ஆசிரமம் வந்த பெண்ணிடம் பாலியல் வன்முறை:
சாமியார் தாதி மகராஜ்மீது வழக்கு
புதுடில்லி, ஜூன் 13 டில்லியில் ஆசிரமம் நடத்தி வரும் தாதி மகராஜ் எனும் சாமியாரும் அவரது சீடர்களும் சேர்ந்து, 25 வயது பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.
டில்லியில் ஆசிரமம் நடத்தி வருபவர் தாதி மகராஜ். இவர், தனது ஆசிரமத்திற்கு வந்த 25 வயது பெண் ஒருவரை, தனது சீடர்களுடன் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக தொடர்ந்து அவரை மிரட்டி, டில்லி, ராஜஸ்தானில் உள்ளஆசிரமங்களிலும் தாதி மகராஜின் சீடர்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனநிலையும், உடல் நிலையும் பாதிக்கப்பட்ட அந்த பெண், தற்போது தனது பெற்றோருடன் சென்று தெற்கு டில்லியல் உள்ள பதேபூர் பெரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் தாதி மகராஜ் உள்ளிட்டோர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாதி மகராஜ், தன்னைத்தானே கடவுளாக அறிவித்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- விடுதலை நாளேடு, 13.6.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக