பெண்களுக்கு பாலியல் தொல்லை : கோவில் அர்ச்சகர் நீதிமன்றத்தில் சரண்
பனாஜி, ஆக.23 பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தலைமறை வாக இருந்த கோவில் அர்ச்சகர், கோவா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
கோவா மாநிலத்தில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான, பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. வடக்கு கோவா மாவட்டம், மங்கேஷி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில், தனஞ்ஜய் பாவே, 51, அர்ச்சகராக இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன், மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த, இரண்டு பெண்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது, அர்ச்சகர் பாவே, தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, கோவில் நிர்வாகி களிடமும், காவல்துறையினரிடமும், இரு பெண்களும் புகார் செய்தனர்.
இதையடுத்து, அர்ச்சகர் பணியில் இருந்து, தனஞ்ஜய் பாவே நீக்கப்பட்டார். காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்த னர். இதையறிந்த பாவே, தலைமறைவானார். கோவா நீதிமன்றம் மற்றும் மும்பை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில், அர்ச்சகர் பாவே தாக்கல் செய்த முன்பிணை மனு தள்ளுபடி ஆனது. இதையடுத்து, கோவா முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று, தனஞ்ஜய் பாவே சரண் அடைந்தார். காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- விடுதலை நாளேடு, 23.8.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக