புதன், 12 செப்டம்பர், 2018

பாலியல் சர்ச்சை; பதவி துறந்தார் பிஷப்

ஆஸ்திரேலியாவில் ரோமன் கத்தோ லிக்க ஆர்ச் பிஷப்புகளில் முக்கியமானவர் பிலிப் வில்சன். அவர் 2 சிறுவர்களிடம் தகாத உறவை வைத்திருந்ததாகவும், சிறுவர்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவரை குற்றவாளி என்று விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறை யீட்டு மனு மீதான விசாரணை நிலுவை யில் உள்ளது. இதனால், பதவி விலக பிலிப் வில்சன் மறுத்து வந்தார்.


ஆர்ச் பிஷப் பிலிப் வில்சன் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆஸ்திரேலியாவில் வலுத்தது. இந்த விவகாரத்தில் போப் தலையிட வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கடந்த 19ஆம் தேதி வலியுறுத் தினார். இதனால், ஆர்ச் பிஷப் பதவியில் இருந்து பிலிப் வில்சன் எந்த நேரத்திலும் நீக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து தனது பதவி விலகல் கடி தத்தை போப்புக்கு பிலிப் வில்சன் அனுப்பி வைத்தார். இந்நிலையில், போப் பிரான்சிஸ் நேற்று வெளியிட்ட ஒருவரி அறிக்கையில், “ஆர்ச் பிஷப் பிலிப் வில்சன் பதவி விலகல் கடிதம் ஏற்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

(தினமலர் வேலூர் பதிப்பு: 28.7.2018)

- விடுதலை ஞா.ம., 25.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக