வெள்ளி, 4 ஜனவரி, 2019

இளம்பெண்ணை கோயிலில் அடைத்து வைத்து பாலியல் வல்லுறவு!

அயோத்தியில் தலைமை அர்ச்சகர் கைது




அயோத்தி, ஜன.4 -அயோத்தியில், கோயிலுக்கு வந்த பெண்ணை உள்ளேயேஅடைத்துவைத்து, பலமுறை பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கிய சம்ப வம் நடந்துள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட தலைமை அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தி லுள்ள அயோத்தி, கோயில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி இங்குள்ள கோயில் ஒன்றுக்கு, வாரணாசியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் வழிபாட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்குள்ள தலைமை அர்ச்சகர், அந்தப் பெண்ணிடம் ஆன்மிகம் தொடர்பாக பேசிக் கொண்டே கோயிலில் இருந்த அறைக்குள் அழைத்துச் சென்று அடைத்துள்ளார். பின்னர் ஒருவாரமாக அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார். கடும் சித்ரவதையை அனுபவித்து வந்த அந்த இளம்பெண், செவ்வாய்க்கிழமையன்று கோயிலில் இருந்து தப்பி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரிடம் வாக்குமூலம் பெற்று, மருத்துவ பரிசோதனைகளை நடத்திய காவல்துறையினர், தலைமை அர்ச்சகரை தற்போது கைது செய்துள்ளனர்.

- விடுதலை நாளேடு, 4.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக