வாடிகன்சிட்டி, ஜூலை 10_ மேலை நாடுகளில் சில கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் பிஷப்களால் செக்ஸ் குற்றத்துக்கு ஆளாகி பல சிறுவர் சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வெளி யாகி இருந்தன. அவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவர் _சிறுமிகளிடம் போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டார்.
வாடிகன் சிட்டியில் நேற்று அவர் பிரார்த்தனை கூட்டம் நடத்தினார். அதில் பாதிரியார்களின் செக்ஸ் குற்றத்தால் பாதிக் கப்பட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் நீண்ட உரை யாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பாதிரியார்களின் செக்ஸ் குற்றத்தை மறுந்து விடும்படி உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் உங்களுக்கு செய்த கொடுமைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அதற்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். இருந்தாலும் அவர்கள் செய்த குற்றத் தையும் பாவச் செயல்க ளையும் விட்டு விடுங்கள். அவர்களின் செயலுக்காக உங்களிடம் நான் மன் னிப்பு கேட்டுக் கொள்கி றேன்.
செக்ஸ் குற்றத்தால் பாதிக்கப்பட்டு அதற்கு அடிமையானவர்கள் மற் றும் தற்கொலை செய்தவர் களை நினைக்கும்போது மிகுந்த மனவேதனையாக உள்ளது என்றார்.
பிரார்த்தனையின்போது அவர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். அது ஸ்பெ யினில் மொழி பெயர்க்கப் பட்டது.
-விடுதலை,10.7.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக