சென்னை, செப்.5 சென்னை மண்ணடியில் கோயிலுக்கு வந்த மாணவியிடம் அர்ச்சகர் பாலியல் தொல்லைக் கொடுத்ததால் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
சென்னை முத்தியால் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாணவி ஒருவர் (வயது 15) அருகில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படிக்கிறார். சுஜாதாவுக்கு கட வுள் பக்தி அதிகமாம். வாரத்தில் பெரும்பாலான நாள்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கங்கையம்மன் கோயிலுக்கு வருவாராம்.
மாணவி கோவிலுக்கு வரும்போதெல்லாம் அங்குள்ள அர்ச்சகர் நடராஜ் பூஜை செய்து பிரசாதம் வழங்குவது வழக்கமாம். அர்ச்சகர் என்ற மரியாதையுடன்சுஜாதா அவரு டன் பழகி வந்தார். அடிக்கடி பார்த்து பழகியதால் சாதார ணமாக பழகி வந்துள்ளார்.
சுஜாதாவிடம் அன்பாக பழகி அவரது மதிப்பைப் பெற்ற நடராஜுக்கு தவறான எண்ணம்உருவாகியது. இதையடுத்து சுஜாதாவை வழியில் சந்திப்பது போல் நடித்து சாதாரணமாக பேசுவது போல் நடித்து, கோவிலுக்கு அருகில் உள்ள கட்டடம் ஒன் றிற்கு அழைத்துச் சென்று பேசி யுள்ளார்.
பழகியவர்தானே என்று சென்ற சுஜாதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. தனியான இடம் என்றவுடன் பாலியல் வன்முறையில்ஈடுபடமுயன் றுள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த சுஜாதா அவரிடமிருந்து தப்பி தனது வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் நடந்ததைக் கூறி யுள்ளார்.
அர்ச்சகரின் நடத்தை குறித்து மாணவியின் பெற்றோர்துறை முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கை விசாரித்த காவல்துறையினர் அர்ச்சகர் நடராஜன்மீது தவறு உள்ளது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அர்ச்சகர் நட ராஜனை காவல்துறையினர்
- விடுதலை நாளேடு, 5.9.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக