#பாவமன்னிப்பு_கேட்க_வந்தபெண்ணை
#கூட்டு_வன்புணர்ச்சி !
நடந்தது என்ன ??
*
(வன்புணர்சிக்குட்ப்பட்ட)அந்தப் பெண் அன்றைய தினம் பாவ மன்னிப்பு கேட்பதற்காக திருவனந்தபுரத்தில் அருகே உள்ள பந்தனம்திட்டா வருகிறார்..
*
அங்குள்ள சிரியன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சிற்குச் செல்கிறார்.இவர் இப்பிரிவைச் சேர்ந்தவர்!
*
திருமணத்திற்கு முன்பு தனக்கும் ஒரு சர்ச் ஃபாதருக்கும் தகாத உறவு இருந்தது , தற்போது எனக்கு திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
*
அன்று நடந்த பாவம்,என் மனதை வாட்டுவதால் ,பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று, பாவமன்னிப்புக் கூண்டில் இருந்த பத்தனம்திட்டா சர்ச் ஃபாதரிடம் கூறுகிறார்.
*
அங்கிருந்த ஃபாதர் பாவ மன்னிப்பு கோரிய பெண்னின் முழுக் கதையும் கேட்டு கொண்ட பின்னர் , உன் பாவங்கள் மண்னிப்பட்டது. ஆனாலும், என்னோடு ஒத்துழைத்து அதை முழுமையாக போக்கி கொள் என்கிறார்.
*
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்து, மறுத்த பெண்ணிடம், ஒத்துழைப்பு தரவில்லை என்றால், இதையெல் லாம் அப்படியே உன் கணவரிடம் சொல்லி விடுவேன் எனக் கூறுகிறார்.பயத்தில் அப்பெண்னும் சம்மதிக்கிறார்.
*
தன் ஆசையை தீர்த்துக் கொண்ட பின், அப்பெண்னின் பயத்தை சாதகமாக்கி,
தன் சக பாதிரிகள் 6 பேருக்கும் படுக்கையை பங்கிட்டுக் கொடுக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.
*
இப்படியாக 6 பாதிரிகள் மற்றும் அவர்களுடைய 2 நண்பர்கள் என 8 பேருக்கு விருந்தளிக்கப்படுகிறது அப்பெண்னின் கற்பு.
*
இறுதியாக ஒருவருக்கு ஒத்துழைப்பு தந்த பின்,உன்னை தொந்தரவு செய்ய மாட்டோம் என வாக்களிப்பட்டதால்,
*
மேலும் ஒரு பாதிரியார் 9வது நபராக டில்லியில் இருந்து அவசரமா கேரளா வந்துள்ளார்.
*
அந்த பாதிரியின் சொல்படி குறிப்பிட்ட லாட்ஜில் அப்பெண் வர வழைக்கப்பட்டுள்ளார்.
*
வேறு வழியின்றி அங்கு சென்ற அந்த பெண்ணிடம் எல்லாவற்றையும் முடித்து விட்டு, அந்த பெண்ணோட வங்கி அட்டையை வைத்தே, லாட்ஜ் வாடகை செலுத்தியுள்ளார்,சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட டெல்லி பாதிரியார்.
*
பணம் எடுத்த மெசேஜ் அந்த பெண்ணோட கணவன் மொபைலுக்கு குறுஞ்செய்தியாக சென்றுள்ளது.
*
அப் பெண்னின் கணவர் பணம் என்ன காரணத்திற்காக எடுக்கப்பட்டதென விசாரித்துள்ளார். சரியான பதிலை தராத மனைவியை அடித்து விசாரித்துள்ளார். விபரம் அறிந்ததும், காவல் துறை செல்லவில்லை அப்பெண்ணின் கணவர்.
*
ஏன் ?திருச்சபை புகழ் கெட்டுவிடுமாம்?அதனால் திருச்சபை பேராயரை சந்தித்து,ஆதாரங்களோடு புகார் செய்திருக்கிறார்!
*
ஒழுக்கம் தவறும் சில பாதிரிமார்களால், அனைத்து பாதிரிமார்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படும் என்பதால், அந்த சர்ச்சின் நிர்வாகம்,பாவிகள் அனைவரையும் நீக்கியதுடன், மேலும் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள்!
*
தன் திருமணத்திற்கு முன் தெரியாமல் செய்த ஒரு பாவத்தைப் போக்க சென்ற இடத்தில்,ஒன்பது பாவங்கள் அவரைத் தொற்றிக் கொண்டது.
*
தற்போது பரிதாபமாக நிற்கும் இந்தப் பெண்னின் பாவத்திற்கு , யார் பொறுப்பு?
*
தேவனால் எல்லாம் கைகூடும் போது,பாவத்தை,மனிதன் எப்படி மன்னிக்க முடியும்.
*
எல்லா மதங்களிலும் இத்தகைய அவலம் நடக்கிறது.மக்களே மதத்தை உதறித் தள்ளுங்கள்.மதம் ஒரு ஆணியும் புடுங்காது.
*
இந்துமத சாமியார்கள், பாவமன்னிப்பு வழங்கும் பாதிரியார்கள்,மௌலவிகள் எவரையும் நம்ப வேண்டாம்.
*
பக்தி இருந்தால் கடவுளை மட்டும் கும்பிடு!இல்லையேல் இதையும் விட்டுவிடு!
*
எல்லா மதங்களும் மக்களால் கைகழுவப்படும் காலம் விரைந்து வரட்டும்!
தோழர் பொன்னுசாமி தமிழன்.
- கட்செவி பதிவு
திங்கள், 2 ஜூலை, 2018
பாதிரியார்களின் வன்புணர்ச்சி !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக