறார். மற்றொரு மகன் சென்னையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.டெக் படித்து வரு கிறார்.
தாயின் உடல் நலம் குணமாக வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மந்திரவாதியை சந்திக்க மகன்கள் சம்மதித்தனர். ஆனால் மந்திரவாதி கொடூரமாக செயல்பட்டு நரபலி கொடுத்து விட் டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
-விடுதலை,16.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக