புதுடில்லி, அக்.17 அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பால் சிங்ஜடின்.அய்.டி.அய்.டிப்ளமோபட்ட தாரியான இவர் அரியானாவில் நீர்ப்பாசனத் துறை இளநிலைப் பொறியாளராகப் பணி யாற்றினார்.
திருமணமாகி மனைவி, 2 மகன், 2 மகள்கள் உள்ள நிலையில் திடீர் என்று ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு சாமி யாரானார். அரியானாவில் கரோதா கிராமத் தில் ஆசிரமம் தொடங்கினார். பின்னர் அரி யானா முழுவதும் ஆசிரமங்கள் தொடங்கி ஆன்மிக சேவை ஆற்றுவதாக கூறிக் கொண்டார்.
இவர் ஆன்மிகம் தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசினார். இதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் காயம் அடைந்தார். இதையடுத்து சாமியார் மீது கொலை, கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது. ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத் ததாகவும் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து காவல்துறை ராம்பால் மீது வழக்குப் பதிவு செய்து கடந்த 2014- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப் பட்டார். அப்போது ஏற்பட்ட மோதலில் 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை பலியானது.
ஹசார் நீதிமன்றத்தில் அவர் மீதான பல்வேறு வழக்குகள் தனித்தனியாக விசா ரிக்கப்பட்டு வந்தன. இதில் 2 வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார். கொலை மற்றும் பாலியல் வன்முறை வழக்கில் அவருக்கு ஹசார் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
சாமியார் ராம்பால் ஹசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற வழக்குகள் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
- விடுதலை நாளேடு, 17.10.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக