செவ்வாய், 24 ஜூலை, 2018

மதக்கலவரத்துக்கு வித்திடும் சாமியார்!

அய்தராபாத்துக்குள் நுழைய


ஆறு மாதத்துக்கு  தடை : காவல்துறை அறிவிப்பு




அய்தராபாத், ஜூலை 16 அய்தராபாத் நகரில்   சிறீ பீடம் சுவாமி பரிபூர்னானந்தா   காவல் துறையினரால் கடந்த இரண்டு நாள்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அய் தராபாத் நகருக்குள் நுழைய அவருக்கு ஆறு மாதத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஆணையர் அஞ்ஜனி குமார்


தெலங்கானா மாநில சமூக விரோத மற்றும் இடையூறு தடுப்புச்சட்டம் 1980 இன்படி, அய்தராபாத் காவல்துறை ஆணையர் அஞ்ஜனி குமார் இந்த ஆணையை வெளியிட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன் னதாக சினிமா விமர்சகர் கேதி மகேஷ் ராமன், சீதை குறித்து விமர்சித்திருந்தார். அவர் விமர்சனம் இந்து மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக எழுந்த புகாரில், அய்தராபாத் நகருக்குள் அவர் செல்வதற்கு ஆறு மாத கால தடையை காவல்துறை விதித்திருந்தது.

காவல்துறை ஆணை


தற்பொழுது  சிறீ பீடம் சுவாமி பரி பூர்னானந்தாவுக்கு அதேபோன்று அய் தராபாத் நகருக்குள் நுழைய ஆறுமாத காலத்துக்கு காவல்துறை தடைவிதித்து காவல்துறை ஆணை வெளியிட்டுள்ளது.

ராமன், சீதைகுறித்து கேதி மகேஷ் வெளியிட்ட கருத்துக்கு எதிராக சிறீ பீடம் சுவாமி பரிபூர்னானந்தா தர்மிகா சைதன்ய யாத்திரை எனும் பெயரில் பயணம் தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார். அய்தராபாத் நகருக்கு வெளியே பொட்டுப்பால் பகுதியிலுள்ள சிவன் கோயிலிலிருந்து  யதாத்ரி வரை மூன்று நாள்கள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக சாமியார் அறிவித்திருந்தார்.

மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத் ரேயா, சட்டமன்ற உறுப்பினர் சிந்தாலா ராமச்சந்திரா ரெட்டி உள்ளிட்ட பாஜகவினர் சாமியாரின் பயணத்தில் கலந்துகொள்ள இருந்தார்கள். பாஜக, விசுவஇந்து பரி ஷத் உள்ளிட்ட பிற அமைப்புகளும் பங் கேற்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவ்வமைப்பினர்மீது காவல்துறை நட வடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

சாமியார்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறித்து காவல்துறையினர் கூறுகையில், 2017 ஆம் ஆண்டு ராஷ்டிரிய இந்து சேனா என்கிற பெயரில் ஓர் அமைப்பை நிறுவி, தெலங்கானா மாநிலத் தின் பல்வேறு பகுதிகளில் கூட்டங்களை நடத்தி மோசமாக பேசிவந்தார் என்று கூறினார்கள். தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான போஷ் ஜூப்ளிஹில்ஸ் இல்லத்தில் தங்கியிருந்த சாமியார் கலவரத்தை தூண்டதிட்டமிடுவதாகஅவரைகாவல் துறையினர் இரண்டு நாள்களாக வீட்டுக் காவலில் சிறை வைத்தனர். மேலும், அவரை ஆந்திரப்பிரதேச மாநிலம் காக்கி நாடா பகுதியில் உள்ள ஆசிரமத்தில் கொண்டு போய்விடவும் காவல்துறை முடிவெடுத்தது.

- விடுதலை நாளேடு, 16.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக