வெள்ளி, 19 அக்டோபர், 2018

2 கொலை வழக்கு சாமியார் ராம்பால் குற்றவாளி என தீர்ப்பு

ஹிசார், அக்.13 அரியானா மாநில அரசில் பொறியாளராக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் ஆன்மிகத்தில் இறங்கி சாமியார் ஆனவர் ராம்பால் (வயது 63). பர்வாலா என்ற இடத்தில் அவரது ஆசிரமம் அமைந் துள்ளது. நவம்பர் 19, 2014 அன்று சாமியாரின்  ஆசிரமத்தில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை கொலை செய்யப்பட்டது தொடர் பாக ராம்பால் மற்றும் அவரது  ஆதரவா ளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. நவம்பர் 2018 இல் ஒரு பெண் அவரது ஆசிரமத்தில் இறந்து கிடந்தது தொடர்பாக ராம்பால் மற்றும் அவர் ஆதரவாளர்கள் மீது  இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த கொலைகள்  தொடர்பான  வழக் கில் சாமியார் ராம்பால்  கைது செய்யப்பட்டு   சிறையில் அடைக்கப்பட்டார். ராம்பால் கைதானதை தொடர்ந்து காவல் துறையினருக்கும், சாமியாரின் ஆதரவா ளர்களுக்கும் இடையே நடை பெற்ற மோதலில் ஒரு குழந்தை, 5 பெண்கள் என மொத்தம் 6 பேர் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரம் தொடர்பாக சாமியாரின் ஆதரவாளர்கள் 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாமியார் செய்த கொலைகள் தொடர்பான வழக்கு  ஹிசார் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த   வழக்குகளில்  சாமியார் குற்ற வாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரம் குறித்த தீர்ப்பு அக் டோபர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் வழங்கப்படுகிறது.

முன்னதாக ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 27 பேரிடம்   நீதிமன்றம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தியது.

- விடுதலை நாளேடு, 13.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக