மும்பை, ஆக.12 மகாராட்டிரா மாநிலம் தானேவில் உள்ள கோல் சேவாடி என்ற பகுதியில் வசிக்கும் பெண், தமக்கு அடிக்கடி தலைவழி வருவதாக தனது அண்டை வீட்டு தோழியிடம் கூறியுள்ளார். அதற்கு அப்பகுதியில் இருக்கும் கோவில் பூசாரி தீரா நோய்களையும் தீர்த்து வைப்பதாகவும், அவரை சென்று சந்திக்கும்படியும் தோழி அறிவுரை கூறியுள்ளார்.
இதையடுத்து, தனது கணவருடன் அந்த பெண் கோவில் பூசாரியை சென்று சந்தித்தார். கோவிலில் உள்ள ஒரு அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, அந்த பெண்ணின் கணவரை பூஜைக்கு வேண்டிய பழங்கள் வாங்கிவருமாறு சாமியார் உத்தரவிட்டு அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பிறகே அவரது உண்மை முகம் அந்த பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது. கணவர் சென்ற பிறகு அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்திருக்கிறார் அந்த 77 வயது சாமியார்.
இதையடுத்து, அந்தப் பெண் அப்பகுதியில் இருந்த காவல்நிலையத் தில் புகார் அளிக்கவே, அந்த புகாரின் அடிப்படையில் அந்த சாமியார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இதுபோன்ற பூசாரிகளின் லீலைகள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- விடுதலை நாளேடு, 12.8.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக