பாலியல் வன்முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலியல் வன்முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 ஜனவரி, 2019

இளம்பெண்ணை கோயிலில் அடைத்து வைத்து பாலியல் வல்லுறவு!

அயோத்தியில் தலைமை அர்ச்சகர் கைது




அயோத்தி, ஜன.4 -அயோத்தியில், கோயிலுக்கு வந்த பெண்ணை உள்ளேயேஅடைத்துவைத்து, பலமுறை பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கிய சம்ப வம் நடந்துள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட தலைமை அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தி லுள்ள அயோத்தி, கோயில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி இங்குள்ள கோயில் ஒன்றுக்கு, வாரணாசியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் வழிபாட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்குள்ள தலைமை அர்ச்சகர், அந்தப் பெண்ணிடம் ஆன்மிகம் தொடர்பாக பேசிக் கொண்டே கோயிலில் இருந்த அறைக்குள் அழைத்துச் சென்று அடைத்துள்ளார். பின்னர் ஒருவாரமாக அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார். கடும் சித்ரவதையை அனுபவித்து வந்த அந்த இளம்பெண், செவ்வாய்க்கிழமையன்று கோயிலில் இருந்து தப்பி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரிடம் வாக்குமூலம் பெற்று, மருத்துவ பரிசோதனைகளை நடத்திய காவல்துறையினர், தலைமை அர்ச்சகரை தற்போது கைது செய்துள்ளனர்.

- விடுதலை நாளேடு, 4.1.19

திங்கள், 10 டிசம்பர், 2018

யாரிந்த சாமியார் சாக்ஷி?



1956ஆம் ஆண்டு பிறந்த சாமியார் சாக்ஷியின் உண்மையான பெயர் அரி, இளம் வயது முதலே பல்வேறு வழக்குகளின் கீழ் சிறைசென்றவர். இவரது தந்தை ஆத்மானந்த என்பவர் ஆங்கிலேயர்களால் கைவிடப்பட்ட பண்ணை வீட்டை ஆக்கிரமித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது, தான் ஆக்கிரமித்த இடத்தையும் வீட்டையும் சாக்ஷி ஆசிரமம் என்று பெயரிட்டு மதச்சாயம் பூசிவிட்டார். அரி தன்மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் அரி என்ற பெயரைவிட தனது தந்தையின் ஆசிரமமான சாக்ஷி என்பதையே தனது பெயராக மாற்றிக்கொண்டார்.

இவர் மீது கொலை, கொள்ளை பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமிகளைக் கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக 37-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

2014ஆம் ஆண்டு தேர்தலில் வேட்பாளர் மனுதாக்கல் செய்தபோது இவரே சமர்பித்த விபரம் ஆங்கிலத்தில் பட்டியலிடப் பட்டுள் ளது.

1.    4 charges related to criminal intimidation (IPC Section-506)
2.    2 charges related to Promoting enmity between different groups on grounds of religion, race, place of birth, residence, language, etc., and doing acts prejudicial to mainten ance of harmony (IPC Section-153A)
3.    2 charges related to Cheating and dishonestly inducing delivery of property (IPC Section-420) 
4.    2 charges related to Forgery of valuable security, will, etc. (IPC Section-467)
5.    2 charges related to Forgery for purpose of cheating (IPC Section-468)
6.    1 charge related to voluntarily causing hurt to deter public servant from his duty (IPC Section-332)
7.    1 charge related to Injuring or defiling place of worship with intent to insult the religion of any class (IPC Section-295)
8.    1 charge related to Dacoity with murder (IPC Section-396)
9.    1 charge related to Robbery, or dacoity, with attempt to cause death or grievous hurt (IPC Section-397)
10.    1 charge related to criminal breach of trust (IPC Section-406)
11.    1 charge related to Criminal breach of trust by public servant, or by banker, merchant or agent (IPC Section-409)
12.    1 charge related to Murder (IPC Section-302)
13.    4 charges related to Intentional insult with intent to provoke breach of the peace (IPC Section-504)
14.    3 charges related to rioting (IPC Section-147)
15.    3 charges related to voluntarily causing hurt (IPC Section-323)
16.    2 charges related to Using as genuine a forged document or electronic record (IPC Section-471)
17.    1 charge related to Punishment (IPC Section-53)
18.    1 charge related to Causing grievous hurt by act endangering life or personal safety of others (IPC Section-338)
19.    1 charge related to Punishment of criminal conspiracy (IPC Section-120B)


இவ்வளவு குற்றப்பின்னணி கொண் டவர் அரசியலுக்கு வரத் தகுதியானவர் தானே, அதுவும் காவி உடை உடுத்தியவர் என்றால் கூடுதல் தகுதி. எனவே 1999-ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச பாஜக பருக்காபாத் நாடாளுமன்றத்தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது. வாஜ்பாயின் நண்பரான பிரம்தத் திரிவேதியை கொலைசெய்தவர்களுள் அரி என்ற சாக்ஷியும் ஒருவர் என வாஜ்பாயிடம் உளவுத்துறை கூறியதை அடுத்து இவர் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் இவரை சமாஜ்வாதி கட்சி மாநிலங்களவை உறுப்பினராக்கி டில்லிக்கு அனுப்பிவைத்தது.

2000ஆம் ஆண்டு ஆக்ரா சாலையில் விபத்தில் சிக்கிய ஒரு குடும்பத்தை மீட்கிறேன் என்று கூறி விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணை தன்னுடைய ஜீப்பில் தூக்கிச் சென்று பாலியல்வன்கொடுமை செய்தார். இந்த வழக்கில் இவரும் இவரது இரண்டு சகோதரர்களும் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். 2005ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினருக்காக ஒதுக்கிய பணத்தை முழுவதுமாக கையாடல் செய்தது தொடர்பாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து 21 மார்ச் 2006 அன்று நாடாளுமன்றத்தில் இருந்து தகுதிநீக்கம் செய்யும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது, இவர் குடியரசுத்தலைவர் மற்றும் சபாநாயகரிடம் மன்னிப்புக் கடிதம் எழுத்திக் கொடுத்தும் இவரது கடிதம் நிரா கரிக்கப்பட்டு இவர் தகுதி நீக்கம் செய்யப்பட் டார்.

2009ஆம் ஆண்டு சுஜாதா வர்மா என்ற கல்லூரி முதல்வரை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டார். பிறகு 1500 ரூபாய் பிணையில் விடுதலைசெய்யப் பட்டார். 2012ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். 2014ஆம் ஆண்டு அமித்ஷா இவரை உன்னாவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். இதனை அடுத்து இவர் 3ஆவது முறையாக நாடாளுமன்ற உறுப்பின ரானார். இவர் மீது இன்றும் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

சர்ச்சைப் பேச்சுக்கள்

2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கோட்சேவின் சிலையை வைக்கவேண்டும் என்று பல்வேறு சாமியார் அமைப்புகளில் இருந்து கையெழுத்து வாங்கி மோடியிடம் வழங்கச் சென்றார். ஆனால் மோடி அயல்நாட்டுப் பயணத்தில் இருந்ததால் அவரால் இயலவில்லை. இதனால் இவர் பொதுவாக நாடாளுமன்றத்தில் கோட்சே சிலையை வைக்க அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று அறிக்கை விட்டார். இது இவரது தனிப்பட்ட கருத்து என்று பாஜக தலைமை அறிக்கை விட்டது. இந்துக்கள் அனைவரும் அய்ந்து குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டும், இந்து மதம் நிலைத்து நிற்கவேண்டு மென்றால் பெண்கள் இந்த தியாகத்தை செய்தே ஆகவேண்டும் என்று அறிக்கை விட்டார். ராஜஸ்தான் பள்ளியில் அனைத்து மாணவர்களும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று கட்டாய சுற்றறிக்கை விட்டபோது அதை நாடு முழுவதிலுமுள்ள இசுலாமிய அமைப்புகள் கடுமையாக எதிர்த் தனர். இதற்கு கருத்து கூறிய சாமியார் சாக்ஷி சூரிய நமஸ்காரத்தை வெறுப்பவர்கள் தெரு வில் செல்லக்கூடாது, பகலில் நடமாடாமல் இரவில் மட்டும் இவர்கள் நடமாடவேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்தார்.

தாதரியில் அக்லாக் முகமது படுகொலை செய்யப்பட்டது குறித்து இவர் கூறும் போது, பசுவைக் கொலை செய்தவர்களுக்கு இதைவிட ஒரு நல்ல பாடம் எதுவுமே இருக்கமுடியாது என்று கூறியவர். இந்துக்கள் அனைவரும் கையில் ஆயுதம் எடுக்க வேண்டும்; பசுவை கொலைசெய்யும் ஒவ் வொருவரையும் கொலைசெய்யவேண்டும் என்று கூறினார். பின்னால் கொலைசெய்யும் பேச்சு பத்திரிகைகளால் மிகைப்படுத்தப்பட்டது என்று கூறினார். இவரை அமித்ஷா டில்லிக்கு அழைத்து கண்டித்ததாக பத்திரிகைகள் எழுதின. ஆனால் அப்படி ஒன்றுமில்லை. பீகார் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த என்னை அழைத்தார் என்று கூறினார். பீகார் தேர்தலின் போது பசுமாட்டுப் பிரச்சினையைக் கிளப்பி, இந்துக்களின் ஓட்டுக்களைப் பெற திட்டம் தீட்டிக்கொடுத்த வர்களில், இவரும் ஒருவர் என உ.பி.யிலிருந்து வெளிவரும் அமர் உஜாலா என்ற பத்திரிகையின் நிருபர் ஒருவர் கூறியிருந்தார். பின்னர் அவர் தான் சொன்னது தவறு என்று மன்னிப்பு கடிதமும் வெளியிட்டார். சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பி அளிப்பவர்கள் அனைவரும் மோடியின் எதிரிகள் என்றும் மோடியின் புகழை விரும்பாமல் இவர்கள் இப்படிச் செய்வ தாகவும் கூறியிருந்தார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் கன்னையா குமார் உட்பட 7 மாணவர்களை நடுரோட்டில் தூக்கிலிட வேண்டும் என்று கூறினார்.

நிலை மாற வேண்டும்


பார்ப்பனர்கள் என்ன சொல்லும் நிலைமை ஏற்படவேண்டும்? நாங்கள் 100க்கு 3 பேர் இருக்கிறோம். எங்களுக்கும் உரிமை அளிக்கப்படவேண்டும் என்று பார்ப்பனர்கள் நம்மிடம் கேட்கவேண்டும். இன்று நாம் நமது விகிதாசாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிற நிலை மாறவேண்டும் என்றார் தந்தை பெரியார்.


- விடுதலை', 30.1.1970

விடுதலை ஞாயிறு மலர்', 24.11.18



வியாழன், 29 நவம்பர், 2018

பாலியல் வழக்கு: தென்கொரியாவில் பாதிரியாருக்கு 15 ஆண்டு சிறை



சியோல், நவ. 26- தென் கொரி யாவின் தலைநகர் சியோலில், மேமின் மத்திய தேவாலயம் என்ற பெயரில் மிகப்பெரிய கிறித்தவ ஆலயத்தை நடத்தி வந்தவர் பாதிரியார் லீ ஜே ராக் (வயது 75).

1982-ஆம் ஆண்டு வெறும் 12 பேருடன் ஆரம்பித்த இந்த தேவாலயத்தில் இப்போது 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் உறுப் பினர்களாக இருக்கிறார்கள்.

அந்த ஆலயத்தின் உறுப்பி னர்களாக உள்ள 3 பெண்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்களை பாதிரியார் லீ, தனது அடுக்கு மாடி குடியிருப்பு வீட் டுக்கு அழைத்து, வலுக்கட்டா யமாக பாலியல் வன்முறை செய்து விட்டார் என புகார் செய்தனர்.

அவர்களில் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அவர் அரசரை விட மேலா னவர். அதனால்தான் அவர் கேட்டதை என்னால் மறுக்க முடியவில்லை என்று கூறினார்.

இந்த 3 பெண்களைப் போன்று மேலும் 5 பெண்கள், பாதிரியார் லீ மீது காவல்துறை யில் பாலியல் புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து அவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட் டார். அவர் தன் மீதான பாலியல் புகார்களை மறுத்தார்.

இருப்பினும் அவர் மீது சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்படி வழக்கு விசாரணை நடைபெற் றது. விசாரணையில், அவர் தனது ஆலயத்தில் உறுப்பினர் களாக உள்ள பெண்களை நீண்ட காலமாக பாலியல் வன் முறை செய்து வந்திருப்பது அம்பலமானது. இதையடுத்து அவர் குற்றவாளி என கருதி 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சுங் மூன் சங் தீர்ப்பு அளித்தார்.

-  விடுதலை நாளேடு, 26.11.18

திங்கள், 12 நவம்பர், 2018

சிறைக்குப் படை எடுக்கும் சாமியார்கள்



பாலியல் வன்முறை மற்றும் இயற்கைக்கு மாறாக உறவுகொண்டது உள்ளிட்ட குற்றங்களின்கீழ் சாமியார் தாதி என்பவர்மீது மத்திய புலனாய்வு விசாரணைக் குழு விசாரணை செய்ய டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாமியார் தாதியின் பாலியல் வன்முறை யால் பாதிக்கப்பட்ட 25 வயது பெண் ஒருவர் தெற்கு டில்லி ஃபதேபுர்பேரி காவல்நிலை யத்தில் 7.6.2018 அன்று புகார் கொடுத்தார். சாமியாருடன் உள்ள பெண் ஒருவர் தம்மை கட்டாயப்படுத்தி சாமியாரின் அறைக்குள் தள்ளிவிட்டதாகவும், சாமியார் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகவும் காவல்நிலையத்தில் அப்பெண் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார். சாமியாரின் சீடராக பத்து ஆண்டு களுக்கும் மேலாக இருந்த அப்பெண்ணுடன் மற்ற இருவரையும் சேர்த்து அவர்களின் சொந்த மாநிலமாகிய ராஜஸ்தானுக்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.

சாமியாரின் கட்டாயத்தின்பேரில் அவ ரது இச்சைக்கு உடன்படாத பெண்ணிடம், இங்குள்ள அனைத்து பெண்களுமே என்னுடன் படுத்தவர்கள்தான் என்று ஆணவத்துடன் கூறினாராம்.

சாமியார்மீது அப்பெண் அளித்த புகாரின்பேரில் 22.6.2018 அன்று தாதி மண்டல் எனப்படும் ஆசிரமத்தில் சாமி யார் தாதியிடம் டில்லி காவல்துறையினர் விசாரணை செய்தார்கள். அதன்பின்னர் வழக்குப் பதிவு செய்தார்கள்.

அதன்பின்னர், விசாரண செய்த பெண் அலுவலர் உள்ளிட்ட காவல்துறை அலு வலர்களைக் கொண்ட விசாரணைக் குழுவினர் ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியிலுள்ள இதே சாமியாரின் ஆசிர மத்துக்கும் சென்று விசாரணை நடத்தினர். சாமியாருக்கு எதிரான ஆதாரங்களைக் கைப்பற்ற சென்றார்கள். ஆனால், சாமி யார் அங்கிருந்தும் தலைமறைவாகி விட்டார். அதனால், தேடப்படும் குற்றவாளி கள் பட்டியலில் சாமியாரின் பெயரை காவல்துறையினர் வெளியிட்டனர். சாமியார் தாதி மண்டலை விட்டு வெளி யேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டில்லி காவல்துறையினரின் விசாரணை தீவிரமாக இல்லை என்று குறிப்பிட்டு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவில் மனுதாரர் கூறுகையில், ஏராளமான அரசி யல்வாதிகள், மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் சானிதம் ஆசிரமத்துக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்கள். ஆகவே, முறையான விசாரணை நடைபெறுவதை காவல்துறையின் குற்றப்பிரிவால் உறுதிப் படுத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் டில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு சாமியார்மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு (11.6.2018) மூன்று மாதங்களுக்குப் பின்னர் காவல்துறையினர் சாமியார் மீதான பாலியல் வன்முறை வழக்கின் குற்றப்பத்திரி கையை அளித்தனர்.

டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோரைக்கொண்ட அமர்வில் நடை பெற்ற வழக்கு விசாரணையில், இவ்வழக் கின் புலனாய்வு விசாரணையை மனுதார ரின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய புலனாய்வுக்குழுவின் (சிபிஅய்) விசார ணைக்கு உத்தரவிடப்பட்டது.

-  விடுதலை நாளேடு, 5.11.18

பெண்களை பாலியல் வன்முறை செய்த சாமியார் சதுர்வேதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

சென்னை நவ.11 பெண்களை பாலியல் வன்முறை செய்த வழக்கில் சிக்கிய சாமியாரை, தேடப்படும் குற்றவாளியாக, தமிழக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

சென்னை, தியாகராயர் நகர் பசுல்லா சாலையை சேர்ந்தவன், பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதி (வயது 46) சாமியார் என, அறிவித்து கொண்ட இவன், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துவது மற்றும்  அதே பகுதியில், ஆசிரமும் நடத்தி வந்தான். அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்களையும் நடத்தினான். தன் வசீகர பேச்சால், பெண்களை மயக்குவதிலும் கில்லாடி.சதுர்வேதியின் சொற்பொழிவை கேட்க, 2002 அக்டோபரில், சென்னை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே.சாலையைச் சேர்ந்த, தொழிலதிபர் ஒருவரின் மனைவியும், அவரது, 16 வயது மகளும், அடிக்கடி சென்றனர்.

அதை பயன்படுத்தி, இருவரையும், சதுர்வேதி, தன் பிடியில் கொண்டு வந்தான். இதனால், அவன் ஆட்டி வைக்கும் கைப் பாவையாக மாறினர். இருவரும், அவ்வப்போது, சதுர்வேதியின் ஆசிரமத்திலேயே தங்கினர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சாமியார் சதுர்வேதி, தாய் மற்றும் மகளை, பல முறை பாலியல் வன்முறை செய்துள்ளான்.அவர்களை பகடை காயாக பயன்படுத்தி, பல கோடி ரூபாய் மதிப்பு உள்ள, தொழிலதிபர் வீட்டின் கீழ் தளத்தை, அறக்கட்டளைக்கு என, எழுதி வாங்கி உள்ளான். அந்த வீட்டில், தன் ஆசிரம உதவியாளர்களை குடியமர்த்தி, தொல்லை கொடுத்து உள்ளான்.

அவனது உண்மை முகம் தெரிய வந்ததும், தாயும், மகளும் விலகினர். அதனால், ஆத்திரம் அடைந்த சதுர்வேதி, தன் ஆசிரம உதவியாளர்கள் உதவியுடன், 2004 செப்., 17இல், ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்த, தொழிலதிபர் மனைவி மற்றும் மகளை, ஆந்திராவுக்கு கடத்திச் சென்று, பாலியல் சித்ரவதை செய்துள்ளான்.இதுகுறித்து, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், தொழிலதிபர் புகார் அளித்தார்.

மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரித்து, 2004 நவ., 6இல், சதுர்வேதியை கைது செய்தனர். அவனது பிடியில் இருந்த, இருவரையும் மீட்டனர்.

இந்த வழக்கு, சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் ஆஜராகாமல், 2016 நவ., 3இல் இருந்து, சதுர்வேதி தலைமறைவாகி உள்ளான். அவனை, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து உள்ளனர்.

அவன், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கும், லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இருப்பினும், காவல்துறையை ஏமாற்றி விட்டு, அவன், நேபாளம் பறந்து விட்டதாக தெரிகிறது.

- விடுதலை நாளேடு, 11.11.18

ஞாயிறு, 4 நவம்பர், 2018

ஆயுள் தண்டனை பெற்ற இந்த சாமியார் யார்?



‘சாமியார் ராம்பால்’ பல பெண்களை பாலியல்வன் கொடுமை செய்ததாகவும், அதில் சில பெண்களை கொலை செய்ததா கவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த அரியானா, பஞ்சாப் உயர்நீதிமன்றம் சாமியாருக்கும் அவரது கூட்டாளிகள் 14 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

அரியானா மாநிலம் இசார் மாவட் டத்தின் தலைநகரில் 300 ஏக்கர் நிலப் பரப்பில் பிரமாண்டமான கோட்டைகளைக் கட்டி ஆசிரமம் ஒன்றை நிர்மானித்து நடத்திவந்தவர் சாமியார் ராம்பால். இவரது ஆசிரமத்தின் பெயர் ‘சாத்லோக்’ அதாவது ஏழு உலகமும் அங்கு உள்ளதாக கூறி வந்தார். இந்த ஆசிரமத்திற்குள் ஒரு நாட் டையே உருவாக்கி அதற்கு ராணுவத்தை யும் உருவாக்கி இருந்தார். அங்கு செல்ப வர்கள் பொருட்கள் வாங்க சாமியார் உருவம் பொறித்த வில்லைகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும். இவருக்கு அரி யானா மற்றும் டில்லியில் உள்ள ஆட்சி யாளர்களில் முக்கியமானவர்கள் பக்தர் களாக இருந்தனர். இவருக்கும் அரியானா, சென்னை, டில்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் நாடு முழுவதும் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது.

2006-ஆம் ஆண்டு இவர் தங்களது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக இரண்டு பேர் புகார் அளித்தனர். முதலில் டில்லி மித்தாபூரைச் சேர்ந்த ஷிவ்பால் என்பவர் தனது மனைவியை ராம்பால் கொன்றதாக புகார் அளித்தார். இரண்டாவது உ.பி.யில் உள்ள லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜாக்ஹோரா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் குற்றம்சாட்டினார். ஆனால் இந்தக் புகாரின் மீது அரியானா காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் அரியானாவில் உள்ள ஜிந்த் என்ற இடத்தில் உள்ள விவசாய நிலத்தை இவர் அபகரித்துகொண்டதாக மக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப்போராட்டத்தை ஒடுக்க தனது அடியாட்களை ஏவிவிட்டார். அந்த அடியாட்களில் தாக்குதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த விவகாரம் பெரிதான பிறகு 2014-ஆம் ஆண்டு நீதிமன்ற வற்புறுத்தலின் பேரில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து இவரைக் கைதுசெய்ய காவல்துறையினர் இவரது ஆசிரமத்திற் குள் நுழைய முற்பட்டனர். அப்போது ஆசிரமத்திற்கு உள்ளே இருந்து தாக்கு தல்கள் தொடர்ந்தது, இதனை அடுத்து துறை ராணுவம் வரவழைக்கப்பட்டது, 700-வீரர்களைக் கொண்டு துணை ராணு வம் ஆசிரமத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போது, அங்கு துப்பாக்கிகளும் மற்றும் எரிவாயு சிலிண் டரை வெடிகுண்டுகளாக பயன்படுத்த தயார் நிலையில் இருந்த 100க்கும் மேற்பட்டோரை அதிரடியாக கைது செய்தனர்.  சாமியாரின் ஆதரவாளர்கள் நடத்திய ஆயுதத்தாக்குதலில் ஒரு உதவி காவல் ஆய்வாளர்கள் 7 காவல்துறை யினர் மரணமடைந்தனர். அதன் பிறகு ஆசிரமத்தின் அனைத்து பகுதிகளும் சோதனையிடப்பட்டது, சாமியார் ராம்பா லின் இருப்பிடத்தில் பல ரகசிய அறைகள் மற்றும் ஆணுறைகள், கருத்தடை மாத்தி ரைகள் கைப்பற்றப்பட்டன. கூட்டத்தோடு கூட்டமாக வெளியேற முயன்ற சாமியார் ராம்பாலும் கைதுசெய்யப்பட்டார்.

இவர் மீது ஊர்மக்களை கொலை செய்தவழக்குடன் சேர்ந்து ஏற்கெனவே இரண்டு பெண்களைக் கொலைசெய்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப் பட்டது.

இதில் பெண்களைக் கொலைசெய்தது தொடர்பாக நடந்த வழக்கின் விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த 2 வழக்குகளில் சாமியார் ராம்பால் மற்றும் அவரது சீடர்களும்  குற்றவாளி என நீதி மன்றம் தீர்ப்பு கூறிய நிலையில், தற்போது ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில் சாமியார் ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 14 பேருக்கு பிரிவு 302, 343 மற்றும் 120பி கீழ் தண்டிக்கப்படு வதாக கூறி ஆயுள் தண்டனையுடன் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தர விட்டது.

சாதாரண விவசாயக்கூலியாக இருந்த சாமியார் ராம்பால் பிறகு வருமானவரித் துறை அலுவலத்தில் பணிபுரிந்து பிறகு தனது கனவில் கிருஷ்ணன் வந்து இனி உன்னுள் நான் இருக்கிறேன் என்று கூறிய தால் இவர் தன்னை கடவுளாக அறிவித்துக் கொண்டாராம்.

- விடுதலை ஞாயிறு மலர், 20.10.18

திங்கள், 29 அக்டோபர், 2018

பாலியல் வன்முறை : பூசாரி கைது

சூரத், அக்.26 குஜராத்தில், தாயின் மருத்துவ செலவுக்காக, பண உதவி கேட்டு வந்த பெண்ணை, பாலியல் வன்முறை செய்த பூசாரியை, காவல்துறையினர் கைது செய்தனர்.

குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சூரத் மாவட்டத்தில் உள்ள தபோலி என்ற இடத்தை சேர்ந்த கரண் ஸ்வரூப்தாஸ் பாபுபாய் சவானி, 24. இவர் சுவாமி நாராயண் கோவிலில், பூசாரியாக பணியாற்றி வந்தார். இதே பகுதியை சேர்ந்த, 20 வயது பெண், தன் தாயாரின் அறுவை சிகிச்சைக்காக, பண உதவி கேட்டு, பூசாரி கரண் ஸ்வரூப்தாஸை, சமீபத்தில் அணுகினார்.உதவி செய்வதாக வாக்குறுதி அளித்த கரண், அந்த பெண்ணை, பாலியல் வன்முறை செய்தார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு, வேறு எங்கும் உதவி கிடைக்காததால், நேற்று முன் தினம், மீண்டும் பண உதவி கேட்டு, கரணை சந்தித்தார்.அப்போது, இரண்டாவது முறையாக, அந்த பெண்ணை, கரண் ஸ்வரூப்தாஸ், பாலியல் வன்முறை செய்தார். இது பற்றி, அந்த பெண்ணின் பெற்றோர், காவல்துறையினர் புகார் அளித்தனர்.இதையடுத்து, கரண் ஸ்வரூப்தாஸை, காவல்துறையினர் கைது செய்தனர்.

-  விடுதலை நாளேடு, 26.10.18

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

பாலியல் வன்முறை சாமியார் கைது

மும்பை, ஆக.12  மகாராட்டிரா மாநிலம் தானேவில் உள்ள கோல் சேவாடி என்ற பகுதியில் வசிக்கும் பெண், தமக்கு அடிக்கடி தலைவழி வருவதாக தனது அண்டை வீட்டு தோழியிடம் கூறியுள்ளார். அதற்கு அப்பகுதியில் இருக்கும் கோவில் பூசாரி தீரா நோய்களையும் தீர்த்து வைப்பதாகவும், அவரை சென்று சந்திக்கும்படியும் தோழி அறிவுரை கூறியுள்ளார்.

இதையடுத்து, தனது கணவருடன் அந்த பெண் கோவில் பூசாரியை சென்று சந்தித்தார். கோவிலில் உள்ள ஒரு அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, அந்த பெண்ணின் கணவரை பூஜைக்கு வேண்டிய பழங்கள் வாங்கிவருமாறு சாமியார் உத்தரவிட்டு அனுப்பி வைத்துள்ளார்.

அதன்பிறகே அவரது உண்மை முகம் அந்த பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது. கணவர் சென்ற பிறகு அந்த பெண்ணிடம் தகாத  முறையில் நடந்திருக்கிறார் அந்த 77 வயது சாமியார்.

இதையடுத்து, அந்தப் பெண் அப்பகுதியில் இருந்த காவல்நிலையத் தில் புகார் அளிக்கவே, அந்த புகாரின் அடிப்படையில் அந்த சாமியார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இதுபோன்ற பூசாரிகளின் லீலைகள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

-  விடுதலை நாளேடு, 12.8.18

செவ்வாய், 24 ஜூலை, 2018

பாலியல் புகாரில் சிக்கிய பிரபல கோவில் அர்ச்சகர்

கோவா, ஜூலை 22 கோவாவில்  மங்கேஷ்கர் கோவில் உள் ளது. அங்கு பணிபுரியும் கோவில் அர்ச்சகர் வழி பாட்டுக்கு வந்த பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட தாக பெறப்பட்ட பாலியல் புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெறப்பட்ட பாலியல் புகாரின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை  அர்ச்சகர் கைது செய்யப் பட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், அந்த அர்ச்சகர்மீது 354ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த புகார் குறித்த விரிவான விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது என்றனர். அந்த அர்ச்சகர்மீது புகார் அளித்த இரண்டு பெண்களில் ஒருவர், அமெரிக்காவில் மருத்துவம் படித்து வருபவர். அவர் தெரிவித்த புகாரின் அடிப்படையில், பரிகார பூஜையின் போது தன்னிடம் அந்த அர்ச்சகர் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகத் தெரிவித்துள்ளார்.

 

- விடுதலை நாளேடு, 22.7.18

சனி, 21 ஜூலை, 2018

பாஜக ஆளும் அரியானாவில் 120 பெண்களிடம் பாலியல் கொடூரம்

சாமியார் அமர்புரி கைது

ஹிசார், ஜூலை 21 அரியானா மாநிலத்தில் பில்லு என்கிற சாமியார் அமர்புரி (வயது 60) என்பவர் தன்னிடம் பக்தியின் பெயரால் வந்த பெண்களில் 120 பேரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வந்தார். பாலியல் வன்முறைக் காட்சிப்பதிவை தன்னுடைய செல்பேசிமூலமாக பதிவு செய்து, அப்பெண்களை அச்சுறுத்தி தொடர்ச்சியாக பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். உள்ளூர் நீதிமன்ற உத்தரவின்பேரில் 5 நாள்கள் காவல்துறையினரின் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சாமியாரின் செல்பேசியில் பெண்களிடம் பாலியல் வன்முறை காட்சிகள் 120 இருந்தன. சாமியாருக்கு நெருக்கமான உறவினர் செல்பேசியை காவல்துறையினரிடம் அளித்ததைத் தொடர்ந்து, சாமியாரின் மோசடிகள், பாலியல் வன்முறைகள் வெளிச்சத்துக்கு வந்தன.
காவல்துறையினர் சாமியார்மீது வழக்குப்பதிவு செய்தனர். சாமியார் அமர்புரியை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி னார்கள். கைது செய்யப்பட்ட சாமியார் மனைவியை இழந்தவர். நான்கு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
காவல்துறையினருக்கு பணத்தை தர மறுத்துவிட்டதாலேயே தம்மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக சாமியார் அமர்புரி கூறுகிறார்.
துறவு நிலை என்பதைக் கடந்து, சாமியார்கள் என்றாலே, பணம், ஆடம்பரம், உல்லாசம் என்று ஆகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக சாமியார்களின் பாலியல் வன்முறைகள், குற்ற செயல்கள்  நாடு முழுவதும் பெருகிவருகின்றன.
- விடுதலை நாளேடு, 21.7.18

ஞாயிறு, 1 ஜூலை, 2018

பாலியல் தொந்தரவு பிஷப்மீது புகார்

திருவனந்தபுரம், ஜூலை 1 கிறிஸ்தவ மதத்தினர் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று கேரள மாநிலம். இங்கு சமீப காலமாக கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக, கேரள மாநிலம் கோட்டயம் காவல் நிலையத்தில் பிஷப் ஒருவர் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் பிஷப் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னியாஸ் திரியை பணியிடமாற்றம் செய்த தால் தம்மை பழிவாங்கும் நோக்கில் கன்னியாஸ்திரி தம் மீது புகார் அளித்துள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கு மாறும் கன்னியாஸ்திரி மீது பிஷப் ஒரு புகார் மனுவை அளித் துள்ளார்.

- விடுதலை நாளேடு, 1.7.18

திங்கள், 18 ஜூன், 2018

பெண் சீடரை பாலியல் வன்முறை செய்த வழக்கு பா.ஜ.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயாவுக்கு கைது ஆணை உ.பி. நீதிமன்றம் உத்தரவு

ஷாஜகான்பூர், மே 26 பெண் சீடரை பாலியல் வன்முறை செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின் மயானந்தாவுக்கு பிணையில் வெளிவரக் கூடிய கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பாஜ.வைச் சேர்ந்த முன் னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தா.உத்தரப்பிர தேசத்தை சேர்ந்த இவர், ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் மீது இவரது பெண் சீடர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார்.

அதில், சுவாமி சின்மயா னந்தா என்னை ஆசிரமத்தில் பாலியல் வன்முறை செய் தார்.இதில்கர்ப்பமானஎன்னை கருக்கலைப்பு செய்ய மிரட்டி னார் என கூறியுள்ளார்.  இந்த வழக்கில் காவல்துறை தன்னை கைது செய்யக் கூடாது என  அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சின்மயானந்தா தடை பெற்றி ருந்தார். இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநில அரசு சின்மயானந்தா மீதான பாலியல் வன்முறை வழக்கை திரும்பப் பெறுவதற்கான மனுவை நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கு  பாதிக்கப்பட்ட பெண் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. 

அப்போது அரசின் மனுவை நிராகரித்த நீதிபதி, சின்மயானந்தா மீது ஜாமீனில் வெளிவரக் கூடிய கைது ஆணையை பிறப்பித்தார். மேலும், இந்த வழக்கு விசா ரணைஜூலை12ஆம்தேதி நடைபெறும்போது,சின் மயானந்தாவை ஆஜர்படுத்த வேண்டும்  என நீதிபதி உத்தர விட்டார்.
- விடுதலை நாளேடு, 26.5.18

வெள்ளி, 15 ஜூன், 2018

ஆசிரமம் வந்த பெண்ணிடம் பாலியல் வன்முறை: சாமியார் தாதி மகராஜ்மீது வழக்கு

ஆசிரமம் வந்த பெண்ணிடம் பாலியல் வன்முறை:


சாமியார் தாதி மகராஜ்மீது வழக்கு


புதுடில்லி, ஜூன் 13 டில்லியில் ஆசிரமம் நடத்தி வரும் தாதி மகராஜ் எனும் சாமியாரும் அவரது சீடர்களும் சேர்ந்து, 25 வயது பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

டில்லியில் ஆசிரமம் நடத்தி வருபவர் தாதி மகராஜ். இவர், தனது ஆசிரமத்திற்கு வந்த 25 வயது பெண் ஒருவரை, தனது சீடர்களுடன் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக தொடர்ந்து அவரை மிரட்டி, டில்லி, ராஜஸ்தானில் உள்ளஆசிரமங்களிலும் தாதி மகராஜின் சீடர்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.


இதனால் மனநிலையும், உடல் நிலையும் பாதிக்கப்பட்ட அந்த பெண், தற்போது தனது பெற்றோருடன் சென்று தெற்கு டில்லியல் உள்ள பதேபூர் பெரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் தாதி மகராஜ் உள்ளிட்டோர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாதி மகராஜ், தன்னைத்தானே கடவுளாக அறிவித்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-  விடுதலை நாளேடு, 13.6.18

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

3 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்

அர்ச்சகரின் உதவியாளர் போக்சோ சட்டத்தில் கைது

சென்னை, ஏப்.23 சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் அப்பகுதியில் உள்ள கோவில் அர்ச்சகரின் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர், கோவிலுக்கு வந்த 3 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

குறிப்பிட்ட சிறுமி தினமும் கோவிலுக்கு செல்வார். திடீரென்று கோவிலுக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார். ஏன் கோவிலுக்குப் போக மறுக்கிறாய்? என்று அவரது பெற்றோர் கேட்டபோது, பூசாரி மாமா உதயகுமார் என்னிடம் தவறாக நடக்கிறார். அதனால் நான் கோவிலுக்குப் போக மாட்டேன் என்று சிறுமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் தந்தை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல்துறையினர் போக்சோ (சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்) சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து உதயகுமாரை விசாரித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மத்திய அரசு போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்முறை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை என்றும், அதனால் இப்போதைக்கு அந்த சட்டத்தின் கீழ் உதயகுமார்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் காவல்துறையினர்  தெரிவித்தனர். மேலும் உதயகுமார் மீது பாலியல் வன்முறை குற்றம் சாட்டப்படவில்லை என்றும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்

- விடுதலை நாளேடு, 23.4.18

செவ்வாய், 23 ஜனவரி, 2018

மந்திரவாதி கைது

புனே, ஜன.20  குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பெண்ணை பாலியல் வன்முறை செய்த மந்திரவாதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

சத்தாராவை சேர்ந்த 37 வயது பெண் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அந்த பெண் ணுக்கு தீராத நோய் பாதிப்பு இருந்துள்ளது. இந்தநிலையில் மந்திரவாதி ஹைதர் அலி என்பவர் அந்த பெண்ணுக்கு அறிமுகமானார். அவர் அந்த பெண்ணுக்கு இருக்கும் நோயை குணப்படுத்துவதாக கூறி, அவரின் வீட்டிற்கு அடிக் கடி வந்து சென்றார்.

சம்பவத்தன்று வழக்கம் போல பெண்ணின் வீட்டிற்கு வந்த ஹைதர் அலி, தான் வாங்கி வந்திருந்த குளிர்பானத் தில் மயக்க மருந்தை கலந்து அந்த பெண்ணிற்கு குடிக்க கொடுத்தார். அதைக் குடித்த பெண் மயங்கினார். இந்த  வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஹைதர் அலி, அந்த பெண்ணை பாலியல் வன்முறை செய்து அந்த காட்சி களை தனது செல்போனில் படம்பிடித்து உள்ளார்.

இந்தநிலையில் மந்திரவாதி ஹைதர் அலி அந்த ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி பெண்ணிடம் இருந்து 30 சவரன் தங்க நகைகளையும் பறித்து உள்ளார். இதனால் விரக்தியடைந்த அந்தப் பெண், சம்பவம் குறித்து அங்குள்ள காவல்  நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பெண்ணை பாலியல் வன் முறை செய்ததுடன், நகைகளை யும் பறித்த மந்திரவாதி ஹைதர் அலியை கைது செய் தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோ தனைக்கு அனுப்பி உள்ளனர்.

- விடுதலை நாளேடு, 20.1.18