வெள்ளி, 11 டிசம்பர், 2015

குழந்தை வரத்திற்கு நள்ளிரவு பூஜையாம் பெண் வன் புணர்ச்சி: இருவர் கைது



சிவகங்கை, பிப். 27_ சிவ கங்கையில், குழந்தை வரத் திற்கு இரவில் சிறப்புப் பூஜை நடத்தி, பெண்ணை வன் புணர்ச்சி செய்தது தொடர்பாக இருவரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
சிவகங்கை அருகே, அல்லூர் பெண்ணிற்கு திரு மணமாகி மூன்றாண்டு களாக குழந்தை இல்லை. ஜோசியத்தில் கணவருக்கு நேரம் சரியில்லை என அறிந்து சிறப்புப் பூஜைக்கு ஏற்பாடு செய்தனர்.
தேவகோட்டை அருகே பில்லி, சூனியம் செய்யும் கணவரின் தூரத்து உறவின ரான எழுவன் கோட்டை விசுவநாதன் வயது 50, அவரது நண்பர் ஜெபஸ் திராஜ் (வயது 45) ஆகி யோர் பிப்., 19இல் அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். அன்றிரவு 10.30 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூஜையின்போது, கணவர் எதிரில் மனைவி இருக்கக்கூடாது என விசுவநாதன் கூறியதால் பெண்ணை கண்மாய் கரைக்கு அழைத்துச் சென்று ஜெபஸ்திராஜ் பாலியல் வன்முறை செய் துள்ளார்.
காவல்துறையினர் விசாரணையில் இருவரும் செய்த சதியில் பெண் வன் புணர்ச்சி செய்யப்பட்டது தெரிந்தது. வேறொரு பெண்ணுக்கு சிறப்பு பூஜை நடத்தவேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் ணின் கணவர் மூலம் இருவரையும் வரவழைத்த காவல்துறையினர் அவர் களை கைது செய்தனர்.
-விடுதலை,27.2.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக