திங்கள், 29 அக்டோபர், 2018

பாலியல் வன்முறை : பூசாரி கைது

சூரத், அக்.26 குஜராத்தில், தாயின் மருத்துவ செலவுக்காக, பண உதவி கேட்டு வந்த பெண்ணை, பாலியல் வன்முறை செய்த பூசாரியை, காவல்துறையினர் கைது செய்தனர்.

குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சூரத் மாவட்டத்தில் உள்ள தபோலி என்ற இடத்தை சேர்ந்த கரண் ஸ்வரூப்தாஸ் பாபுபாய் சவானி, 24. இவர் சுவாமி நாராயண் கோவிலில், பூசாரியாக பணியாற்றி வந்தார். இதே பகுதியை சேர்ந்த, 20 வயது பெண், தன் தாயாரின் அறுவை சிகிச்சைக்காக, பண உதவி கேட்டு, பூசாரி கரண் ஸ்வரூப்தாஸை, சமீபத்தில் அணுகினார்.உதவி செய்வதாக வாக்குறுதி அளித்த கரண், அந்த பெண்ணை, பாலியல் வன்முறை செய்தார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு, வேறு எங்கும் உதவி கிடைக்காததால், நேற்று முன் தினம், மீண்டும் பண உதவி கேட்டு, கரணை சந்தித்தார்.அப்போது, இரண்டாவது முறையாக, அந்த பெண்ணை, கரண் ஸ்வரூப்தாஸ், பாலியல் வன்முறை செய்தார். இது பற்றி, அந்த பெண்ணின் பெற்றோர், காவல்துறையினர் புகார் அளித்தனர்.இதையடுத்து, கரண் ஸ்வரூப்தாஸை, காவல்துறையினர் கைது செய்தனர்.

-  விடுதலை நாளேடு, 26.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக