ஆசிரமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிரமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 நவம்பர், 2023

ஆந்திராவில் ஆசிரமத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த சாமியார் கைது

சாமியார்கள் ஜாக்கிரதை!

ஆந்திராவில் ஆசிரமத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த சாமியாரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.  இவர் ஏற்கெனவே பெற்றோருடன் வந்த ஒரு சிறுமியை பெற்றோர்களுக்கு பிரசாதம் என்ற பெயரில் மயக்க மருந்து கொடுத்து அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த  வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள நிலையில் தற்போது 2ஆவது முறையாக வசமாக சிக்கியுள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வென்கோஜியில் ஞானானந்த ஆசிரமம் உள்ளது.  ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பிரபலமான இந்த ஆசிரமத்தின் தலைவராக சாமியார் பூர்ணானந்த சரஸ்வதி உள்ளார். 

பெற்றோரை இழந்த பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் ஏராளமானவர்கள் இந்த ஆசிரமத்தில் இருந்து வருகின்றனர். இங்கு 15 வயது சிறுமி ஒருவரும் தங்கி இருந்தார். இந்த குழந்தைகளின் பெயரைச்சொல்லி வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் இவரது மடத்திற்கு பலர் பணம் அனுப்பிவருகின்றனர். 

 வேத விற்பன்னர் மற்றும் அனைத்து உலக ஆசைகளில் இருந்தும் விடுபட்டு பூர்ணாகதி அடைந்தவர் என்ற பட்டத் தையும் சாமியார் அமைப்பு இவருக்குக் கொடுத்துள்ளது. இதனை அடுத்து இவர் பூர்ணானந்த சரஸ்வதி என்று அழைக்கப்பட்டார்

 இவர் மீது ஏற்கெனவே ஆசிரமத்தில் உள்ள சிறுமிகளுக்குப் பாலியல் ரீதியில் தொல்லை தருவதாகக் கூறி தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது. அந்தத் தொலைக்காட்சி செய்தியாளர் மிரட்டப்பட்டார். அதன் பிறகு அந்த பாலியல் வன்கொடுமை செய்தி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. 

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரைச் சந்திக்க  பெற்றோருடன் வந்த சிறுமி மீது ஆசைப்பட்டு பெற்றோருக்கு பிரசாதம் என்ற பெயரில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். 

 ஆனால் அவருக்கு உள்ள செல்வாக்கு காரணமாக அந்தக் கொடுமை பாலியல் தொல்லை என்று சாதாரண வழக்காகப் பதிவு செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தார்.  அன்றே அதிகாரவர்க்கம் இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

இந்நிலையில் தான் சாமியார் பூர்ணானந்தா சரஸ்வதி, தனது ஆசிரமத்தில் இருக்கும் மேலும் பல சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. 

 அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவர் அவரது பாலியல் வக்கிரத்தின் கொடுமைகள் தாங்காமல் எதிர்ப்பு தெரிவித்தார்.  அதற்கு அந்தச் சாமியார் "நான் ஏற்கெனவே சிறைக்குச் சென்று வந்துள்ளேன். இனிமேல் என் மீது யார் புகார் கொடுத்தாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்

ஆகவே இதை வெளியில் சொன்னால் நீயும், இதர பிள்ளைகளும் பல கொடுமைகளை சந்திக்க நேரிடும்" என மிரட்டல் விடுத்தார்.

இதனால் அந்தச் சிறுமி சம்பவம் குறித்து வெளியில் கூற முடியாமல் மனம் நொந்து போனார். இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மடாதிபதி பூர்ணானந்தா சரஸ்வதி, சிறுமியையும், ஆசிரமத்தில் உள்ள வேறு சில சிறுமிகளையும் தொடர்ந்து வலுக்கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சிறுமி யாருக்கும் தெரியாமல் ஆசிரமத்தை விட்டு வெளியேறி ரயில் மூலம் விஜயவாடா சென்றார். ரயில் நிலையத்தில் ஆதரவற்ற ஒரு சிறுமி ஒருவர் அழுது கொண்டு இருப்பதைக் கண்ட ரயில்வே காவல்துறையினர் அவரை மீட்டு விசாரித்தனர்.

விசாரணையில் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை அழுதபடி கூறியுள்ளார். இதையடுத்து சம்பவம் குறித்து ஆசிரமம் இருக்கும் திஷா என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சாமியார் பூர்ணானந்தா சரஸ்வதியை உடனடியாக  கைது செய்தனர். அதன்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

நாடு எந்தத் திசையில் போய்க் கொண்டு இருக் கிறது? சாமியார்கள் என்ற போர்வையில் காமவெறிக் கசடர்கள் கிளம்பி விட்டனர். நாட்டில் நடப்பது மதவாத ஆட்சியாயிற்றே!

செவ்வாய், 12 ஜூன், 2018

சாமியாரிணி சுக்லா தலைமறைவு

ஆசிரமத்தில் காவல்துறையினர் தேடுதல் வேட்டை


சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்ட 9 பேர் மீட்பு




கான்பூர், ஜூன் 10 சாமியார் ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேசத்தில் சாமியாரிணி சாலினி சுக்லா என்பவர் கேசரி பகுதியில் ஆசிரமத்தை வைத்து நடத்தி வருகிறார். அந்த ஆசிரமத்தில் சட்டவிரோதமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் அவர் களின் விருப்பமில்லாமல் அடைத்து வைக் கப்பட்டிருந்தார்கள். நான்கு மாதங்களுக்குப் பிறகு  ஒன்பது பேரும் மீட்கப்பட்டுள்ளார்கள்.

தகவல் அறிந்த காவல்துறையினர் ஆசிர மத்திலிருந்த குடும்பத்தினரை காவல்துறையினர் ஆசிரமத்தில் தேடுதல் வேட்டை நடத்தி மீட்டுள்ளனர்.

4 மாதமாக ஒரே குடும்பத்தினர் ஆசிரமத்தில்


ஷிவ்லி காவல்நிலைய அலுவலர் மகேந் திர பிரதாப் சிங் கூறியதாவது:

கணவன் மனைவி இருவருடன் மகன்கள் இருவர், மகள்கள் இருவர், மருமகள் மற்றும் குழந்தைகள் இருவர் ஆக மொத்தம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரும் ஆசிரமத்தில் அவர்களின் விருப்பமின்றி, கடந்த 8.2.2018 நாளிலிருந்து  ஆசிரமத்திற்குள் ளேயே அடைக்கப்பட்டிருந்தார்கள்.  ஆசிர மத்திலிருந்த அக்குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆசிரமத்திலிருந்து தப்பி வந்து கிராமத்தினரிடம் தெரிவித்தார். கிராம மக்கள் அளித்த தகவலின்படி, காவல்துறையினர் ஆசிரமத்தில் நுழைந்து தீவிரமாக விசாரணை செய்தோம்.

விலங்குகளைப்போல் அடைத்துவைத்து சித்ரவதை


விலங்குகளைப்போல் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்பட்டதுடன், சுக்லாவின் பக்தர்களாக மாறவில்லை என்பதற்காக ஆசி ரமத்தில் இருந்த அவருடைய சீடர்களால் துன் புறுத்தப்பட்டதாகவும் அப்பெண் கூறினார்.

எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்த அப்பெண் படிப்பைத் தொடர முடியாமல் இடையிலேயே நிறுத்திவிட் டாள். கிராமத்தில் பொது மக்கள் கூட்டத்தைக் கூட்டிய பின் னர், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேவேந்திர சிங் முன்னிலையில் அப் பெண்ணை நிறுத்தி ஆசிர மத்தில் அரங்கேற்றப்படு கின்ற அக்கிரமங் கள்குறித்த உண்மைகளைக் கூறச் செய் தார்கள்.

பெண்கள், குழந்தைகளின் கதறல்கள்


கான்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ராதே சியாம் கூறியதாவது:

ஆசிரமத்தில் நான்கு மாதங்களுக்கும் மேல் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பதுபேரையும்  ஷிவ்லி காவல்துறையினர் மீட்டுள்ளார்கள் என்றார்.

ஆசிரமத்தில் எப்போதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கதறல்கள் கேட்டபடி இருக்கும் என்று ஆசிரமத்திற்கு அருகில் இருந்தவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தார்கள்.

சாமியாரிணி தலைமறைவு


சாமியாரிணி சுக்லா மற்றும் ஆசிரமத்திலிருந்த அவர் சீடர்கள்மீது  இந்திய தண் டனைச்சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள் ளனர். காவல்துறையினரின் தேடுதல் வேட் டையின்போது சாமியாரிணி சுக்லா தப்பி யோடி தலைமறைவாகிவிட்டார்.

- விடுதலை நாளேடு, 10.6.18

திங்கள், 5 பிப்ரவரி, 2018

அம்பலத்துக்கு வருகிறது சாமியார்களின் திருவிளையாடல்கள்




தன்னைத் தானே சாமியார் என்று அறிவித்துக்கொண்டவரான வீரேந்திர தேவ் தீக்சித்  (வயது 70) பக்தர்களிடமிருந்து பணம், நிலம் உள்ளிட்ட பொருள்களை பக்தியின் பெயரால் அபகரித்து வந்தார்.

மேலும், ஆசிரமத்தில் சேவை என்கிற பெயரில் பக்தர்களின் மகள்களையும் ஆசி ரமத்தில் முடக்கியுள்ளார். அதன்பின்னர் அப்பெண்களை அவர்களின் பெற்றோர் காண விரும்பினாலும் அனுமதி மறுக்கப் பட்டது.

ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் பலரும் தங்கள் மகள்களை மீட்கக்கோரி வழக்குரைஞர் ஷலப் குப்தாவிடம் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மகள்களை மீட்கப்போராடிவரும் பெற்றோர்

அப்பெண்களின் பெற்றோர்   தங்களின் மகள்களை மீட்பதற்காக போராடி வருகிறார்கள். அவர்களுக்கு உதவிட யாரு மில்லாத  நிலையில், வழக்குரைஞருக்கு எழுதியுள்ள கடிதங்களில்,

Òஎன் மகள் எங்கே அடைக்கப்பட்டிருக் கிறார் என்று கூட எங்களுக்குத் தெரிய வில்லை. என் மகளை சந்திப்பதற்கு அனுமதிக்கவில்லை. ஆசிரமத்தில் ஆபாச மான நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக கேள்விப்படுகிறோம்.

மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையே எங்கள் மகளை சந்திக்கும்போது, அவள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஆசிரமத் திலேயே தொடர்ந்து இருக்கப்போவதாகவும் கூறிவிடுகிறாள் ஆனால், அங்கே மிகவும் அச்சத்துடனும, பலவீனமாகவும் இருக் கிறாள். ஆசிரமத்தில் உள்ளவர்களின் அழுத்தம் காரணமாகவே அவள் அப்படி சொல்கிறார்கள் என்றே எண்ணுகிறோம். எப்படியாவது எங்கள் மகளை மீட்டுக் கொடுங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்ÕÕ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

சமூக அதிகாரங்களுக்கான தொண்டு நிறுவனம் சார்பில் வழக்குரைஞர் குப்தா அளித்த புகாரின்பேரில், டில்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சாமியார் வீரேந்திர தேவ் தீக்சித் ஆசிரமங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண் டனர். அதனையடுத்தே பெற்றோர் தரப்பி லிருந்து தங்களின் மகள்களை மீட்கக்கோரி டில்லி காவல்துறையினருக்கும், வழக்குரைஞர் குப்தாவுக்கும் மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

40ஆண்டு கால சாமியாரின் மோசடிகள்

கடந்த 40 ஆண்டுகளாக சாமியார் தீக்சித்தின் Ôபுனிதமற்றÕ சாம்ராஜ்யத்தின் உள்ளே நடைபெற்றுவரும் அக்கிரமங்கள் குறித்து Ôபக்தர்கள்Õ பலரும் வெளியிட்டு வரு கின்றனர்.

கோரக்பூர் வனிதா எனும் சீடர் கூறியதாவது:

“ஆசிரமத்தில் சீடர்களாக சேர்க்கப்படு பவர்கள் முதலில் அவர்களின் உறவுகளிட மிருந்து பிரிக்கப்படுகின்றனர். வாழ்விணை யர்களிடமிருந்து முற்றிலுமாக எவ்விதத் தொடர்பும் கொள்ள முடியாத அளவுக்கு பிரிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மிகவும் குறைவான அளவே உணவு அளிக்கப் படுகிறது. சமூக உறவுகளிலிருந்து அறவே துண்டிக்கப்பட்டு, பொது நிகழ்வுகளில் பங்கேற்பதிலிருந்து தடுக்கப்பட்டுவிடுவார்கள்’’ என்கிறார்.

பக்தர்களின் பெயரால் பெண்கள் ஆசிரமத்தில் சென்று சேருவது எப்படி?

75 வயதான சாமியார் வீரேந்திராவின்  பக்தி மற்றும் பாலியல் சதி வலையில் சிக்கியவர்களில் பலரும் பிரம்ம குமாரிகள் ஆவர். ஆசிரமத்தின் முகவர்களாக செயல்பட்டு வந்தவர்கள் அண்டை மாநிலங்களான உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட, நடுத்தர வகுப்புகளைச் சார்ந்தவர்களை சத் சங்கத்தின் பெயரில் அல்லது கீதை வழி என்று கூறிக்கொண்டு   Ôமாதாக்கள்Õ என்றும், Ôபையாக்கள்Õ எனும் பெயரில் ஆசிரமங்களில் அடைக்கப்பட்டனர்.

பிரம்ம குமாரிகள்

லேகி கிருபளானி நிறுவிய பிரம்ம குமாரிகள் அமைப்பினர் வீரேந்திராவின் சீடர்களாக மாற்றப்பட்டனர். வீரேந்திர தீக்சித் சீடர்களுக்கு ஏழு நாள்கள் உபதேசம் செய்வாராம். ஆனால், பலரும் பின்னரே அவர் ஒரு மோசடிக்காரர் என்பதை உணர்ந்தனர்.

சாமியாரிடம் மகளைப் பறிகொடுத்த காவல்துறை உதவியாளர்

சாமியாரின் சீடராகவே இருந்தவரான காவல்துறை உதவி ஆய்வாளர் கே.கார்க் கூறுகையில், “அவரை நாங்கள் கடவுளாக கருதினோம். சீடர்களாக வருபவர்களை மூளைச்சலவை செய்து, அவர்களிடமிருந்து பணம், சொத்துகள் மற்றும் அவர்களின் மகள்களையும் மகிழ்வுடனே அளிக்க செய்துவிடுகிறார்கள்’’ என்கிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய 16 வயது மகளை ஆசிரமத்துக்கு அனுப்பிவைக்குமாறு காவல்துறை உதவி ஆய்வாளர் கார்க்கிடம் சாமியார்  வீரேந்திர தீக்சித் கூறியபோது, ஆன்மிகத்தில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக்கொள்வாள் என்று நம்பி அனுப்பினோம்.   2003ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காம்பிள் எனும் சிறு நகரில் உள்ளஆசிரமத்துக்கு கொண்டு செல்லப்பட்டாள். அதன்பிறகு 2004, 2005 என அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக வாரந்தோறும் தியானம் செய்வதற்காக ஆசிரமத்துக்கு நாங்கள்  சென்றபோதிலும் அவளைப் பார்க்கவே முடியவில்லை.  இரண்டு முறை மட்டுமே தொலைபேசி மூலமாகமட்டுமே எங்களால் எங்கள் மகளிடம் பேச முடிந்தது’’ என்றார்.

காவல்துறையினராலேயே பெண்களை மீட்க முடியவில்லை

கே.கார்க் ஒரு காவல்துறையில் பயிற்சி களைப் பெற்று, உதவியாளராக இருந்த போதிலும், அவரால் சாமியாரிடமிருந்து தன் மகளை இதுநாள் வரையிலும் மீட்க முடிய வில்லை. அவர் மகள் காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டும் இன்னமும் மீட்க முடியவில்லை.

சாமியார் வீரேந்திர தேவ் தீக்சித்தின் எளிமையான தோற்றத்தைக் கண்ட மக்கள் ஏமாறுகின்றனர். அவரின் சீடர்களோ அவரை கடவுள் என்றே கூறுகின்றனர். 2020ஆம் ஆண்டில் உலகம் அழியும் என்று அவர் கூறுவதை நம்புகிறார்கள். அவர்கள் நன்றாக வாழ வேண்டுமென்பதற்காக நன்கொடை களை வழங்குவதன்மூலம் தங்களையே சாமியாரிடம் ஒப்படைத்துக்கொள்கிறார்கள்.

கடவுளைத் தேடினோம்

சாத்தானைத்தான் கண்டோம்

ஆசிரமத்தின் சேவை ஊழியராக (சேவாதர்) இருந்து வருகின்ற பெண் பாண்டா சவீதா. அவரிடமிருந்த பெருமதிப்புமிக்க  சொத்துகள், ரூ.10 லட்சத்தை சாமியாரிடம் கொடுத்தது மட்டுமல்லாமல், 2007ஆம் ஆண்டில் தன் மகளையும் தீக்சித்திடம் ஒப்படைத்துள்ளார். 2015ஆம் ஆண்டில் தன் மகளுடன் ஆசிரமத்தைவிட்டு தப்பினார்.

அவர் கூறும்போது, “நாங்கள் கடவுளைத் தேடி சென்றோம். ஆனால் சாத்தானைத்தான் கண்டோம்’’ என்கிறார்.

14 வயது சிறுமிகள் பாதிப்பு

ஆன்மிகக் கல்வி போதனை என்கிற பெயரில், 14 வயது பெண்களை குடும்பத் தினரிடமிருந்து அபகரித்துள்ளார். முதலில் குழந்தைகளை குடும்பத்தினரிடமிருந்து பிரித்து, குடும்பத்தினரை எளிதில் சந்திக்க முடியாதபடி செய்து விடுகிறார்கள்.

டில்லி ஆசிரமத்தில் காவல்துறையினரின் சோதனையின்போது, ஏராளமான சிறைச் சாலைக் கொட்டடிகள் போன்று சிறு சிறு அறைகள் ஆசிரமத்துக்குள் இருந்தன. ஆசிரமம் முழுவதும் கண்காணிப்பு கேம ராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரமத் துக்குள் உள்ள எவர் ஒருவரும் அவர் களுக்குள்ளாகவே எளிதில் சந்தித்துபேசிவிட முடியாத அளவுக்கு கெடுபிடிகள்.

குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள முடியாத கெடுபிடிகள்

ஆசிரமத்தில் உள்ள பெண்களின் குடும்பத்தார் சந்திக்க வேண்டுமானால் பெற்றோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கும் அவர்கள் நான்கு மணி நேரம் காத்திருக்கவேண்டும். பெரிய அறையில்தான் சந்திக்க விரும்புபவர்கள் நிறைய பேர் முன்னிலையில்தான் சந்தித்துக்கொள்ள வேண்டும். மகளிடம் அந்தரங்கமாக அவளின் தாயால்கூட பேச முடியாது. ஆசிரமத்தில் உள்ள தங்களின் மகள்களைக் காண விரும்புவோர் ஆசிரமம் உள்ள டில்லியிலே தங்க நேரிடும். தெலங் கானா மாநிலத்திலிருந்து வரும் பெற்றோர் தங்கள் மகளைக் காணவேண்டும் என்று விரும்பினால்,  அவர்கள் டில்லியிலேயே தங்கிவிட வேண்டியதுதான். காரணம், இரண்டு ஆண்டுகளில் தொடர் முயற்சியின்பேரில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே சந்திப்பதற்கான அனுமதி அளிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்

ஆராய்ச்சியாளர்

அமெரிக்காவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றியவரான தங்களின் மகள் ஆசிரமத்தில் இருந்தார்.  ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜுகுனு பகுதியைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளை சந்திப்பதற்கு அனுமதி கோரி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்கள். 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில்   அவர்கள் தங்கள் மகளைச் சந்திப்பதற்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில், தங்கள் மகள் 2015ஆம் ஆண்டில் ஜூலை மாதத்திலேயே  திடீரென காணாமற்போனாள்.

ரோகினி ஆசிரமத்தில் சோதனையில்

50 பெண்கள் மீட்பு

சமூக அதிகாரத்துக்கான அறக்கட்ட ளையின் முயற்சியால் சாமியார்மீது வழக்கு தொடுக்கப்பட்டது.   19.12.2017 அன்று ரோகினி ஆசிரமத்தில் சோதனைகள் மேற்கொள்ளப் பட்டது. சோதனையின்போது ஆசிரமத்தி லிருந்து 50 பெண்கள் மீட்கப்பட்டனர்.

பெண்களில் வயதானவர்களை ஆசிர மத்தைவிட்டு வெளியேறவிடாமல்,  சேவை ஊழியர் பணி (சேவாதர்) அளிக்கப்படுகிறது. பேகன்கள், மாதாக்கள் எனப்படும்  ஆசிர மத்தின் அறைகளில் அடைக்கப்பட்டு இருப்பார்கள்.  அவர்களை வயதான பெண்கள் எவரும் சந்திக்க முடியாது.

ஆசிரமத்தில் இளம் பெண்கள் Ôபேகன் களாகÕ அடைக்கப்பட்டிருப்பார்கள். சவீதாவின் மகளும் பேகனாகவே அடைக்கப்பட்டி ருந்தார். அதிகாலை 2 மணியிலிருந்து அதிகாலை 2.30 மணி வரை  தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்பு செய்யப்படுகின்ற சாமியாரின் உபதேசங்களை கவனிக்க வேண்டும். அடுத்த இரண்டு மணி நேரங்களாக சாமியாரின் படத்தையே உற்றுநோக்கி தியானம் செய்ய வேண்டும். அதன்பிறகு அந்த அதிகாலை நேரத்திலேயே குளித்து, அதிகாலை 4 மணிக்கு தயாராக வேண்டும். நாள்முழுவதும் சாமியாரின் உபதேசங்களை (முரளி-போதனை) கேட்கவேண்டும். பெற்றோருடன் போக விரும்பும் பெண்கள் சபிக்கப்படுவார்கள் என்று போதனையின்போது சாமியார் அச்சுறுத்துவாராம்.

பிரம்ம குமாரிகள் நிறுவனர் லேக் ராஜ் கிருபளானிக்கு சிவன் ஞானத்தை அளித்த தாகக் கூறியே அவருடைய போதனைகளை ÔமுரளிÕ என்று குறிப்பிடப்படுவதைப்போல், சாமியார் வீரேந்திர தேவ் தீக்சித் உபதே சங்களையும் ÔமுரளிÕ என்றே ஆசிரமத்தில் கூறிவருகின்றனர்.

பெண்களுடன் இரவுப்பொழுதில்

Ôகுப்த பிரசாதமாம்Õ

ஆசிரமத்துக்கு சாமியார் வரும்போ தெல்லாம் 8 முதல் 10 பேரை தேர்வு செய்து இரவு நேரத்தில் Ôகுப்த பிரசாதம்Õ அளிப்பாராம். காவல்துறை உதவி ஆய்வாளர் கே.கர்க், சவீதா ஆகியோர் கூறியதன்படி சாமியார் பாலியல் தொல்லைகளை பெண் சீடர்களுக்கு அளித்து வந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

16,108 ராணிகளாம்

சவீதா கூறுகையில், வீரேந்திரா தேவ் தீக்சித் தன்னை கிருஷ்ணன் என்று கூறிக்கொள்வதால், Ôகுப்த பிரசாதம்Õ அளிப் பதற்காக தேர்வு செய்யப்படும் பெண்கள் ÔராணிÕ என்று அழைக்கப்படுகின்றனர். கிருஷ்ணனைப்போலவே சாமியாருக்கு 16,108 ராணிகள் உள்ளனர். ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்ட பெண்களின் மாதவிலக்கு பதிவுகள் பராமரிக்கப்படுகின்றன’’ என்றார்.

ஆசிரமத்தில் உள்ள பெண்கள் எழுதி வைத்த புகார்களாக தாள்கள் கண்டெடுக்கப் பட்டன. அவற்றில், அப்பெண்களின் உறவி னர்களுக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள் ளது. மோசமாக நடத்துவது, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்கள் அவற்றில் கூறப்பட்டுள்ளன.

வழக்குரைஞர் குப்தா கூறுகையில், “பெண்கள் எழுதிய கடிதங்கள், புகார்களில் கூறப்பட்டவர்களின் பெயர்கள் அனைத்தும் பார்வையாளர் பதிவேட்டில் அனுமதிக்கப் பட்ட ஆண்களின் பெயர்களாகவே உள்ளன. இது சந்தேகத்துக்கிடமானதாக உள்ளது’’ என்றார்.

சாமியார்களை கடவுளாக கருதும் நோய்

பெண்கள் ஏராளமானவர்கள் சாமியார் தீக்சித்தை  கடவுள் என்று நம்புவது அதிர்ச்சிகரமானதுமல்ல புதியதுமல்ல. ஏற்கெனவே, சாமியார்களாக உள்ள ஆசாராம், ராம் ரகீம், ராம்பால் ஆகியோருக்கும் சீடர்களாக, பக்தர்களாக ஏராளமானவர்கள் இருந்துள்ளனர்.

சமூகவியலாளர் சிவ விஸ்வநாதன் கூறுகையில், வாழ்க்கைமுறைகள்குறித்த மக்களின் தேடுதல்களால்தான், சாமியார்களை கடவுள் என்று கருதுகின்ற தன்மையானது அதிகரித்து வருகிறது. முன்பு அரசியல் வாதிகள்  மக்களை கவர்ந்தார்கள். இப்போது  மதத்தை மய்யப்படுத்தியுள்ளனர். குரு என்பவர் அனைத்தையும் செய்யும் வலிமை பொருந்தியவர் என்று கருதுவதால் இது போன்ற நிலைகள் ஏற்படுகின்றன என்றார்.

சாமியாரின் ஆசிரமங்கள்

1976-77இல் அத்யாத் மிக் விஷ்வவித்யாலயா அல்லது ஆன்மிக பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
பன்னாட்டளவில் 25ஆயிரம் பக்தர்கள் உள்ளனர்.

இந்தியா, நேபாளத்தில் 160 ஆசிரமங்கள்

ஆசிரமத்தில் 60 முதல் 70 விழுக்காட்டளவில் பெண்களே உள்ளனர். மாதாக்கள், பேகன்கள் நிலைகளிலிருந்து சிவசக்தியாக உயர்த்துவதாகக் உறுதி கூறப்பட்டது.

- விடுதலை ஞாயிறு மலர், 27.1.18