மைசூரு, டிச.10 உன்சூர் அருகே புதையல் இருப்பதாகக் கூறி விவசா யியிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த மந்திரவா தியை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப் படுவதாவது:
மைசூரு அருகே கெத் தனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகாதேஷ் (வயது 46). இவர் தன்னை மந்திரவாதி என்று கூறிக் கொண்டு அந்தப் பகுதி மக்களிடம் பில்லி, சூனி யம் எடுக்க பூஜை செய்வ தாக கூறி வந்தார். இதற் கிடையே கடந்த 2 மாதங் களுக்கு முன்பு மகாதே சுக்கு, மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா ஆஸ் வாலு கிராமத்தை சேர்ந்த குமாரசாமி என்ற விவ சாயியுடன் பழக்கம் ஏற் பட்டது. இந்த பழக்கத்தை வைத்து மகாதேஷ், குமாரசாமியின் குடும்பப் பிரச்சினை, சொத்து விவ ரங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டார்.
இந்த நிலையில் மகா தேஷ், குமாரசாமியின் விவசாய தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும், அந்த புதையலை எடுக்க நிறைய பூஜைகள் நடத்த வேண்டும் என்றும், அந்த புதையலை எடுக்காமல் விட்டுவிட்டால் குடும்பத் தினர் உயிருக்கு ஆபத்து என்றும் குமாரசாமியிடம் கூறியுள்ளார். இதனால் அவரும் புதையலை எடுக்க பூஜை நடத்த சம்மதம் தெரிவித்தார்.
அதன்படி அடிக்கடி லட்சக்கணக்கான ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு குமாரசாமியின் நிலத்தில் உள்ள புதையலை எடுக்க மந்திரவாதி மகாதேஷ் தனது வீட்டிலேயே பூஜை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட் கிழமை இரவு குமாரசாமி யின் தோட்டத்திற்கு சென்ற மகாதேஷ், தானே ஒரு பழைய குடத்தை ஒரு இடத்தில் புதைத்து வைத் துள்ளார். மறுநாளான நேற்று முன்தினம் (செவ் வாய்க்கிழமை) மகாதேஷ், குமாரசாமியின் தோட் டத்திற்கு சென்று பூஜை நடத்தினார். அப்போது குமாரசாமியும், அவரது உறவினர்களும் அங்கு இருந்தனர். அந்த சமயத் தில் தோட்டத்தில் ஒரு இடத்தை காண்பித்து இங்கு புதையல் இருப்ப தாக மகாதேஷ் கூறியுள் ளார்.
ஆனால் அந்த இடத் தில் ஏற்கனவே குழி தோண்டி மணல் மூடப் பட்டிருந்தது. இதனால் குமாரசாமிக்கும் அவரது உறவினர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் அந்த இடத்தில் குழி தோண்டி பார்த்தனர். அங்கு ஒரு பழைய குடம் மட்டும் இருந்தது. அதில் புதையல் இல்லை. இந்த சம்பவம் அந்தப் பகுதி மக் களுக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து குமார சாமி, மகாதேசிடம் கேட் டுள்ளார். அதற்கு நீங்கள் பூஜை நடத்தும் போது சுத்தமாக இல்லை. இத னால் புதையல் கிடைக் காமல் போய்விட்டதாக கூறி, அங்கிருந்து புறப் பட்டுச் சென்றார். அப் போது குமாரசாமியின் பக்கத்து தோட்டத்துக் காரர் ஒருவர் அங்கு வந் தார். அவர், திங்கட் கிழமை இரவு மந்திரவாதி மகாதேஷ் இங்கு வந்து குழி தோண்டி குடத்தை புதைத்து வைத்ததை குமாரசாமியிடம் தெரிவித் தார். அப்போது தான் மந்திரவாதி மகாதேஷ், புதையல் இருப்பதாக கூறி பணம் பறித்து வந்தது அவருக்கு தெரியவந்தது.
இதனால் ஆத்திர மடைந்த குமாரசாமி, அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மந்திர வாதி மகாதேசை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை பிளி கெரே காவல் நிலையத் தில் ஒப்படைத்தனர். அவரை காவல் நிலையத் தில் கைது செய்தனர்.
மேலும் குமாரசாமி, பிளிகெரே காவலர் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், மந்திரவாதி மகாதேஷ் எனது தோட் டத்தில் புதையல் இருப்ப தாகவும், அந்த புதையலை எடுக்க பூஜை செய்வதாக கூறி ரூ.6 லட்சம் வரை வாங்கி மோசடி செய்துள் ளார் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, கைதான மகாதேசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் குமாரசாமி, பிளிகெரே காவலர் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், மந்திரவாதி மகாதேஷ் எனது தோட் டத்தில் புதையல் இருப்ப தாகவும், அந்த புதையலை எடுக்க பூஜை செய்வதாக கூறி ரூ.6 லட்சம் வரை வாங்கி மோசடி செய்துள் ளார் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, கைதான மகாதேசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-விடுதலை,10.12.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக